கே.கணேசன்

ஹாய் சுட்டீஸ்... சென்ற இதழில் சுட்டிகளை கனவு காணச் சொன்ன அப்துல் கலாம் வாழ்க்கையைக் காப்பி அடித்தோம். எல்லோருக்கும் வாழ்க்கையில் வெற்றி பெறும் கனவு இருக்கும். அந்தக் கனவையே தனது நிறுவனத்தின் லட்சிய வார்த்தைகளாகக் கொண்டு ஜெயித்தவர், சோய்சிரோ ஹோண்டா. இந்த முறை அவரது வாழ்க்கையைக் காப்பி அடிக்கலாம் வாங்க!

சோய்ச்சிரோ ஹோண்டா, பிரபலமான ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனத்தை உருவாக்கியவர். ஜப்பானின் கோம்யோ எனும் ஊரில் 1906 நவம்பர் 17-ல், ஒன்பது குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் முதல் குழந்தையாகப் பிறந்தார். சிறு வயதில் இருந்தே பட்டறைத் தொழிலில் ஆர்வத்துடன் இருந்தார். அப்பாவின் தொழிற்கருவிகளில் ஏற்படும் சின்னச் சின்ன பழுதுகளை ஹோண்டாவே சரி செய்துவிடுவார்.

பதினைந்தாம் வயதில் வீட்டை விட்டு வெளி யேறிய ஹோண்டா, ஆறு வருடங்கள் கார் மெக்கானிக் வேலை பார்த்து பயிற்சி பெற்றார். பின்னர் வீடு திரும்பினார். 1928-ல் படிக்கும் காலத்திலேயே ஒரு கார் மெக்கானிக் ஷாப்பை நிறுவினார். அதில், மோட்டார் வாகனங்களுக்குத் தேவையான 'பிஸ்டன் ரிங்ஸ்’களை உற்பத்தி செய்தார்.

அந்தச் சமயத்தில், அவருக்கு திருமணமாகி விட்டது. மனைவியின் நகைகளை அடமானம் வைத்து, தொழிற்சாலையில் முதலீடு செய்தார். பிஸ்டன் ரிங்ஸ்களை விற்பனை செய்ய டயோட்டா நிறுவனத்துக்கு அனுப்பினார்.இவரது தயாரிப்பு தரமானதாக இல்லை என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள். தான் எங்கோ தவறு செய்கிறோம் என்று நினைத்த ஹோண்டா, திரும்பவும் படிக்கச் சென்றார். இரண்டு ஆண்டுகள் இடை வெளிக்குப் பிறகு, மீண்டும் தனது தொழிற்சாலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

பிஸ்டன் ரிங்க்ஸ்களை மேம்படுத்தி உருவாக்கினார் ஹோண்டா. இந்த முறை டயோட்டா நிறுவனம், அவரது பிஸ்டன்களை வாங்க ஆரம்பித்தது. ஹோண்டா தனது தொழிற்சாலையை விரிவுபடுத்த நினைத்தார். ஆனால், அப்போது இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்தது. ஜப்பானிய அரசு போரில் ஈடுபட்டது. அந்தப் போரினால் பல இழப்புகள் ஏற்பட்டன. சில வருடங்கள் கழித்து நிலமை சரியானது. ஆனால், இந்த முறை இயற்கை பழிவாங்கியது. மோசமான வெள்ளம் மற்றும் இயற்கைப் பேரிடரால், அவரது தொழிற்சாலை இருந்த இடம் தெரியாமல் போனது.

இத்தனை இடர்பாடுகளையும் ஹோண்டா ஏற்றுக்கொண்டார். தான் கண்ட கனவை மட்டும் விட்டுவிடவில்லை. ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும், எப்படி முன்னேற வேண்டும் என்பதைக் கனவு கண்டார். அதற்காகத் திட்டமிட்டு, முன்பைவிட அதிகமாகப் போராடினார். 1948-ல் தனது முதல் தயாரிப்பான மோட்டார் சைக்கிளுக்கு, 'ட்ரீம்’ என்றே பெயர் வைத்தார். தனது நிறுவனத்தின் ஸ்லோகனாக, 'பவர் ஆஃப் ட்ரீம்’ என வைத்துக் கொண்டார்.

கனவு மட்டுமே ஒருவனை உயர்த்தும் என்பதில் முழு நம்பிக்கை வைத்தார். தனது தயாரிப்புக்கான சந்தை... ஜப்பான் மட்டும் இல்லை என்பதை உணர்ந்து, வெளிநாடுகளில் அதற்கான வாய்ப்பை அறிந்துகொள்ள ஒரு நிறுவனத்தை அணுகினார். அவர்கள் தந்த முடிவுகளை வைத்து, அமெரிக்காவுக்கு தனது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்தார். இவரது தயாரிப்புக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்புக் கிடைத்தது. அதில் இருந்து, 'மோட்டார் சைக்கிள் என்றால் ஹோண்டாவின் பெயரைத் தவிர்க்க முடியாது’ என்ற நிலை உருவானது.

ஹோண்டா இறக்கும் போது அவருக்கு 84 வயது. அதுவரையிலும்... தனது நிறுவனத்துக்காக ஓர் இளைஞரைப் போல உற்சாகத்துடன் பணிபுரிந்தார்.

அவர் ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார், ''மக்கள் எனது ஒரு சதவீத வெற்றியை மட்டுமே பார்க்கிறார்கள். மீதி இருக்கும் 99 சதவீதத் தோல்வி அவர்கள் அறியாதது. ஆனால், நான் அந்தத் தோல்விகளில் இருந்துதான் இத்தனை பெரிய வெற்றியைப் பெற்றேன். எப்போது நீங்கள் தோல்வி அடைகிறீர்களோ... அப்போது வெற்றியைப் பற்றி கனவு காணுங்கள். அதை எப்படி அடைவது என்பது பற்றி திட்டமிடுங்கள், வெற்றி உங்கள் வசமாகும்'' என்றார்.

என்ன சுட்டீஸ்... எத்தனை தோல்விகள் வந்தபோதிலும், நம்பிக்கை இழக்காமல் அதில் இருந்துதான் வெற்றிக்கான பாதையை வகுத்துக்கொள்ள வேண்டும் எனும் ஹோண்டாவின் வாழ்க்கைத் தத்துவத்தை காப்பி அடிக்கலாம் வாங்க!