ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... மழைக் காலம் ஆரம்பிச்சிடுச்சு. தூறலும் குளிர் காற்றும் சேர்ந்து மாலை நேரத்தை ரம்மியம் ஆக்குது. பள்ளி முடிந்து வந்ததும், சுவையாக எதையாவது சாப்பிடத் தோணும். அது, சத்தான சிற்றுண்டியாக இருந்தால் இன்னும் ஜோரா இருக்குமே. வாங்க செய்யலாம்!

தேவையானவை:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பாசிப் பருப்பு - 100 கிராம், துருவிய தேங்காய் - 50 கிராம், வெல்லம் (பொடித்தது) - 50 கிராம், உப்பு - தேவையான அளவு, மிளகுத்தூள் - சிறிதளவு.
செய்முறை:

பாசிப் பருப்பை சுமார் 3 மணி நேரம் நன்றாக ஊறவைக்கவும். பயறு எளிதில் உடையும் பதத்தில் இருக்க

வேண்டும். பிறகு, தண்ணீரை வடித்துவிடவும். பயற்றுடன் துருவிய தேங்காய், பொடித்த வெல்லம், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும். அவ்வளவுதான், இனிப்பும் கொஞ்சம் காரமும் கலந்த ஸ்வீட் மூங்தால் ரெடி.
குறிப்பு:
• பாசிப் பருப்பில் வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து, முழுமையான காரச் சுவையிலும் செய்யலாம்.
• அடுப்பைப் பற்றவைக்கும் வேலையே இல்லை. சீரான உடல் வளர்ச்சிக்கு ஏற்ற சிற்றுண்டி.
- பிரியா பாஸ்கர் படங்கள்: பா.காளிமுத்து
மாடல்: ஷ்யாம் ஃபெர்னாண்டஸ்