Published:Updated:

சல்யூட் சாதனை!

சல்யூட் சாதனை!

லகிலேயே மிக அதிகமான நபர்கள், ஒரே நேரத்தில் கட்டைவிரல் ரேகைகளால் தேசியக்கொடிகளை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்கள்.

சல்யூட் சாதனை!

‘‘ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ளது எங்களது சாரு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி. கல்வியோடு மாணவ, மாணவிகளின் பல்வேறு திறமைகளை வெளிக்கொண்டுவந்து, தேசிய அளவில் பல விருதுகளைப் பெற்றுள்ளோம். எங்கள் மாணவர்கள், தனி அடையாளத்துடன் திகழ வேண்டும், தாய்நாட்டுப் பற்றுடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்தோம்” என்கிறார், பள்ளியின் செயலாளர் சக்தி பாலாஜி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சல்யூட் சாதனை!

ஜனவரி 8-ம் தேதி, காலை எட்டு மணிக்கு 758 மாணவ, மாணவிகள் மைதானத்தில் கூடினார்கள். ஒவ்வொருவரிடமும் ஒரு மீட்டர் நீளம்கொண்ட வெள்ளைத் துணி கொடுக்கப்பட்டது. 2,300 லிட்டர் அளவில் ஆரஞ்சு, பச்சை மற்றும் நீல வண்ண பெயின்ட்கள் கொடுக்கப்பட்டன.

நிகழ்ச்சி தொடங்கியதும், அத்தனை பேரும் தங்கள் கட்டை விரலால், வண்ணங்களை ஒற்றி, தேசியக்கொடிகளை உருவாக்க ஆரம்பித்தார்கள்.

சல்யூட் சாதனை!

ஒரு மணி 45 நிமிடங்களில், 758 தேசியக்கொடிகள்  உருவாகின. அவற்றை மாணவ, மாணவிகளில் கைகளில் ஏந்தியவாறு விண்ணை நோக்கிக் காட்டியது கண்கொள்ளா காட்சி. இது, ‘உலகிலேயே மிக அதிகமான மாணவர்கள் ஒரே சமயத்தில் கட்டைவிரல் ரேகைகளால் உருவாக்கிய  தேசியக்கொடிகள்’ என்ற சாதனையைப் படைத்தது. பிறகு, மைதானத்தில் இருந்து ஊர்வலமாக நடந்துசென்று, பொதுமக்களிடம் தேசப்பற்று குறித்த விழிப்புஉணர்வுப் பிரசாரம் செய்தார்கள்.

‘ஏஷியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி’, ‘இந்தியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி’, லண்டன் ‘எலைட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் மற்றும் ‘தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ ஆகியவற்றில் இந்தச் சாதனை இடம்பெற்றது. போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சல்யூட் சாதனை!

‘‘இந்தச் சாதனைக்காக, 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களை செலெக்ட் பண்ணினாங்க. ரெண்டு மாதம் பயிற்சி எடுத்தோம். தேசியக்கொடியை உருவாக்க ஆரம்பிச்ச ஒவ்வொரு நிமிடமும் சிலிர்ப்பா இருந்துச்சு. இந்த நாட்டின் விடுதலைக்காக எத்தனை தலைவர்கள் பாடுபட்டிருக்காங்கன்னு நினைச்சப்ப ஒரு வேகம் வந்துச்சு” என்கிறார் ஒன்பதாம் வகுப்பு அருண்.

12-ம் வகுப்பு படிக்கும் அபிராமி என்ற மாணவி, ‘‘நாம் எல்லோரும் இந்திய நாட்டை நம் உயிராக நினைக்கணும். எத்தனை உயரத்துக்குப் போனாலும் பிறந்த மண்ணை மறக்கக் கூடாது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு, இந்த ஆண்டின் குடியரசு  தினத்தை முன்னிட்டு இந்தச் சாதனையைச் சமர்ப்பிக்கிறோம்’’ என, தேசியக்கொடியை உயர்த்தி சல்யூட் வைத்தார்.

- ரமேஷ் கந்தசாமி