Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

Published:Updated:
சுட்டி ஸ்டார் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

ஆப்பிள் கோடு!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

கடையில் பழங்கள் வாங்கும்போது, ஆப்பிள், ஆரஞ்சு பழங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, அதில் சில எண்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அந்த எண்கள், பிஎல்யு கோடு எனப்படும். நாம் சாப்பிடும் ஆப்பிள் இயற்கையானதா, மரபணு மாற்றம் செய்யப்பட்டதா, ரசாயன உரங்களில் விளைந்ததா என்பதை இதன் மூலம் அறியலாம். நான்கு எண்கள் இருந்தால், அது ரசாயன உரங்களால் விளைந்தது. ஐந்து இலக்கங்களோடு 8 என ஆரம்பித்தால், மரபணு மாற்றம் செய்யப்பட்டது. ஐந்து இலக்கங்களோடு 9 என ஆரம்பித்தால்,  இயற்கையானது. இனி, இதைக் கவனித்து   வாங்குங்கள் நண்பர்களே!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

கூடு கட்டும் தவளை!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

நி்லம், நீர் நிலைகள் அல்லது பாறைகளின் இடுக்குகளில்  தவளைகளைப் பார்த்திருப்பீர்கள். ஒரு தவளை இனம், கூடு கட்டி வாழ்கிறது என்றால் ஆச்சர்யம்தானே? ஆசியாவிலேயே முதன்முறையாக, கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில்,  மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள மழைக்காடுகளில், இந்த வகைத் தவளை இனத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்தத் தவளைகள், புற்களினால் கூடுகள் அமைத்து அதில் முட்டைகளை இடுகின்றன. முட்டைகளை வெப்பத்தில் இருந்தும் வேறு விலங்குகளிடம்  இருந்தும் பாதுகாக்கவே, கூடுகளைக் கட்டுவதாக டெல்லி  பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் எஸ்.டி.பிஜு தெரிவித்துள்ளார். 12 செ.மீ நீளம் உள்ள இந்தச் சிறிய தவளைகள், இலைகளில் மேலிருந்து கீழே தவழ்ந்து சென்று, பட்டுப்பூச்சிக் கூடு போன்ற கூடுகளை அமைக்கின்றன. கூடுகளின் முனைகளை இறுகக் கட்டுவதற்காக ஒரு திரவப் பொருளையும் வெளியிடுகின்றன.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

பச்சைப் புறா!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

பச்சைப் புறாவின் விலங்கியல் பெயர், ‘சால்கோஃபாப்ஸ் இண்டிகா’. இதை, ‘எமரால்டு டவ்’ என்றும் சொல்வார்கள். மழைக்காடுகளிலும், அடர்ந்த வனங்களிலும் வசிக்கும். ஒன்று அல்லது இரண்டு முட்டைகளே இடும். இரண்டு வாரம் அடைகாக்கும். குஞ்சு பொரித்து 12 அல்லது 13 நாட்களில் பறக்கத் தொடங்கும்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

ஈஸியா துவைக்குது டோல்ஃபியா!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

வாஷிங்மெஷினின் வேலையை, ஒரு சோப் அளவு இருக்கும் ‘டோல்ஃபி’ எனும் கருவியே இனி செய்துவிடும். அழுக்குத் துணி உள்ள வாளியில் தண்ணீர், சோப்புத் தூளைச் சேர்த்து, டோல்ஃபியை ஆன் செய்து வைத்துவிட்டால் போதும். அதிலிருந்து அல்ட்ராசோனிக் அலைகள் உருவாகி, குமிழ்களை ஏற்படுத்தும். அரை மணி நேரத்தில் துணிகளைத் துவைத்துக் கொடுத்துவிடும். கையடக்கமான இந்த டோல்ஃபியை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். வாஷிங்மெஷினைவிட துணிகளை மிக மென்மையாகக் கையாளும் டோல்ஃபி, பருத்தி, பட்டு, பாலியஸ்டர் என அனைத்து வகைத் துணிகளையும் சுத்தம் செய்துவிடும். இதை, ஜெர்மனியைச் சேர்ந்த லெனா சோலிஸ் என்பவர் உருவாக்கியிருக்கிறார்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

முள்ளங்கித் திருவிழா!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

மெக்ஸிகோவில் வருடந்தோறும் நடைபெறும் முள்ளங்கித் திருவிழாவை, விவசாயிகள் தங்கள் பாரம்பரியத் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். இந்த வருடம், ‘டாம் டாம்’ எனும் சதுக்கத்தில் முள்ளங்கியால் ஆன விளையாட்டுப் பொம்மைகள், குடில்கள் செய்து பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டன. முள்ளங்கியில் கார்விங் மூலம் விதவிதமான பொம்மைகள் செய்யும்  போட்டியும் நடைபெற்றது. கார்விங் செய்ய எடுத்துக்கொண்ட நேரம் மற்றும் கலைநுட்பத்தைப் பொறுத்து சிறந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

ஆச்சர்ய தேவாலயம்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சமீபத்தில், தைவான் நாட்டின் புதாய் என்ற நகரத்தில் கட்டப்பட ஒரு தேவாலயம், உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது. ‘ஓஷன் வியூ பார்க்  சர்ச்’ என்ற இந்த தேவாலயம், காலணி வடிவில் உள்ளது. 55 அடி உயரம், 36 அடி அகலம்கொண்ட இந்த தேவாலயம், நோயினால் இரண்டு கால்களையும் இழந்த ஒரு பெண், தன் வாழ்நாள் முழுவதையும் இந்த தேவாலயத்திலேயே கழித்ததை நினைவுபடுத்தும் வகையில்  கட்டப்பட்டுள்ளது.

சுட்டி ஸ்டார் நியூஸ்!