Published:Updated:

ஆமை ஓட்டம்!

ஆமை ஓட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
ஆமை ஓட்டம்!

Follow up

ஆமை ஓட்டம்!

Follow up

Published:Updated:
ஆமை ஓட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
ஆமை ஓட்டம்!

ண்டே விடியற்காலை அஞ்சு மணிக்கே சென்னை மெரினா கடற்கரைக்கு வந்து, அலைகளுக்கு குட்மார்னிங் சொல்லிட்டு இருந்தாங்க அந்தச் சுட்டிகள்.

ஆமை ஓட்டம்!

‘Save A Turtle’ என்ற அமைப்பு நடத்திய, ஆமைகள் விழிப்புஉணர்வு நிகழ்ச்சியில், கடற்கரை மணலில், அழகழகான ஆமைகளைச் செய்த சுட்டிகளின் அடுத்த பாய்ச்சல்தான், ஆமைகளைக் காக்கும் மாரத்தான்.

பிப்ரவரி 21, காலை 6 மணிக்கு ஆரம்பிச்சது இந்த மாரத்தான். 5 கிலோமீட்டர், 3 கிலோமீட்டர், 1 கிலோமீட்டர் என மூன்று வகையான போட்டிகள். அதில், 500-க்கும் அதிகமான சுட்டிகள் கலந்துக்கிட்டதுதான் ஹைலைட்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆமை ஓட்டம்!

கொஞ்ச தூரம் ஓடி டயர்டான சுட்டிகளை, பேரன்ட்ஸ் தூக்கிக்கிட்டு ஓடினது பார்க்கவே செம ஜாலியா இருந்துச்சு. சில சுட்டிகள் டார்கெட் தூரத்தை சக்சஸ்ஃபுல்லா ஓடி ஜெயிச்சாங்க. போட்டியில் கலந்துகிட்ட எல்லா சுட்டிகளுக்கும் மெடலும் சர்ட்டிஃபிக்கேட்டும் கொடுத்தாங்க.

“மை நேம் ஈஸ் ஆருஷி. ‘நாளைக்கு மார்னிங், ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காப்பாற்ற மாரத்தானில் ஓடப்போறேன். நீயும் வர்றியா?’னு என்னோட டாடி கேட்டார். ‘ஆமை ஸ்லோவாதானே போகும். நாம ஏன் ஓடணும்?’னு கேட்டேன். ‘நாளைக்கு வந்து பாரு’னு சொன்னார். நான் ஆமைகளை போட்டோவுலதான் பாத்திருக்கேன். ஆமைகள் அழிஞ்சுட்டு வருது, அதைக் காப்பாத்தணும்னு சொன்னாங்க. என் பேரு இனிமே ஆலிவ் ஆருஷி. ஐ யம் ஆல்சோ கோயிங் டு சேவ் த டர்ட்டில்ஸ்” என்று குஷியாக குதித்தார் ஆருஷி.

- பா.நரேஷ், படங்கள்: ம.நவீன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism