Published:Updated:

ரூல்ஸை ஜாலியாக மாற்றுங்கள்!

ரூல்ஸை ஜாலியாக மாற்றுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ரூல்ஸை ஜாலியாக மாற்றுங்கள்!

ரூல்ஸை ஜாலியாக மாற்றுங்கள்!

ரூல்ஸை ஜாலியாக மாற்றுங்கள்!

ரூல்ஸை ஜாலியாக மாற்றுங்கள்!

Published:Updated:
ரூல்ஸை ஜாலியாக மாற்றுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ரூல்ஸை ஜாலியாக மாற்றுங்கள்!

ந்த ஆண்டு ‘பேனா பிடிக்கலாம் பின்னி எடுக்கலாம்’ திட்டம் மூலம், சுட்டி விகடனில் பின்னி எடுத்துக்கொண்டிருக்கும் சுட்டி ஸ்டார்களுக்கான இரண்டாவது பயிற்சி முகாம் சென்னையில் நடந்தது. முகம் நிறைய மகிழ்ச்சியும், மனம் நிறைய ஆர்வத்துடனும் திரண்டார்கள் சுட்டி ஸ்டார்ஸ்.

ரூல்ஸை ஜாலியாக மாற்றுங்கள்!

வெல்கம் சீனியர் ஸ்டார்ஸ்!

முதல் நிகழ்ச்சியாக, சில ஆண்டுகளுக்கு முன்பு சுட்டி ஸ்டார்களாக இருந்த இரண்டு பேர், வெல்கம் டிரிங்க் போல தங்கள் அனுபவத்தை உற்சாகமாகச் சொன்னார்கள். ஒருவர், சுட்டி விகடனில் ‘குறும்புக்காரன் டைரி’ எழுதும் விக்னேஷ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரூல்ஸை ஜாலியாக மாற்றுங்கள்!

‘‘என் சொந்த ஊர் தேனி. என் வகுப்பில்   பாதிப் பேருக்குத் தெரியாமல் இருந்த என்னை, ஸ்கூல் முழுக்க தெரியவெச்சது, சுட்டி விகடனின் பயிற்சிதான். எனக்குள் இருந்த தயக்கம், பயம் எல்லாவற்றையும் விரட்டிஅடிச்சது. காலேஜ் படிக்கும்போது, விகடனின் மாணவப் பத்திரிகையாளராகவும் ஜொலிக்கவெச்சது. அந்த வாய்ப்பு உங்களுக்கும் கிடைச்சு இருக்கு. இது, உங்கள் ஒவ்வொருத்தரையும் ஸ்மார்ட்டாக மாற்றும்” என்ற விக்னேஷ், SMART என்ற வார்த்தையின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஜாலியான அர்த்தங்களைச் சொன்னார்.

ரூல்ஸை ஜாலியாக மாற்றுங்கள்!

முன்னாள் சுட்டி ஸ்டாராக இருந்து, இந்த ஆண்டு மாணவப் பத்திரிகையாளராக இருக்கும்  நந்திதா, ‘‘சீனியர் சுட்டி ஸ்டாராக ஆகிட்டாலும் இப்பவும் என்னை சுட்டி ஸ்டாராகவே ஃபீல் பண்றேன். அந்த அளவுக்கு டைம் மேனேஜ்மென்ட், அடுத்தவங்களை அப்ரோச் பண்ற விதம், ப்ரசென்ஸ் ஆஃப் மைண்டு என நிறைய நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன்’’ என்றவர், ஒரு படைப்பை எப்படி உருவாக்கலாம் என்பதை அழகாக எடுத்துச் சொன்னார்.

உன்னை அறிந்தால்!

‘‘உங்களுக்கு ரயிலில் போகப் பிடிக்குமா? இப்போ, இந்த ஹாலை ரயிலா நினைச்சுக்கங்க. எல்லோரும் ‘ஜிக் புக் ஜிக் புக்’னு டிராவல் பண்ணிக்கிட்டே ஜாலியா பேசப்போறோம்’’ என்றபடி, சுட்டி ஸ்டார்களை புதிய உலகத்துக்கு அழைத்துச் சென்றார், குழந்தைகள் திறன் மேம்பாட்டு நிபுணர் வேள் பாரி.

ரூல்ஸை ஜாலியாக மாற்றுங்கள்!

‘‘ஸ்கூல், வீடு என எங்கே பார்த்தாலும் ரூல்ஸ் சொல்லி படுத்தறாங்க. உங்களுக்கு  எந்த ரூல்ஸ் பிடிக்கலை? மனம் திறந்து சொல்லுங்க’’ என்றார்.

ஹோம்வொர்க், சத்தம் போட்டு சிரிக்காதே, டி.வி பார்க்காதே, பதிலுக்குப் பதில் பேசாதே எனப் பல ரூல்ஸ்களைப் பிடிக்கலை என்றார்கள் சுட்டி ஸ்டார்ஸ்.

‘‘நீங்க சொன்னதில் எவையெல்லாம் உண்மையிலேயே  ரூல்ஸ்? நமக்குப் பிடிக்காமல் போனதாலே, நல்ல விஷயங்களையும் நாம ரூல்ஸா நினைச்சுக்கிறோம். அதனாலேயே, வெறுக்கிறோம். அதை பிடிச்சதா மாற்றிவிட்டால், நம்ம லைஃப் எப்படி எல்லாம் இருக்கும்’’ என ஆரம்பித்து, உதாரணங்களோடு பேசினார் வேள் பாரி.

கனவும் குறிக்கோளும்!

கனவுக்கும் குறிக்கோளுக்கும் என்ன வித்தியாசம்? கனவை குறிக்கோளாக மாற்றுவது எப்படி? கதையைச் சொல்லி அறிவை வளர்த்துக்கொள்ள முடியுமா? என ஒவ்வொரு விஷயத்தையும் சின்னச்சின்னப் பயிற்சிகள் மூலம் எளிமையாகப் புரியவைத்தார்.

ரூல்ஸை ஜாலியாக மாற்றுங்கள்!

உதாரணமாக, சுட்டி ஸ்டார்களை ஐந்து  குழுக்களாகப் பிரித்தார். யானை, ரோஸ் மில்க், ஸ்மார்ட்போன் என சில வார்த்தைகளைக் கொடுத்தார். ‘‘உங்களுக்கு ஒரு நிமிடம்தான் டைம். அதுக்குள்ளே உங்க டீமோடு பேசி, ஒரு கதையை ரெடி பண்ணணும். அந்தக் கதையில், இந்த வார்த்தைகள் வரணும். கதையை முப்பதே செகண்ட்ஸ்ல சொல்லணும்’’ என்றார்.

ரூல்ஸை ஜாலியாக மாற்றுங்கள்!

சவாலை ஏற்றுக்கொண்டு, ஐந்து குழுக்களும் க்யூட்டான ஐந்து கதைகளைச் சொன்னார்கள்.அடுத்து, மீண்டும் ஒரு நிமிட அவகாசத்தில், வேறு சில வார்த்தைகளைக் கொடுத்தார். ஒவ்வொரு டீமில் இருந்தும் சிலரை வேறு டீமுக்கு மாற்றினார். திடீரென வார்த்தைகளையும் மாற்றினார்். சுட்டி ஸ்டார்கள், அப்போதும் கதைகளைச் சொல்லி அசத்தினார்கள்.

‘‘ஒரு நிமிடத்தில் எப்படி கதையை உருவாக்க முடியும்? அரை நிமிடத்தில் எப்படிச் சொல்ல முடியும்? திடீர்னு வார்த்தைகள் மாறின. டீம் ஆட்களும் மாறினார்கள். இவ்வளவு நெருக்கடி இருந்தும் எப்படிச் சொல்ல முடிஞ்சது? ஏன்னா, அதையெல்லாம் நீங்க நெருக்கடியாகவே நினைக்காமல், ஜாலியா செய்தீங்க. லைஃப்லயும் அப்படித்தான். ரூல்ஸாக, நெருக்கடியாக நினைக்காமல் செய்தால், எதையும் சிறப்பாகச்  செய்யலாம்’’ என்றார் வேள் பாரி.

ரூல்ஸை ஜாலியாக மாற்றுங்கள்!

மற்றொரு ஜாலி சவாலாக, கொலாஜ் வொர்க் கொடுக்கப்பட்டது. தங்கள் பெயர், தன்னிடம் உள்ள திறமை,  தனது கனவு, பலம், பலவீனம் ஆகியவற்றைப் படங்களாக ஒட்டியோ, வரைந்தோ காண்பிக்க வேண்டும். ஒரு எழுத்துகூட இருக்கக் கூடாது என்பதுதான் அந்தச் சவால்.

விந்தையும் தந்திரமும்!

ரூல்ஸை ஜாலியாக மாற்றுங்கள்!

உணவு இடைவேளைக்குப் பிறகு வந்தார், ஹர்ஷித். ‘மிட் பிரெய்ன் ஆக்டிவேஷன்’ என்ற பயிற்சி மூலம், கண்களைக் கட்டிக்கொண்டே படிப்பது, நிறங்களைச் சொல்வது, ஸ்மார்ட்போனில் விளையாடுவது என வியக்கவைத்தார். அடுத்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த சேதுராமன், ‘மந்திரமா தந்திரமா?’ மூலம், மேஜிக் ஷோ நடத்தி, அனைவரையும் சுண்டி இழுத்தார். அதில் உள்ள தந்திரங்களையும் சொல்லி, எதையும் அறிவியல் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும் என்றார்.

மகிழ்வும் நெகிழ்வும்!

இதற்கிடையில், பெற்றோர்களுக்கும் தனியாக ஒரு சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அதில், உங்கள் குழந்தைகளை எவ்வாறு புரிந்துகொள்வது என்பது குறித்துப் பேசினார் வேள் பாரி. பிறகு, பெற்றோர்களின் அன்பு, அர்ப்பணிப்பு குறித்து சுட்டி ஸ்டார்களிடம் பேசினார்.

ரூல்ஸை ஜாலியாக மாற்றுங்கள்!

இறுதியாக, கொலாஜ் ஓவியங்களைப் பார்த்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் திறமைகள், கனவுகளைப் புரிந்து கொண்டார்கள்.

ரூல்ஸை ஜாலியாக மாற்றுங்கள்!

தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட சுட்டி ஸ்டார்களில் ஒருவரான அபிராமி, ‘‘இந்த நிகழ்ச்சியை நான் எப்பவும் மறக்க மாட்டேன். எனக்கு என் அப்பா, அம்மாவை ரொம்பப் பிடிக்கும். அவங்க எனக்குப் பிடிச்ச எத்தனையோ விஷயங்களைச் செய்திருக்காங்க. ஆனால், ஒரு நாள்கூட அவங்ககிட்டே ஐ லவ் யூ சொன்னது இல்லை. இன்னைக்கு அவங்ககிட்டே போய், ‘ஐ லவ் யூ அம்மா, ஐ லவ் யூ அப்பா’னு சொன்னபோது அழுகையே வந்துருச்சு’’ என்றார் நெகிழ்வுடன்.

அந்த மகிழ்வும் நெகிழ்வும் தொடரட்டும்!

- சுப.தமிழினியன், பா.நரேஷ், படங்கள்: தி.ஹரிஹரன், பா.அபிரக்‌ஷன், ஜெ.விக்னேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism