Published:Updated:

சென்றதும் வென்றதும்! - 8

சென்றதும் வென்றதும்! - 8
பிரீமியம் ஸ்டோரி
சென்றதும் வென்றதும்! - 8

உலகை மாற்றிய கடல் பயணங்கள்மருதன், ஓவியங்கள்:ஷண்முகவேல்

சென்றதும் வென்றதும்! - 8

உலகை மாற்றிய கடல் பயணங்கள்மருதன், ஓவியங்கள்:ஷண்முகவேல்

Published:Updated:
சென்றதும் வென்றதும்! - 8
பிரீமியம் ஸ்டோரி
சென்றதும் வென்றதும்! - 8

மெக்கல்லன்

ரண்மனை ஊழியனாக இருந்த மெக்கல்லனின் கப்பல் பயணக் கனவு 1505-ல்  நிறைவேறி, அவரது முதல் பயணமாக  இந்தியாவில் கால் பதித்தார்.

‘இனி, நாம் அரண்மனை ஊழியன் அல்ல. யாருக்கும் சலாம் போடவேண்டியது இல்லை’ என மகிழ்ச்சியோடு  இந்தியாவில் இறங்கும்போதே, சிலர் கத்தியோடு ஓடி வந்தார்கள். திகைத்து நின்றார் மெக்கல்லன். அவர்கள் அரேபியா, வெனிஸ் நாடுகளைச் சேர்ந்தவர்கள். ‘இந்தியா எனக்குத்தான், இல்லை எனக்குத்தான்’ எனக் கத்திக்கொண்டே  மெக்கல்லன் மீது பாய்ந்தார்கள். சண்டைபோட்டுத் தப்பித்தார். கடல் பயணம் என்றால், உல்லாசம் மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட என்பது முதல் பயணத்திலேயே மெக்கல்லனுக்குப் புரிந்துவிட்டது.

சென்றதும் வென்றதும்! - 8

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனாலும், அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆசை தீர இந்தியப் பெருங்கடலை ஒட்டிய பிரதேசங்களில் சுற்றிவந்தார். அடுத்தடுத்து பல வாய்ப்புகள் வந்தன. எதையும் விட்டுவைக்கவில்லை. ஆண்டுக்கணக்கில் சுற்றிச் சுற்றி வந்ததால், உலகம் பற்றியும் அதன் புவியியல் அமைப்பு பற்றியும் நன்றாகத் தெரிந்தது.

இந்தத் துணிச்சலில், மெக்கல்லன் ஒரு நாள் கனவு காண ஆரம்பித்தார். ‘எல்லோரும் செல்லும் வழியில் இல்லாமல், புதிய வழியில் ஸ்பைஸ் தீவுகளுக்குச்  சென்றால் என்ன? பொதுவாக, தென் கிழக்கு ஆசியாவுக்கு எல்லோரும் கிழக்கு நோக்கி பயணம் செய்வார்கள். அதுவே பாதுகாப்பானது. எனக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம்? மற்றவர்களைக் காட்டிலும் வித்தியாசமாக இருக்க வேண்டாமா? நாம் ஏன் மேற்கில் போகக் கூடாது?’ என நினைத்தார்.

இந்தத் திட்டத்தை தன் நண்பர்களிடம் சொன்னபோது, விழுந்து விழுந்து சிரித்தார்கள். ‘‘வித்தியாசமாகச் சிந்திப்பது முக்கியம்தான். அதற்காக இப்படியா? வலது பக்கம் போனால்தான் ஆசியா வரும் என்கிறபோது, இடது பக்கம் போனால் தொலைந்துபோவாய். இவ்வளவு ஆண்டுகள் இதைக்கூட கற்றுக்கொள்ளவில்லையா?’’ எனக் கேலி பேசினார்கள்.

‘‘புவியியல் புரியாமல் பேசுகிறீர்கள். வலது பக்கத்தில் உள்ள ஓரிடத்துக்கு, இடது பக்கத்தில் இருந்தும் போகலாம். இதுதான் புதிய விதி’’ என அசராமல் சொன்னார் மெக்கல்லன்.

நண்பர்களுக்குப் புரியவில்லை. புவியியல் துறை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துகொண்டிருந்த காலகட்டம் அது. பூமியானது தட்டையாக இருக்கும், நீளமாகச் சென்றுகொண்டே இருந்தால் ஓரிடத்தில் முடிவடையும் என்று நம்பினார்கள். பூமி தட்டையல்ல, உருண்டை எனச் சிலர் சொன்னபோது, விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

‘‘பூமி உருண்டை என்றால், நாம் வழுக்கி விழுந்திருக்க வேண்டுமே, ஏன் அப்படி நடக்கவில்லை?’’ எனக் கேள்வி கேட்டார்கள். இந்தக் கிண்டலைப் பொருட்படுத்தாமல், பூமி நிச்சயம் உருண்டைதான் எனச் சிலர் நம்பினார்கள். அதில், மெக்கல்லனும் ஒருவர். அதனால்தான், ‘எல்லோரும்  கிழக்கில் போனால், நான் மேற்கில் போவேன்’ என்றார்.

சொன்னதோடு நிறுத்தாமல் செயல்படுத்தவும் நினைத்தார்.  நம்பிக்கை, துணிச்சல், திறன் எல்லாமே அவரிடம் இருந்தது. இல்லாதது பணம் ஒன்றுதான். ‘புதிய வழியைக் கண்டுபிடித்தால், பலன் அடையப்போவது என்னுடைய போர்ச்சுக்கல் நாடும் மன்னரும்தானே’ என்று நம்பிக்கையுடன் மன்னரைச் சென்று பார்த்தார் மெக்கல்லன்.

அவரை ஏற இறங்கப் பார்த்த மன்னர், ‘‘சரி, அப்புறம் பார்க்கலாம்’’ என்று போய்விட்டார்.

மெக்கல்லன் இதை எதிர்பார்க்கவில்லை. ‘என்னைப் புறக்கணித்த இந்த மன்னரும் வேண்டாம், இந்த போர்ச்சுக்கலும் வேண்டாம்’ எனக் கோபத்துடன் ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றார்.

ஸ்பெயின் மன்னர் மெக்கல்லனை ஆதரிக்க முன்வந்தார். முன்பு இதேபோன்ற திட்டத்தோடு ஸ்பெயின் மன்னர் ஃபெர்டினாண்டை கொலம்பஸ் அணுகியபோது, அவரை ஆதரித்தார். தற்போது, மெக்கல்லனுக்கு ஆதரவு தந்தவர்  ஃபெர்டினாண்டின் பேரன்.

10 ஆகஸ்ட் 1519 அன்று மெக்கல்லனின் உலகைச் சுற்றும் பயணம் ஆரம்பமானது. ‘டிரினிடாட்’ என்ற கப்பலை அவர் செலுத்தினார். கூடவே,  நான்கு கப்பல்கள் சென்றன. அவற்றில், இருநூறுக்கும் அதிகமான பணியாளர்கள் இருந்தார்கள். இரண்டு ஆண்டுகளுக்கான உணவும் ஏராளமான ஆயுதங்களும் இருந்தன.

தென் அமெரிக்காவை அடைந்த பிறகு, மேற்கொண்டு நகர்வதற்கான வழியை ஆராயத் தொடங்கினார். இதற்கிடையில் தங்கியிருந்த இடத்தில் இருந்து எதிர்ப்புகள் வரத் தொடங்கின. மெக்கல்லனின் கப்பலில் இருந்த சிலரே கலகம் செய்ய ஆரம்பித்தார்கள். அவர்களைக் கடுமையான முறையில் ஒடுக்கினார் மெக்கல்லன்.

சென்றதும் வென்றதும்! - 8

சற்றே சுதாரித்த பிறகு, தன்னுடன் வந்த ‘சாண்டியாகோ’ என்னும் கப்பலை அனுப்பிவைத்தார். அந்தக் கப்பல் வரவேயில்லை. கடுமையான சூறாவளிப் புயலில் சிக்கி சின்னாபின்னமானது. ‘சரி வாருங்கள். நாமே வழியைக் கண்டுபிடிப்போம்’ என்றார் மெக்கல்லன்.

ஆனால், முந்தைய கப்பலைப் போல மூழ்கிவிட்டால் என்ன செய்வது என மற்றவர்கள் பயந்தார்கள். மெக்கல்லனை நம்பிப் பயனில்லை, ஊர் திரும்பிவிடலாம் எனப் பலரும் முடிவெடுத்தார்கள்.

21 அக்டோபர் 1520-ல், ஒரு புதிய பாதையைத் துணிந்து தேர்ந்தெடுத்து. கப்பலைச் செலுத்தத் தொடங்கினார். இந்தப் பகுதி இப்போது, ‘மெக்கல்லன் ஜலசந்தி’ என்று அழைக்கப்படுகிறது.

போகும் வழியில் பெருங்கடல் ஒன்று குறிக்கிட்டது. சூறாவளி, புயல் என்றில்லாமல் அமைதியாக இருந்த அந்தக் கடலுக்கு, ‘மார் பசிஃபோ’ என்று பெயரிட்டார். இன்று அது, ‘பசிபிக் கடல்’ என்று அழைக்கப்படுகிறது. பசிபிக் என்றால், ‘அமைதி’ என்று பொருள்.

அடுத்து, பிலிப்பைன்ஸ் தீவுக்குச் சென்றார் மெக்கல்லன். தென் அமெரிக்காவைத் தாண்டி யாருமே வந்திராத நிலையில், பிலிப்பைன்ஸில் காலடி எடுத்துவைத்த முதல் ஐரோப்பியர் மெக்கல்லன்தான். இனி, ஸ்பைஸ் தீவுகள் கைக்கு எட்டும் தூரம்தான் என உற்சாகமானார்.

செர்பூ எனும் தீவை 27 ஏப்ரல் 1521-ல்  அடைந்தார் மெக்கல்லன். அங்கிருந்த பழங்குடிகள் எதிர்த்தபோதும் அலட்டிக்கொள்ளவில்லை. தன்னிடம் உள்ள நவீன ஆயுதங்களுக்கு முன்னால், இவர்களின் வில்லும் அம்பும் ஒரு துரும்பு என உறுமியபடி தாக்குதலை ஆரம்பித்தார்.

அப்போது, ‘விஷ்க்’ எனக் காற்றைக் கிழித்துக்கொண்டு வந்த அம்பு, மெக்கல்லனைத் தாக்கியது. ஆ..! என அலறியவாறு கீழே விழுந்தவர், எழுந்திருக்கவே இல்லை.

ஆம், உலகை வலம் வந்த அந்த சாகச நாயகனின் உயிரை, நஞ்சு தடவிய அந்த அம்பு பிடுங்கிக்கொண்டது.

(பயணம் தொடரும்...)

சென்றதும் வென்றதும்! - 8
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism