பொது அறிவு
FA பக்கங்கள்
Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

நின்றுகொண்டே உட்காரலாம்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

நின்றுகொண்டே பல மணி நேரம் வேலை செய்பவர்களுக்காகவே, புதுமையான ‘ஆர்க்கெலிஸ்  இருக்கை’ உருவாக்கப்பட்டுள்ளது. இதைக் கால்களில் அணிந்துகொண்டால், நிற்கும்போதும் உட்கார்ந்து இருப்பது போல இருக்கும். கால், தொடைகளில் வலி இருக்காது. எந்த நிலையில் நிற்க வேண்டும் என்றாலும், அதற்கேற்ப வளைத்துக்கொள்ளலாம். இது, டோ மெட்டல் மற்றும் கார்பனால் ஆனது. ஜப்பானைச் சேர்ந்த ‘நிட்டோ’ நிறுவனம், பல்வேறு அளவுகளில் தயாரித்திருக்கும் இந்த இருக்கை, விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சொர்க்கப் பறவை!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

பறவைகள் பலவிதம். ஆனால், ‘பேர்ட்ஸ் ஆஃப் பாரடைஸ்’ எனப்படும் பறவைகள், நியூகினியாவிலும் அதன் அருகில் உள்ள  தீவுகளிலும் காணப்படுகின்றன. உலகிலேயே அலங்காரமான பறவை இதுதான்.  தலையும் கழுத்தும் பளீர் மஞ்சள் நிறத்திலும், தொண்டைப் பகுதி பச்சை நிறத்திலும், உடலின் பிற பாகங்கள் மர நிறத்தில் இருக்கும். இறக்கைகளின் விளிம்பில், தகதகவென தங்க நிறச் சிறகுகள் தொங்கும். சிறகுகளின் முனை மட்டும் ரத்தச் சிவப்பில் இருக்கும். இவ்வளவு அழகான பறவை உலகில்  வேறு எங்கும் கிடையாது. எனவே, இதற்கு ‘சொர்க்கப் பறவை’ என்று பெயர் வைத்துள்ளனர்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

வியப்பூட்டும் பாலம்! 

சுட்டி ஸ்டார் நியூஸ்!

வளைந்து வளைந்து செல்லும் மலைப் பாதைகளைப்  பார்த்திருப்போம். ஆனால்,  உலகில் சில பாலங்கள்  வித்தியாசமும் த்ரில்லும் நிறைந்ததாக உள்ளன. அவற்றுள் மிக உயரமான பாலம், மில்லாவ் வயாடக்ட் (Millau Viaduct).  பிரான்ஸ் நாட்டில் ஓடும் டார்ன் ஆற்றின் குறுக்கே கட்டப் பட்டுள்ளது. இது, பள்ளத்தாக்குகள் நிறைந்த பகுதி. இந்தப் பாலத்தின் உயரம், 1,025 அடிகள். நீளம், 8,071 அடிகள். 2004-ல் திறக்கப்பட்ட இந்தப் பாலம், வியப்பூட்டும்  கட்டமைப்புக்காக விருது பெற்றுள்ளது.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

குகைக்குள் ஓவியம்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

எரிமலை வெடித்த குகைகளுக்குள் 36,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்கள் வரைந்த அற்புதமான ஓவியங்களை, தொல்பொருள்துறை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  தென் கிழக்கு பிரான்ஸில் உள்ள Ardeche பகுதியில் Chauvet என்ற பழங்காலக் குகைகளை 1994-ம் ஆண்டு கண்டுபிடித்தனர். இந்தப் பகுதியில், ஒன்றுக்கு மேற்பட்ட எரிமலைகள் வெடித்ததற்கான அடையாளங்கள் உள்ளன. குகைகளில் வாழ்ந்தவர்கள், யானை, புலி, சிங்கம், குரங்கு உள்ளிட்ட விலங்குகளின் உருவங்களை சுவர்களில் வரைந்துள்ளனர்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

ஹிஜார்பி பொம்மை!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

பொ்ம்மைகளைவைத்து விளையாடுவதும், அலங்காரம் செய்து ரசிப்பதும் ஜாலிதான்.  அப்படி, நைஜீரியாவைச் சேர்ந்த ஹனீபா ஆதம் என்கிற பெண், பார்பி பொம்மைகளுக்கு உடல் முழுவதும் மறைக்கும்படி வித்தியாசமாக ஆடை அணிவித்திருக்கிறார். பார்பி பொம்மையின் தலையில் முக்காடுபோட்டு, ‘ஹிஜார்பி’ என்று பெயர்வைத்து, இன்ஸ்டாகிராமில் கணக்கும் துவக்கிவிட்டார். இதில் வெளியிடப்படும் புகைப்படங்கள், அதிக லைக்ஸ் அள்ளுகின்றன.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

ஜப்பானில் கொலு!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

நம் ஊர் கொலு பார்த்திருப்பீர்கள். இதுபோல ஜப்பானிலும் கொலு வைக்கிறார்கள். அங்கு உள்ள கொனோசு ரயில் நிலையத்தில், பிரமிட் வடிவில் பொம்மைகளை அடுக்கிவைக்கிறார்கள். இதற்கு, ‘ஹினா மட்சுரி’ (Hina Matsuri) என்று பெயர். சிவப்பு நிறத் துணியை விரித்து, மேல் வரிசையில், ஹேயான் என்ற ராஜ குடும்ப உடைகள் அணிவித்த பொம்மைகளை வைக்கிறார்கள். அரசன் கையில் செங்கோல், அரசி கையில் விசிறி,  பக்கத்தில் அலங்கார விளக்குகள், இனிப்புகள் வைப்பதற்கான ஸ்டாண்டு, இசைக் கலைஞர்கள், மந்திரி, பாதுகாவலர்கள் என 1,830 பொம்மைகள் வைக்கப்படும். பெண் குழந்தைகளின் வளமான எதிர்காலத்துக்காக இந்த விழா கொண்டாடப்படுகிறது.

சுட்டி ஸ்டார் நியூஸ்!