கே.கணேசன்

கார் பந்தயங்களில் மிகவும் பிரபலமானது ஃபார்முலா ஒன் போட்டி. இதில் வெற்றி பெறுவது, ஒவ்வொரு கார் பந்தய வீரரின் லட்சியக் கனவாகும். இருபத்தி நான்கு வயதாகும் ஜெர்மனியைச் சேர்ந்த செபாஸ்டியன் வெட்டல், சமீபத்தில் ஜப்பான் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் ஜென்சன் பட்டன், ஃபெர்ணான்டோ அலோன்ஸோ ஆகியோருக்கு அடுத்து மூன்றாவதாக வந்தாலும், ஒட்டுமொத்த பாயின்டுகள் அடிப் படையில்... இவர், சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம், மிகவும் இளவயதில் ஃபார்முலா ஒன் சாம்பியன் பட்டத்தை அடுத்தடுத்து இரண்டுமுறை வென்ற வீரர் என்ற சிறப்பையும் பெறுகிறார் வெட்டல். இவருக்கு முன், 2006-ல் ஃபெர்ணான்டோ அலோன்ஸோ, இதேபோல அடுத்தடுத்து இரண்டு முறை சாம்பியன் பட்டம் பெற்று சாதனை நிகழ்த்தி இருக்கிறார்.

செபாஸ்டியன் வெட்டல், மேற்கு ஜெர்மனியில் 1987-ஆம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி பிறந்தார். சிறுவயதில்

தான் அறிந்த மூன்று மைக்கேல்களைப்போல பெயரும் புகழும் பெறவேண்டும் என்று தனது கனவை மனதுக்குள் விதைத்துக் கொண்டார். ஒருவர், பாடகர் மைக்கேல் ஜாக்சன். அடுத்தவர், கூடைப்பந்தாட்ட வீரர் மைக்கேல் ஜோர்டான். அடுத்தவர், கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமேக்கர். வெட்டல் மைக்கேல் ஜாக்சனைப் போல ஆகவேண்டும் என்பதற்காக இசைப் பள்ளியில் சேர்ந்தார். இவரது குரல் வளம் ஏற்றதாக இல்லாததால் அம்முயற்சியைக் கைவிட்டார். 'கோ கார்ட்’ ஆட்டத்தில் 1995-ல் இருந்து பயிற்சிபெற ஆரம்பித்தார். அதன் விளைவாக, 2001-ல் ஜூனியர் மொனாக்கோ கார்ட் பந்தயத்தில் பட்டம் வென்றார். பிறகு, முழு நேர மோட்டார் பந்தய வீரரான செபாஸ்டியன் வெட்டல், 2009 முதல் ரெட்புல் அணியில் இடம்பெற்றார். அந்த ஆண்டுப் போட்டியில் ரன்னர்-அப் ஆக வந்தார். இவரது வெற்றியின் மூலம் ரெட்புல் அணியும் பதக்க மேடையில் இடம்பெற்றது. அடுத்த ஆண்டில் கிராண்ட் பிரிக்ஸ் பட்டமும், அதற்கு அடுத்த ஆண்டில் உலகச் சாம்பியனும் ஆனார். 324 புள்ளி களுடன் இந்த ஆண்டும் இவர்தான் சாம்பியன். இவருக்கு அடுத்து இருப்பவர் ஜென்சன் பட்டன் பெற்றது 210 புள்ளிகளே !