மார்கழி மாதம் என்றாலே, தெருவில் போடப்படும் கோலங்களே நம் மனதில் தோன்றும். ஒவ்வொரு புள்ளியாக இணைக்கும்போது, அழகான கோலம் உருவாவதுபோல பல தகவல்களைக் கேட்கக் கேட்கத்தான் நமது பார்வை தனித்துவம் மிக்கதாக மாறும். அது, நமக்குள் புதிய எண்ணங்களை உருவாக்கும்.

ஒரு தேதி...ஒரு சேதி!

கைலாஷ் சத்யார்த்தி அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பெருமைமிகு இந்தியர். இவருக்குள் எப்போதும் கேள்விகள் உதித்துக்கொண்டே இருக்கும். சிறு வயதில், செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனே இவருக்கு நெருக்கமான நண்பன். எல்லோரும் மகிழ்ச்சியாகப் பள்ளிக்கு வர, தன் நண்பன் மட்டும் ஏன் மற்றவரின்  செருப்புக்கு பாலிஷ் போட்டுக்கொண்டு இருக்கிறான் எனப் பலரிடம் கேட்டும் சரியான பதில் கிடைக்கவில்லை. வறுமையே இதற்குக் காரணம் எனப் புரிந்துகொண்டார். அதுவே, குழந்தைத்தொழிலாளர் முறைக்கு எதிராகப் போராடும் மனிதராக மாற்றியது. அவரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளத் தோன்றுகிறதல்லவா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு தேதி...ஒரு சேதி!

மேதா பட்கர்: இயற்கையையும் சமூகத்தையும் நேசிக்கும் மனம் கொண்டவர். சமூகப் பணியில் உயர் கல்வி படித்த இவர், பழங்குடிப் பெண்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருபவர். நர்மதை நதிக்குக் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை எதிர்த்து, மக்களைத் திரட்டி இவர் நடத்திய போராட்டம், உலகின் கவனத்தை ஈர்த்தது. எளிய மக்களின் வாழ்க்கையைச் சீரழிக்கும் நடவடிக்கைகள் எங்கு நடந்தாலும், முதல் ஆளாக வந்து நிற்கும் இவரைப் பற்றிய ஆச்சர்யமான தகவல்களைக் கேட்க ஆவலா?

ஒரு தேதி...ஒரு சேதி!

ராஜாஜி:  இந்திய விடுதலைப் போராட்டத்தில், காந்தியடிகளின் கருத்துக்களையும் போராட்டங்களையும் தமிழ்நாட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததில் இவரது பங்கு முக்கியமானது. காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, மகாகவி பாரதியார், காமராஜர், பெரியார் போன்ற தலைவர்களோடு நல்ல இணக்கம்கொண்டவர். தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பணியாற்றியவர். இதற்கு முன், சேலம் நகராட்சித் தலைவராக இருந்தபோது, சம்பளமே வாங்கிக்கொள்ளவில்லை. இது போல இன்னும் சுவாரஸ்யமான செய்திகளைக் கேட்க நீங்கள் தயாரா?
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism