ஒருநாள் என்பது, ஏதாவது ஒரு விஷயத்தைப் புதிதாக நாம் தெரிந்து கொள்ளும்போதே முழுமை அடைகிறது. தினந்தோறும் ஒலிக்கும் ‘ஒரு தேதி... ஒரு சேதி’ கேளுங்கள். உங்களின் ஒவ்வொரு நாளும் முழுமை அடையும்.

ஜெ.சி.குமரப்பா:

உங்களில் பலர் இவரை அறிந்திருக்க மாட்டீர்கள். இந்தியப் பொருளாதாரச் சிந்தனையாளர்களில் முக்கியமான ஒருவர். அமெரிக்காவில் இவர் படிக்கும்போதே, இந்திய மக்களின் வறுமைக்கு என்ன காரணம் என ஆராய்ந்தவர். இந்தியாவுக்கு வந்த இவர், காந்தியடிகளைச் சந்தித்தது முக்கியமான நிகழ்வு. இவரின் அறிவாற்றலைக் கண்ட காந்தி, குஜராத் மக்களின் வறுமையை ஆய்வுசெய்ய அனுப்பிவைத்தார். இறுதி வரை காந்தியக் கொள்கைகளை உயர்த்திப் பிடித்தபடியே வாழ்ந்த குமரப்பா பற்றி நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

வி.பி.சிங்:

இந்தியப் பிரதமர்களின் தனித்த இடம் இவருக்கு உண்டு. நாட்டில் சமூகரீதியாக ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க, தைரியமாக சில முடிவுகளை எடுத்தவர். நேர்மையான அரசியல்வாதியாகத் திகழ்ந்தார். இவர் நல்ல கவிஞரும்கூட. ‘ஒரு துளி வானம், ஒரு துளி கடல்’ எனும் இவரது கவிதை நூல், வாசகர்கள் இடையே புகழ்பெற்றது. இவரைப் பற்றிய மேலும் செய்திகளை அறிந்துகொள்ள ஆவலா?

வ.உ.சிதம்பரம்:

இந்தப் பெயரில் தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான தெருக்கள் இருக்கும். அந்த அளவு மரியாதைக்குரியவர். இந்திய நாட்டுக்காகப் போராடியவர். ‘செக்கிழுத்த செம்மல்’ எனும் புகழுக்கு

உரியவர். வசதியான குடும்பத்தில் பிறந்து, சட்டம் படித்தவர். சொகுசாக வாழும் வாழ்க்கை இருந்தும், இந்திய நாட்டுக்காக சிறை சென்று, துன்பப்பட்டவர். ஆங்கிலேயரை எதிர்த்து கப்பல் வணிகம் செய்தமையால், ‘கப்பலோட்டிய தமிழன்’ எனப் புகழப் பெற்றார். இலக்கியத்தின் மீது பற்றுக்கொண்டவர். பல நூல்களைப் பதிப்பித்தவர். இவரைப் பற்றி இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகளைத் தெரிந்துகொள்வோமா நண்பர்களே!