இரா.நடராசன்

பல்வேறு கடல்களையும் மலைகளையும் கடந்து, அழகான அந்தப் புல்வெளி இருந்தது. அன்னப்பறவை ஓட்டி வந்த அற்புதமான பூ ரதம் அருகே நின்றபடி... தூரத்து நீர்வீழ்ச்சியை ரசித்துக்கொண்டு இருந்தாள் பார்பி. 'எக்ஸ்கியூஸ்... மீ!’ என்ற குரல் கேட்டு, திரும்பிப் பார்த்தாள். அங்கே நம்ம சுட்டி.

பார்பி: நீ யாருன்னு எனக்குத் தெரியலை. ஆனால், இந்த இடம் ரொம்ப அழகா இருக்கு. பியூட்டிஃபுல்! வா சேர்ந்தே ரசிக்கலாம்.

சுட்டி: பார்பி... உன்னைச் சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம்.

பார்பி: எனக்கும்தான். நீ யாருனு சொல்லவே இல்லையே...

சுட்டி: என் பெயர் ரோஷிணி. நான் சென்னை மடிப்பாக்கத்தில் இருக்கும், கிங்ஸ் மெட்ரிக் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறேன். சுட்டிகள் சார்பில் உன்னைச் சந்திக்க வந்திருக்கிறேன்.

பார்பி: வெரி நைஸ்! இத்தனை வருடத்தில் ஒரு பத்திரிகைக்கு பேட்டி என்பது இதுதான் முதல் முறை. வா, நாம் அந்தத் தேரில் உட்கார்ந்து பேசலாம்.

ரோஷிணி: நாங்கள், உன் கார்ட்டூன் ஒன்றிரண்டு தவிர, எல்லாமே பார்த்திருக் கிறோம். 'பார்பி அண்டு த ராக்கர்ஸ்’, 'பிரின்சஸ் சார்ம் ஸ்கூல்’, அப்புறம்... 'பார்பி அண்டு த டைமண்ட் கேஸல்’ என எல்லாமே தேவதைக் கதைகள்.

பார்பி: அட! என்னைப் பற்றி நிறையவே தெரிஞ்சு வெச்சிருக்கியே!

ரோஷிணி: கதைக்கு உள்ளே இருக்கிற உன்னைப் பற்றி, வெளியே இருக்கிற எங்களுக்கு நிறையவே தெரியும். என் ஃப்ரண்டு ஒருத்தி, உன் கார்ட்டூன் படம் டி.வில வந்தா... ஸ்கூலுக்கு லீவு போட்டுடுவா. நீ முதலில் அறிமுகமானது பொம்மையா தானே?

பார்பி: கரெக்டா சொன்னே! 1959-ல் அமெரிக்க பொம்மை நிறுவனமான மாட்டல் இன்க், சர்வதேச பொம்மைக் கண்காட்சியில் என்னை அறிமுகம் செய்தது. என்னை உருவாக்கியவர், கிரியேட்டர் ரூத் ஹேண்ட்லர் (ஸிutலீ பிணீஸீபீறீமீக்ஷீ) என்ற அம்மையார். ஒரு ஜெர்மன் பொம்மையால் ஈர்க்கப்பட்டு, என்னை உருவாக்கினாங்க.

ரோஷிணி: முதல் கார்ட்டூன் திரைப் படமா எப்போ வந்தே பார்பி?

பார்பி: 'பார்பி அண்டு தி ராக்கர்ஸ்’தான் முதல் படம். 1987-ல் வெளிவந்தது. யுனிவர்சல் ஸ்டூடியோஸ் தயாரிப்பு. பார்பி நாவல்கள் கூட உண்டு. அதன் ஆசிரியர் மேட்டல் (விணீttமீறீ). 1992 வரை திரையரங்குகளில் மூன்று சூப்பர் ஹிட் படங்களில் தோன்றினேன்.

ரோஷிணி: கம்ப்யூட்டர் அனிமேஷன் கார்ட்டூனாக வந்தது..?

பார்பி: 2001-ல் 'பார்பி நட்கிராக்கர்.’ அப்புறம், 'பிரின்சஸ் சார்ம் ஸ்கூல்.’

ரோஷிணி: அதில் மந்திர பிரேஸ்லெட் போட்டுக்கிட்டு நீ டைரியில் எழுதுவது எல்லாம் நிஜத்தில் நடக்கும். உனக்கு தொல்லை தரும் ராக்வெல் ஒழியும்போது சந்தோசமாக இருந்தது. நடனப் போட்டியில் கெவினோடு நீ ஆடும் டான்ஸ் ரொம்ப ஃபேமஸ்.

பார்பி: அதில் இருந்து இதுவரை 23 முழு நீள கார்ட்டூன் படங்கள் வெளிவந்துள்ளன.

ரோஷிணி: அப்புறம் அந்த... 'பார்பி அண்டு தி டைமண்ட் காஸல்’-ல் வருகிற ஸ்லைடர் டிராகன், லைடாவில்லி, அவர்களைப் பந்தாடும் தோழி லியாவா, குட்டி நாய்ங்க... எல்லாமே பிடிக்கும்.

பார்பி: கார்ட்டூன் படங்கள், திரை அனிமேஷன், இவற்றோடு... பார்பி வீடியோ கேம்ஸ் கூட உண்டு.

ரோஷிணி: என் ஃப்ரண்டு தன் பிறந்த நாளுக்கு பார்பி ஸ்கர்ட் வாங்கினாள் தெரியுமா?

பார்பி: ஆனா, என்னை மாதிரி உடம்பை ஸ்லிம்மா வைத்துக்கொள்ள பல பேர் சாப்பிடாமயே இருக்கிறதா கேள்விப்பட்டேன்... அது நல்லது இல்லை. தேவையான அளவு சாப்பிடணும். நல்ல உடற்பயிற்சி, விளையாட்டு இவையே தேவை!

ரோஷிணி: தேங்க்ஸ் பார்பி... உன் அட்வைஸுக்கும் நன்றி!