Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

Published:Updated:

மின்மினிப் பூங்கா!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சீனாவில், மின்மினிப் பூச்சிகளுக்காக ஒரு பூங்காவை அமைத்து இருக்கிறார்கள். இரவு நேரங்களில் இந்த மின்மினிப்பூச்சிகளைக் கண்டு மகிழ சுற்றுலாப் பயணிகளும், ஆராய்ச்சியாளர்களும் குவிகிறார்கள். டைனோசர் கண்காட்சி, குழந்தைகளைக் கவரும் விளையாட்டுகள் எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களும் இந்தப் பூங்காவில் உள்ளன.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சென்டிமென்ட் ரோபோ!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

வீட்டு வேலைகள், ஃபேக்டரி வேலைகள் செய்வதற்கு ரோபோக்கள் உருவாக்கப்பட்டன. இப்போது, ஜப்பானில் உள்ள ரோபோ தயாரிக்கும் ‘பேங்’ என்ற நிறுவனம், மனித உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளும் வகையில், இதயத்துடன் கூடிய ‘பெப்பர்’ எனும் புதிய ரோபோவை அறிமுகப்படுத்துகிறது. செயற்கை நுண்ணறிவும், உணர்ச்சிகளை அறியும் புதிய தொழில்நுட்பமும் இதில் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், ஒருவரின் அசைவுகள், உணர்ச்சி வெளிபாடுகள் மற்றும் குரல் ஆகியவற்றை இந்த பெப்பர் ரோபோவால் அறிந்துகொள்ள முடியும் என்கிறார்கள்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

கடல் பல்லி!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வாழும்     அரிய வகை உயிரினம், கடல் பல்லி.​ இவை, கடலுக்கு அடியில் வாழ்பவை.​ பார்ப்பதற்கு முதலை போன்ற தோற்றத்தில் இருப்பதால், இதனை அலிகேட்டர் பைப்ஃபிஷ் என்கிறார்கள்.​ இது பச்சை நிறத்தில் காணப்படும். இவை ஒரே நேரத்தில் சுமார் 600 முட்டைகள் வரை இடும்.​ வரவேற்பறைத் தொட்டிகளில் அலங்கார மீன்களாக இவை வளர்க்கப்படுகின்றன. இந்தப் பல்லியில் இருந்து தயாரிக்கும் மருந்து இதயம், சிறுநீரகம் மற்றும் ஆஸ்துமா தொடர்பான நோய்களைக் குணப்படுத்துகிறது என்கிறார்கள்.​

சுட்டி ஸ்டார் நியூஸ்!

பெரிய்ய்ய்ய கப்பல்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

உலகின் மாபெரும் கப்பலான ‘ஒயாசிஸ் ஆஃப் தி சீஸ்’. ஓர் ஊரையே கப்பலில் உள்ளடக்கியது. இதன் எடை, இரண்டு லட்சத்து 20 ஆயிரம் டன். இந்தக் கப்பலில் உள்ள சென்ட்ரல் பார்க், உலகிலேயே முதன்முதலாக கப்பலில் கட்டப்பட்டுள்ள நிஜப் பூங்கா. மொத்தம் 12,275 செடிகளும் 56 மரங்களும் உள்ளன. 5,400 பேர் ஒரே சமயத்தில் இந்தக் கப்பலில் பயணம் செய்யலாம். 2,700 அறைகளும் 16 மாடிகளும் 11 விடுதிகளும் ஏழு நீச்சல் குளங்களும் இதில் உள்ளன.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

எரிமலைத் தீவு!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

ஓர் எரிமலை, பெருங்கடலின் தளத்தில் வெடித்துச் சிதறும்போது, அந்தச் சூடான திரவப் பாறை குளிர்ச்சி அடைந்து, கடினமானப் பாறையாக மாறுகிறது. அந்த எரிமலை, ஒவ்வொரு முறை வெடித்துச் சிதறும்போதும், அதிகமான திரவப் பாறைகள் குவிந்து சற்று பெரிதாகி, அதன் பக்கங்களில் இறுகுகிறது. பிறகு, நீருக்கு அடியில் ஒரு உயரமான மலையாகி, அதன் முனை தண்ணீருக்கு வெளியே தெரியும்படி ஒரு தீவை உருவாக்குகிறது. இதைத்தான், ‘எரிமலைத் தீவு’ என்கிறோம்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

கடலில் விவசாயம்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

ஸ்ட்ராபெர்ரி, துளசி, பீன்ஸ், பூண்டு, கீரைகளைக் கடலுக்குள் விளைவித்திருக்கிறது, இத்தாலியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று. இதை, ‘நேமோ கார்டன்’ என்கிறார்கள். கடலில் 18-36 அடி ஆழத்தில், மிதக்கும் கோள வடிவக் கூண்டுகளில், பாதி அளவு தண்ணீரும், மேலே செடிகளைத் தொட்டிகளில் வைத்திருக்கிறார்கள். பகலிலும் இரவிலும் 74 டிகிரி வெப்பமும் 83 சதவிகிதம் ஈரப்பதமும் கூண்டுக்குள் இருக்கும். இங்கிருந்து வெளியேறும் அதிக அளவிலான கார்பன் டையாக்ஸைடு, பயிர் வளர்ச்சிக்கு உதவி புரிகிறதாம். ஆக்டோபஸ், கடல் குதிரை போன்ற உயிரினங்கள் இந்தக் கூண்டுக்கு அருகில் வந்தாலும் எந்தத் தீங்கும் ஏற்படுவது இல்லை என்கிறார்கள்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!