
பாப் மார்லி: ஜமைக்காவில் பிறந்த அற்புதமான பாடகர். ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் கண்ணீரை தன் பாடல்களில் வடித்தவர். எதற்கும் சமரசம் செய்துகொள்ளாத சிங்கம். உரிமைகளுக்காகப் பாடல்கள் பாடி, தன் உயிரையே பணயம் வைத்தவர். பிரமிக்கவைக்கும் இவரின் வாழ்க்கை வரலாற்றை நீங்கள் அவசியம் கேட்க வேண்டும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தாமஸ் ஆல்வா எடிசன்: டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டு, பள்ளியில் படிக்க லாயக்கில்லை எனத் துரத்தப்பட்டவர், எடிசன். பின்னாளில், மின்விளக்கைக் கண்டுபிடித்து உலகுக்கே வெளிச்சம் தந்தார். காய்கறி விற்றல், செய்தித்தாள் விநியோகித்தல் போன்ற வேலைகளைச் செய்து, அறிவியல் மேதையான இவரது கதையைக் கேட்க நீங்கள் தயாரா?

ஆப்ரகாம் லிங்கன்: அமெரிக்க கறுப்பின மக்களின் தன்னம்பிக்கைத் தலைவர். கறுப்பின மக்களை விலங்குகளைவிடக் கேவலமாக நடத்தியும், கொன்று குவித்தும் சுரண்டிக்கொண்டிருந்த அடிமை முறையை நீக்க, அயராது உழைத்த ஒப்பற்ற மனிதர். அமெரிக்காவிலேயே ஆளும் ஜனாதிபதியாக உயர்ந்த அவரது போராட்டப் பயணத்தை அறிந்துகொள்வோமா?

