ஒரு தேதி...ஒரு சேதி!

தீபாவளி போன்ற பண்டிகைகள் வந்தால், நாவுக்குச் சுவையான இனிப்புகள் சாப்பிடுவோம்.  செவிக்குச் சுவையான செய்திகளும் வேண்டும் அல்லவா? உங்களுக்காகவே சுவையான, சுவாரஸ்யமான செய்திகளைத் தருகிறது, ‘ஒரு தேதி... ஒரு சேதி!’

விராட்  கோலி:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு தேதி...ஒரு சேதி!

ஞ்சி போட்டிகளில் ஆடிக்கொண்டிருந்தபோது, தந்தை இறந்துவிட்ட செய்தி வருகிறது. பொங்கி வரும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கிரிக்கெட் மைதானத்துக்குச் செல்கிறார். அன்றைய ஆட்டத்தை ஆடி, சரிவிலிருந்து தன் அணியை மீட்கிறார். கிரிக்கெட்டில் சிம்ம சொப்பனமாகத் திகழும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில், 86 பந்துகளில் 133 ரன்களைக் குவித்து, எட்ட முடியாது என நினைத்த 321 ஸ்கோரை எட்டி, வெல்வதற்குக் காரணமானார். இவரின் கடின உழைப்பே, இன்று இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் கேப்டனாக உயர்த்திருக்கிறது. இவரைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள வேண்டுமா?

ஜவஹர்லால் நேரு: 

ஒரு தேதி...ஒரு சேதி!

வர் அளவுக்கு குழந்தைகளை நேசித்த இந்தியப் பிரதமர் வேறு யாரும் இல்லை. அதனாலேயே, இவரின் பிறந்த நாளை நாம் குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகிறோம். பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்து இருந்தாலும், இந்தியாவின் விடுதலைக்காகப்  பல நாட்கள் சிறைக் கொடுமைகளை அனுபவித்தவர். இந்தியா விடுதலை அடைந்த பிறகு, நாட்டை வழிநடத்தும் முக்கியப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். இவரைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்!
 
சானியா மிர்சா: 

ஒரு தேதி...ஒரு சேதி!

று வயதாக இருக்கும்போது, தன் பிஞ்சுக் கைகளில் டென்னிஸ் பேட்டை ஏந்தியவர். இடைவிடா பயிற்சியும் ஆர்வமும் இவரை உலகமே திரும்பிப் பார்க்க வைத்தது. தோல்விகள், சர்ச்சைகள், விமர்சனங்களிலும் தனக்கான பாடம் கற்றவர். எந்த நிலையிலும் சோர்வு அடையாமல், சீறி வருவது இவரின் சிறப்பு. புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தின் தூதுவராக இவர் நியமிக்கப்பட்டிருப்பது பலரின் புருவங்களை உயர்த்தியது. இவரைப் பற்றி இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. 

ஒரு தேதி...ஒரு சேதி!


 
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism