'அடி தூள்' பிரின்ஸி

‘‘ஒருநாள் ஸ்கூல்ல, தோழியோடு சண்டை. ‘இனிமே, என்கிட்ட பேசாதே’னு சொல்லிட்டா. ரொம்ப வருத்தமாயிடுச்சு. வீட்டுக்கு வந்து டிரம்ஸ் வாசிக்க ஆரம்பிச்சுட்டேன். இன்னொரு முறை, பெரிய பாராட்டு கிடைச்சது. வீட்டுக்கு வந்தும் டிரம்ஸ் வாசிக்க ஆரம்பிச்சுட்டேன். சந்தோஷம், வருத்தம், கோபம்னு எதுவா இருந்தாலும் எனக்கு டிரம்ஸ்தான்’’ என அதிரடியாகச் சிரிக்கிறார் பிரின்ஸி.

சென்னை, ஹோலி ஏஞ்சல் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பிரின்ஸி, டிரம்ஸ் வாசிக்க ஆரம்பித்தால், சுற்றி இருப்பவர்கள் எழுந்து ஆட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

பொதுவா, கேர்ள்ஸ் மெலோடியான மியூஸிக்தானே விரும்புவாங்க. பிரின்ஸி எப்படி டிரம்ஸைப் பிடிச்சார்?

“அதுக்குக் காரணம், என் அப்பா பாஸ்கர். ‘பாடும் பறவைகள்’ என்ற மியூஸிக் ட்ரூப் வெச்சிருக்கார். நான் குட்டிப் பாப்பாவா இருக்கும்போதே அப்பா எனக்கு டிரம்ஸ் வாசிச்சுக் காட்டினாதான், சோறே சாப்பிடுவேன். வீட்டில் அவர் பிராக்டிஸ் செய்றதைக் கவனிப்பேன். அவர் போனதும், அதையே வாசிக்க ட்ரை பண்ணுவேன்’’ என்கிறார்.

அப்படினா பிரின்ஸிக்கு அப்பாதான் குருவா?

‘‘அப்படியும் சொல்லலாம். கேஜி கிளாஸ் டீச்சர்னு வெச்சுக்கோங்களேன். முதல்ல அப்பா. இப்போ, ‘நாகிஸ் ராகாலயா அகாடமி’ கிளாஸுக்குப் போறேன். தினமும் ஒரு மணி நேரம் டிரம்ஸ் முன்னாடி உட்கார்ந்துடுவேன். அப்புறம்தான் புத்தகம், வீட்டுப் பாடம் எல்லாம்’’ என்றபடி அப்பாவைப் பார்த்து சிரிக்கிறார்.

பிரின்ஸி இதுவரை எத்தனை நிகழ்ச்சிகளில் தனது அதிரடியால் எல்லோரையும் ஆட வைத்திருக்கிறார்?

‘‘ம்ம்ம்ம்ம்ம்... நீங்க என்னை பேட்டி எடுக்க வருவீங்கன்னு தெரிஞ்சிருந்தா, கவுன்ட் பண்ணி வெச்சிருப்பேனே. மேரேஜ், கோயில் திருவிழா, கார்ப்பரேட் கம்பெனி என ஒரு முப்பது ஃபங்ஷன்ல வாசிச்சு இருக்கேன். நண்பர்களுக்கும் ஸ்கூல்ல வாசிச்சதையும் கணக்கில் சேர்க்கலை. சமீபத்தில், ராடன் மீடியா ஃபங்ஷன்ல வாசிச்சேன்.’’

எந்தக் கூட்டத்திலாவது வாசிக்கும்போது பிரின்ஸிக்கு பயம் வந்திருக்கா?

‘‘எதுக்கு பயம்? ஒரு விஷயத்தை ஆர்வமா செய்யும்போது, எவ்வளவு கூட்டமா இருந்தாலும் பயப்படவே வேணாம். ஐ லவ் டிரம்ஸ்.’’

- மு.சித்தார்த், பா.நரேஷ் படம்: அ.அபிரக்க்ஷன்