ஒரு தகவல், உங்களை ஒரு புத்தகம் படிக்கத் தூண்டும். அந்தப் புத்தகம், பெரிய நூலகத்தை நோக்கி உங்களைத் தள்ளும். அந்த நூலகம், மேடைகளில் நீங்கள் அலங்கரிக்க உதவும். எனவே, ‘ஒரு தேதி... ஒரு சேதியில்,’ தினந்தோறும் ஒலிக்கும் தகவல்களைக் கேட்கத் தவறாதீர்!

ஷிகார் தவான்: இந்தியக் கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன், ஷிகார் தவான். 19 வயதுக்கு உட்பட்டோர் உலகக் கோப்பைத் தொடர் மூலம் அனைவரையும் தன் பக்கம் திரும்பவைத்தார். ஆம்! அந்தத் தொடரில் மூன்று சதங்கள் அடித்து, தொடர் நாயகனாக ஜொலித்தார். உடனே இந்திய அணியில் இடம் பிடித்தாலும் நீடிக்க முடியவில்லை. தன்னம்பிக்கை தளராமல், ஐபிஎல் போட்டிகளில் அசத்தி, மீண்டும் அணியில் இடம்பிடித்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 187 ரன்களைக் குவித்து, முயற்சிக்குத் தோல்வி இல்லை என நிரூபித்த இவரைப் பற்றிய சுவாரஸ்யமான செய்திகளைக் கேட்க வேண்டுமா?

நெல்சன் மண்டேலா: கறுப்பின மக்களின் நம்பிக்கை நாயகன். படிப்பில் படு சுட்டி. மூன்று ஆண்டுகள் படிக்கவேண்டிய மேல்நிலைக் கல்வியை, இரண்டு ஆண்டுகளிலேயே முடித்து ஆசிரியர்களை வியப்பில் ஆழ்த்தினார். சட்டம் படித்தார். கறுப்பின மக்கள் கொடுமைக்கு உள்ளாவதைப் பொறுக்க முடியாமல், போராட்டத்தில் இறங்கினார். 27 வருடம் கொடுமையான சிறை வாசம். மனம் தளராமல் போராடி, கறுப்பின மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத்தந்தார். தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதியாக உயர்ந்து, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இவரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வோமா?

அம்பேத்கர்: ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, நாடு போற்றும் அறிஞரானவர். புத்தகம் படிப்பது என்பது இவருக்கு அவ்வளவு பிடித்த விஷயம். பள்ளிக்கூடம் தொடங்கி, பணிபுரியும் இடம் வரை ஏராளமான அவமானங்களைச் சந்தித்தார். ஆனால், அவமானங்களால் அவரை வீழ்த்த முடியவில்லை. அடக்குமுறைக்கு உள்ளான மக்களின் விடுதலையே, தனது வாழ்வாக மாற்றிக்கொண்டவர். அறிவின் சூரியனாக ஒளி வீசினார். அமெரிக்கா சென்று பட்டம் பெற்றவர். நமது நாட்டின் சட்டங்களை இயற்றும் குழுவில் பிரதானப் பணிகளை ஆற்றியவர். இவரின் வாழ்க்கையே பெரிய பாடம். நாம் அவசியம் கேட்க வேண்டும்!