Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

Published:Updated:
சுட்டி ஸ்டார் நியூஸ்!

ஈஸி சார்ஜர்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

உலகின் மிகச் சிறிய செல்போன் சார்ஜரை நிப்பர் நிறுவனம் தயாரித்துள்ளது. கீ செயின் போல இருக்கும் இந்த சிறிய கருவியுடன் பேட்டரியை இணைத்தால் போதும். இதன் எடை 10 கிராம்தான். சாதாரண சார்ஜரைவிட 20 சதவிகிதம் அதிவேகமாக சார்ஜ் செய்யும் என்பது இதன் ஸ்பெஷல்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

உயரமான மலை!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

உலகில், மிக உயரமான மற்றும் மிகப் பெரிய மலைகளில் சில, கடலின் அடியில் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்று, ஹவாய் தீவில் அமைந்துள்ள மவுனா கேய் (Mauna Kea). நீருக்குள் அமைந்துள்ள மிகப்பெரிய மலை இதுதான்.  பசுபிக் கடலில் அமைந்துள்ள இந்த மலையின் உயரம், கடலின் அடியிலிருந்து 33,474 அடிகள். கடலுக்கு மேலேயும்  13,796 அடி உயரத்துக்கு கம்பீரமாக நிற்கிறது மவுனா கேய்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

மிமிக்ரி பறவை!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதிக் காடுகளில் காணப்படும் ஒரு விநோதப் பறவை, லயர் பேர்டு (lyre bird). இந்தப் பறவையின் வால் சிறகுகள், ‘லயர்’ என்ற இசைக் கருவியைப் போல இருப்பதால், இந்தப் பெயர்.

இதன் தோகை, 16 இறகுகள்கொண்டது. நடு இரண்டு இறகுகள், கம்பி போன்று நீண்டவை. வெளி இரண்டு இறகுகள் சிறிது அகலமானவை. மற்ற 12 இறகுகளும் நுண்ணிய பட்டு இழைகளால் செய்தது போல இருக்கும். ஆண் பறவை, சுமார் 80 முதல் 98 சென்டிமீட்டர்  நீளமும், பெண் பறவை 74 முதல் 84 சென்டிமீட்டர் நீளம் வரையும் இருக்கும். நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பல குரல்களில் பேசி அசத்தும் வித்தகர்களைப் போல இந்த லயர் பறவை, பல பறவைகள் மற்றும் சில உயிரினங்களின் குரல்களை ஒலித்து, கேட்பவர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

ஜொலிக்கும் பனி உலகம்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

நாம், சாதாரண பனிக்கே  தலை, காதுகளை மறைக்க விதவிதமான குல்லாய்களை  வாங்கி அணிந்துகொள்கிறோம். ஆனால், சீனாவின் குளிர்ப் பிரதேசமான ஹார்பின் நகரில், உடலை உறையவைக்கும் மைனஸ் டிகிரி குளிர் காலத்தில், பனிச்சிற்பத் திருவிழா நடக்கும். இந்தத் திருவிழாவில் பங்கேற்பதற்காக, சிற்பக் கலைஞர்களும் ரசிகர்களும் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கில் வந்து குவிவார்கள்.  இந்த ஆண்டும் ஜனவரியில் தொடங்கிய திருவிழா, ஒரு மாதம் வரை மக்களை குதூகலப்படுத்தியது. பனிச் சிற்பங்கள் பல வண்ணங்களில் நிஜத்தை விஞ்சும் அளவுக்கு மனதைக் கவர்ந்தன.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

உணவுக்கு சட்டம்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

பிரான்ஸ் நாட்டில், உணவகங்களுக்கு சாப்பிட வருபவர்கள் உணவை வீணாக்காமல் இருக்க, சாப்பிட்டபின் மீந்த உணவை பார்சல் செய்து வீட்டுக்குக் கொண்டுபோய்விட வேண்டும். முதலில் பெரிய உணவகங்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம். இதனால், 10 மில்லியன் டன் உணவு வீணாவது தடுக்கப்படும் என பிரான்ஸ் அரசு கூறுகிறது.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

கால் முளைத்த மரங்கள்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

‘நடக்கும் மரம்’ என்று சொல்லப்படும் சொக்ரேட்டியா எக்ஸார்ஹிஸா, வெயிலைத் தேடி தினமும் இரண்டு செ.மீ நகர்ந்து செல்கின்றனவாம். இந்த மரங்களைக் காண்பதற்காகவே, சுற்றுலா பயணிகள் வந்து குவிகிறார்கள். லத்தீன் அமெரிக்காவில் உள்ள மழைக்காடுகளில் இந்த மரங்கள் உள்ளன. மரத்தின் வேர்கள் வெளிப்பக்கமாகத் தெரியும். புதிய வேர்கள் முளைத்ததும் பழையவை தானாகவே மடிந்துவிடும். புதிய வேர்கள் சுமார் 20 மீட்டர் வரை சென்று நிலத்தில் பதிவதால், மரம் இடம் பெயர்வதாகத் தெரிகிறது என்கிறார், தொல்லுயிரியியல் ஆராய்ச்சியாளர் பீட்டர் விசான்ஸ்கி.

சுட்டி ஸ்டார் நியூஸ்!