Published:Updated:

நியூஸ் ரவுண்ட்ஸ்!

நியூஸ் ரவுண்ட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
நியூஸ் ரவுண்ட்ஸ்!

நியூஸ் ரவுண்ட்ஸ்!

இயற்கையைப் போற்றுவோம்!

இயற்கையைப் பாதுகாப்பது பற்றிப் பல்வேறு கோணங்களில் நிகழ்ச்சிகளை நடத்தி, பார்வையாளர்களாக வந்திருந்த பெற்றோரைக் கவர்ந்தனர், நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம்வேதலோக வித்யாலயா பள்ளி மாணவர்கள்.

நியூஸ் ரவுண்ட்ஸ்!

நாம் அன்றாடம் சந்திக்கும் அறிவியல், இயற்கைப் பேரிடரின்போது செய்ய வேண்டியவை, இயற்கை விவசாயம், நதிநீர் இணைப்பு, விண்வெளி, மருத்துவம், வானியல் என அனைத்துத் துறைகளைப் பற்றியும் கண்காட்சி நடத்தி, விளக்கம் அளித்தார்கள்.

‘‘சூரியனில் இருந்து பிரிஞ்சு வந்ததுதான் நாம் வாழும் பூமி. இந்தப் பூமி உருவானப்போ, ரொம்ப வெப்பமா இருந்துச்சு. மழை வந்து குளிர ஆரம்பிச்சு,  கடல் உருவாச்சு. அப்புறம், நிலம், தாவரங்கள், உயிரினங்கள் உருவாச்சு. நம் பூமியின் வளமே மண்தான். அதை, நாம் பாதுகாப்பது முக்கியம்’’ என அக்கறையோடு சொன்ன, ஏழாம் வகுப்பு கெளதம், ஓர் அழகிய உதாரணம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நியூஸ் ரவுண்ட்ஸ்!

இந்த நிகழ்ச்சி குறித்து பள்ளியின் தாளாளர் குரு, “இயற்கையைத் தவிர்த்து நாம் வாழ்வது சாத்தியம் ஆகாது. அதை, ஒவ்வொரு மாணவரும் உணர வேண்டும் என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்’’ என்றவர், கண்காட்சிக்கு வந்த அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கினார்.

- ச.ஆனந்தப்பிரியா படங்கள்: க.சத்தியமூர்த்தி

சுட்டி வில்லாளி!

நியூஸ் ரவுண்ட்ஸ்!

‘உலகின் மிக இளம் வயது வில்வித்தை வீரர்’ என்ற பெருமையுடன் அறிமுகமாகிறார், ஆராத்யா வேத்வான் (Aaradhya Vedwan). இரண்டு வயதே ஆகும் ஆராத்யா, குழந்தைகளுக்கான வில்வித்தையின் ரீக்கர்வ் பெளவ் பிரிவில், வெண்கலம் வென்றுள்ளார். இந்தச் சுட்டியை, இந்திய வில்வித்தை அசோஸியேஷன் அங்கீகரித்துள்ளது. இதற்காக நடந்த பாராட்டு விழாவில், ஆராத்யா தனது பிஞ்சுக் கரங்களால், வில்லில் அம்பு பூட்டியதே கொள்ளை அழகு. கராத்தே வீரர் ஹுசைனி நடத்தும் ‘ஹு ஆர்ச்சரி மெஷின்’ அறிமுகம் செய்த இதே நிகழ்ச்சியில், காம்பவுண்ட் ஃபேர் பெளவ் பிரிவில் தங்கம் வென்ற 6 வயது அனுப் ஸ்கன்டா (Anoop Skanda) பங்கேற்று, தனது வில்வித்தையால் அனைவரையும் அசரவைத்தார்.

செய்தி, படங்கள்: ம.நவீன்

மாற்றத்துக்கான மாரத்தான்!

சுகாதாரமான சமூகத்தை உண்டாக்குதல், நீர் நிலைகளை மேம்படுத்துதல், மழைநீரைச் சேகரித்தல் ஆகியவற்றை மையமாகக்கொண்டு, ‘பிங்க் மாரத்தான்’ என்ற நிகழ்ச்சி, குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதி எங்கள் பள்ளியில் நடந்தது.

நியூஸ் ரவுண்ட்ஸ்!

5 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், பங்கேற்றார்கள். எங்களை வழிநடத்த சென்னையில் இருந்து 30 மாரத்தான் வீரர்கள் வந்திருந்தனர். 14 கிலோ மீட்டர் தூரம் இந்த ஓட்டம் நடந்தது. எங்கள் பள்ளி ஆசிரியர் தமிழ்ச்செல்வன், போட்டி தூரத்தை முதலில் கடந்தார். மாணவர்கள் தரப்பில் 12-ம் வகுப்பு நவீன், 11- ம் வகுப்பு பிரவீன் ஆகியோர் சிறப்பிடம் பெற்றனர். திருவண்ணாமலை மாவட்ட அளவில், பள்ளியில் நடைபெற்ற முதல் பெரிய மாரத்தான் இதுதான். விழாவில், புது வருடத்துக்கான சூளுரையாக, தினமும் 30 நிமிடங்கள் உடல் சார்ந்த ஒரு செயலைச் செய்வது என உறுதி எடுத்தோம்.

தெ.ருஷிகேஷ், பிங்க்ஸ் பப்ளிக் பள்ளி, கஸ்தம்பாடி, போளூர்.படம்: கா.முரளி

ஆஸ்திரேலிய ரன்னர்!

பெண் கல்வியின் அவசியத்தை  வலியுறுத்தி, ஆஸ்தச்ரேலிய நாட்டு ஓட்டப்பந்தய வீரர் ஒருவர், இந்தியாவில் ஓடிக்கொண்டிருக்கிறார்.

நியூஸ் ரவுண்ட்ஸ்!

ஆஸ்திரேலியாவின் முன்னாள் விளையாட்டுத்துறை துணை அமைச்சரும், தற்போதைய எம்.பியுமான, பிரபல ஓட்டப்பந்தய  வீரர் பேட் ஃபார்மர் (Pat Farmer). இந்திய சுற்றுலாத் துறையுடன் இணைந்து, ‘ஸ்பிரிட் ஆஃப் இந்தியா ரன்’ என்ற பெயரில், ஜனவரி 26-ம் தேதி, கன்னியாகுமரியில் தனது விழிப்புஉணர்வு ஓட்டத்தை ஆரம்பித்தார். பள்ளி மாணவிகள், சுற்றுலாவாசிகள் எனப் பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்று, அவருக்கு உற்சாகம் அளித்தனர்.

கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்ட்ரா, குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் வழியாக, மொத்தம் 65 நாட்களில் 4,600 கிலோ மீட்டர் ஓடி, மார்ச் 30-ம் தேதி காஷ்மீரில் ஓட்டத்தை முடிக்கிறார்.

நியூஸ் ரவுண்ட்ஸ்!

‘‘சிறந்த கலாசாரம், பண்பாடு, பல்வேறு வகையான மொழிகளை உடைய இந்தியாவில் பயணிப்பதே சுவாரஸ்யம். இங்கே உள்ள ஒவ்வொரு பெண் குழந்தையும் கல்வியில்  சிறந்து, உலகப் புகழ்பெற வேண்டும்” என்றபடி தனது ஓட்டத்தை உற்சாகமாக ஆரம்பித்தார்.

- செய்தி, படங்கள்: ரா.ராம்குமார்