ஹாய் சுட்டீஸ்... இந்த முறை எளிதாக செய்யக் கூடிய சாக்லேட் பர்பியும், எளிதில் ஜீரணமாகும் பாப்கார்ன் பக்கோடாவையும் ரெசிபிக்களாகச் செய்து தருகிறார் சமையல்கலை நிபுணர் வசந்தா விஜயராகவன். அம்மாகிட்ட செஞ்சுதரச் சொல்லி, டேஸ்ட் பண்ணிப் பாருங்களேன். இவற்றைச் சாப்பிடுவதால் உடலுக்குக் கிடைக்கும் சிறப்பையும், பயனையும் டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி விளக்கிச் சொல் கிறார்.

சாக்லேட் பர்பி!

தேவையானவை: மாரி பிஸ்கட் - 20, சர்க்கரை - ஐம்பது கிராம், மாம்பழக் கூழ் - 3 டேபிள் ஸ்பூன் (அல்லது மாம்பழ ஜூஸ்), மில்க் மெய்ட் - கால் கப், கோக்கோ பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: மாரி பிஸ்கெட்டையும், சர்க்கரையையும் மிக்ஸியில் போட்டு பொடியாக்கவும். அதை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு, கோகோ பவுடர், மாம்பழக் கூழ் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, மில்க் மெய்ட் விட்டு, சப்பாத்தி மாவு போல் பிசைந்துகொள்ளவும். அதை ஒரு தட்டில் கொட்டிப் பரத்தி, ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும். ஒரு மணி நேரம் கழித்து எடுத்து, துண்டுகள் போடவும். சுட்டிகளே சுலபமாக செய்யக் கூடிய ஸ்வீட் இது.

கிடைக்கும் சத்துக்கள்:

ஆற்றல் - 765 கிலோ கலோரி
கார்போஹைட்ரேட் - 125 கிராம்
புரதம் - 19 கி
கொழுப்பு - 21 கி
கால்சியம் - 398 மில்லி கி
இரும்பு - 5.6 மி.கி
பீட்டா கரோட்டின் - 1846 மைக்ரோ கி
ஃபோலிக் ஆசிட் - 27 மை.கி
வைட்டமின் : 8 மை.கி

டயட்டீஷியன் கமென்ட்: இது, கேக் மாதிரி இருக்கும். மிக மிருதுவான ஒரு ஐட்டம். எளிதில் ஜீரணமாகும். கோக்கோ இருப்பதால் நார்ச்சத்து கிடைக்கும். புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் கால்சியம் ஆகியவை போதுமான அளவுக்குக் கிடைக்கும். இதில் கிடைக்கும் பி-காம்ப்ளக்ஸ் சத்து உடலுக்கு நல்லது. இதை, சுட்டிகளுக்கு காலை அல்லது மாலை வேளைகளில் ஸ்நாக்ஸ் போல சாப்பிடக் கொடுக்கலாம். இதன்மூலம் உடனடி ஆற்றலும் உடலுக்குக் கிடைக்கிறது.

பாப்கார்ன் பக்கோடா!

தேவையானவை: பாப்கார்ன் - 2 கப்(50 கிராம்), கடலை மாவு - ஒரு கப்(100 கிராம்), மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 200 கிராம், உப்பு - தேவையானது.

செய்முறை: கடலை மாவு, உப்பு, மிளகாய்த்தூள் இவற்றை ஒன்றாகக் கலந்து, சிறிது தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு போல் அரைத்து, அதில் பொரித்து வைத்துள்ள பாப்கார்னைச் சேர்த்து, சிறிது சிறிதாக காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

கிடைக்கும் சத்துக்கள்:

ஆற்றல் - 1095 கிலோ கலோரி
கார்போஹைட்ரேட் - 95 கிராம்
புரதம் - 27 கி
கொழுப்பு - 67 கி
கால்சியம் - 69 மில்லி கி
இரும்பு - 6.6 மி.கி
பீட்டா கரோட்டின் - 112 மைக்ரோ கி
ஃபோலிக் ஆசிட் - 17 மை.கி

டயட்டீஷியன் கமென்ட்: பாப்கார்ன் பக்கோடாவில் புரதச் சத்து போதுமான அளவு கிடைக்கிறது. மாவுச்சத்து அதிகம் கிடைக்கிறது. பக்கோடாவினுள் பாப்கார்ன் இருப்பது... ஒரு புது விதமான சுவையைத் தருவதோடு, சுட்டிகளை ஆவலுடன் சாப்பிடத் தூண்டுகிறது. இதை, எடை குறைவாக இருக்கும் சுட்டிகள் அதிகமாகவும், பருமனாக இருக்கும் சுட்டிகள் குறைவாகவும் சாப்பிடலாம். மாலை வேளையில் சாப்பிடுவதற்கு ஏற்ற நல்ல ஸ்நாக்ஸ் இது.

படங்கள்: எம்.உசேன்

ஃப்ரூட்ஸ் தோசை!

தேவையானவை: ஆப்பிள் - அரை பழம், மாதுளை - கால் பழம், மாம்பழம் - அரை பழம், கிஸ்மிஸ் - சிறிது, பேரிச்சை - 5, வாழைப்பழம் - ஒன்று, பலாச்சுளை - 2, தேன் - 5 ஸ்பூன், ஏலக்காய் - 2, தோசை மாவு - ஒரு கப்.

செய்முறை: தோசை மாவில் அனைத்துப் பழங்களையும் பொடியாக நறுக்கி, மாவுடன் கலந்துகொள்ளவும். அதனுடன் தேன் கலக்கவும். ஏலக்காயைப் பொடிசெய்து மாவுடன் நன்றாகக் கலக்கவும், இந்த மாவில் தோசை சுட்டுக் கொடுத்தால் சுட்டிகளுக்கு சாப்பிட மிகவும் பிடிக்கும்!