Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

Published:Updated:

கூகுள் பாய்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் நகரில் வசிக்கும் ஐந்து வயதுச் சிறுவன் அன்மோல் சுவாமி, தன் புத்திக்கூர்மையால் பிரபலம் அடைந்துள்ளான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம் நாட்டின் பிரதமர்கள் பெயர்களைக் கேட்டால்,  ஜவஹர்லால் நேரு முதல் நரேந்திர மோடி வரை அனைத்துப் பிரதமர் பெயர்களை வரிசைப்படியும், பின்னிருந்து முன்னோக்கியும் சொல்கிறான். உலக நாடுகள் அனைத்தையும் அதன் தலைநகரங்களையும் சொல்லி அசத்துகிறான்.

கடந்த பிப்ரவரி மாதம் மீரட் நகரின் அனைத்துப் பள்ளிகளும் இணைந்து, ‘மீரட்டின் கூகுள் பாய்’ என்ற பட்டத்தை அன்மோல் சுவாமிக்கு அளித்துச் சிறப்பித்தன.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

வேம்பின் அருமை!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

மனிதர்களுக்கு மட்டும்தான் வேம்பின் மருத்துவக் குணம் தெரியுமா என்ன? சமீபத்தில், ஆயிரக்கணக்கான சிட்டுக்குருவிகளை ஆராய்ச்சி செய்ததில், அவைகள் அனைத்தும் வேப்பமரத்து இலை-குச்சிகளால் நேர்த்தியாகக் கூடு கட்டியிருப்பது கண்டறியப்பட்டது. மகத்தான மருத்துவக் குணம்கொண்ட வேப்பிலையின் கசப்பான நெடிக்கு முட்டைகளையோ, குஞ்சுகளையோ வைரஸ் கிருமிகள் நெருங்குவது இல்லை. ஆகவேதான் சிட்டுக்குருவிகள் வேப்பிலையால் கூடுகளைக் கட்டுகின்றன என்பது தெரியவந்துள்ளது. சிறந்த கிருமிநாசினியான வேப்ப மரம் நடுவதற்கு நீங்க ரெடியா?

சுட்டி ஸ்டார் நியூஸ்!

செல்ஃபி ஸ்பூன்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

செல்ஃபி ஸ்டிக் பார்த்திருப்பீர்கள். செல்ஃபி ஸ்பூன் பார்த்தது உண்டா? தங்களது நொறுக்குத் தீனியைப் பிரபலப்படுத்த எண்ணிய அமெரிக்காவின் ‘ஜெனரல் மில்ஸ் நிறுவனம்’  தயாரித்து இருப்பதுதான், ‘செல்ஃபி’ ஸ்பூன்.

செல்ஃபி குச்சியின் ஒரு முனையில் செல்போனைப் பொருத்திவிட்டு, மறு முனையில் உள்ள ஸ்பூன் மூலம், நாம் உணவு உண்பதைப் படம் பிடிக்கலாம்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

நீரில் நடக்கும் பல்லி!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

பாசிலிஸ்க்(Basilisk )எனப்படும் பச்சை நிறப் பல்லியினால், தண்ணீரில் நடக்க முடியும். இது, மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் மழைக் காடுகளில், ஆறுகள் மற்றும் ஓடைப் பகுதிகளில் வாழ்கின்றன. இது, நீரில் மூழ்காமல் நடக்கும். எப்படி என்றால், இந்த வகைப் பல்லியின் கால்கள், தன் எடையைச் சமமாக நீரில் பரப்பும். மிக வேகமாகச் செல்லும். 400 மீட்டர் நீளம் உள்ள ஏரியையும் மூழ்காமல் கடந்துவிடும். இந்த பச்சைப் பல்லியின் வாலின் நீளம், உடலில் முக்கால் பங்கு இருக்கும். பூச்சி, எறும்பு, முட்டை மற்றும் சிறு மீன்களை உட்கொள்ளும்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

பயிர் ஓவியம்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

அமெரிக்காவில் உள்ள ‘ஸ்டேன் ஹெர்டு’ என்ற ஓவியர், நெதர்லாந்தின் புகழ்பெற்ற வின்சென்ட் வில்லியம் வான்கா (Vincent Willam Van Gogh) ஓவியத்தை நிலத்தில் வரைய விரும்பினார். இதற்காக, 1.2 ஏக்கர் நிலத்தைத் தேர்ந்தெடுத்து, மண் மற்றும் பாறைகளோடு ஆலிவ் மரங்கள், செடிகளை வளர்த்து, லைவ் ஓவியமாக உருவாக்கியுள்ளார். அதோடு, சில காய்கறிகளையும் அழகாகப் பயிரிட்டுள்ளார். இதற்கு, ஆறு மாதங்கள் ஆனதாம். இதை, நிலத்தில் இருந்து பார்த்தால் தெரியாது. விமானம் மூலம் பறந்தோ அல்லது உயரமான மலையில் இருந்தோ  பார்த்தால், நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

பொம்மைகள் அருங்காட்சியகம்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

புது டெல்லியில் உள்ள நேரு ஹவுஸ், பகதூர் ஷாஜாபர் மார்க்கில் அமைக்கப்பட்டுள்ளது, ‘ஷங்கர் சர்வதேச பொம்மைகள் அருங்காட்சியகம்’ (Shankar’s International Dolls Musum). 1965-ல் தொடங்கப்பட்ட  இதன் பரப்பளவு 5,184 சதுர அடிகள். இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில், 85 நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 6,500 பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.  ஓர் அறையில் ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இருந்து சேகரித்த பொம்மைகளும், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து வாங்கியவை மற்றொரு அறையிலும் உள்ளன. குழந்தைகளை குதூகலிக்கச் செய்யும் கனவு உலகமாக இந்தப் பொம்மை அருங்காட்சியகம் உள்ளது.

சுட்டி ஸ்டார் நியூஸ்!