Published:Updated:

கிடிக்கிப்பிடி கும்தே அடி!

கிடிக்கிப்பிடி கும்தே அடி!
பிரீமியம் ஸ்டோரி
கிடிக்கிப்பிடி கும்தே அடி!

கராத்தே குயின்

கிடிக்கிப்பிடி கும்தே அடி!

கராத்தே குயின்

Published:Updated:
கிடிக்கிப்பிடி கும்தே அடி!
பிரீமியம் ஸ்டோரி
கிடிக்கிப்பிடி கும்தே அடி!

‘‘முதல்ல என் அண்ணாதான் கராத்தே கிளாஸுக்குப் போனார். ‘ரொம்ப ஜாலியா இருக்கு. நீயும் வர்றியா?’னு கேட்டார். ‘கராத்தே கிளாஸ்ல என்ன ஜாலி’னு போகலை. ஒரு நாள் டி.வி-யில சோட்டா பீம் பார்த்துட்டு இருந்தோம். அதுல, சோட்டா பீம் சூப்பரா கராத்தே ஃபைட் பண்ணுவான். ‘நீயும் கராத்தே கிளாஸுக்கு வந்தா, சோட்டா பீம் மாதிரி ஃப்ரெண்ட்ஸைக்  காப்பாத்தலாம்னு சொல்ல, அடுத்த நாளே சேர்ந்துட்டேன்’’ என க்யூட் ஃப்ளாஷ்பேக் சொல்கிறார்  பூஜாஸ்ரீ .

கிடிக்கிப்பிடி கும்தே அடி!

கோயம்புத்தூர், ஸ்ரீஜெயேந்திரா சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்புப் படிக்கும் பூஜாஸ்ரீ, கராத்தே போட்டிகளில் பதக்கங்களைக் குவித்துவருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிடிக்கிப்பிடி கும்தே அடி!

‘‘எங்க கராத்தே மாஸ்டர் பேரு அறிவழகன். அவரை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ஃபர்ஸ்ட் டே அவரைப் பார்க்கிறப்ப ரொம்பப் பயமா இருந்துச்சு. சிரிச்சுக்கிட்டே ஜாலியா ஒரு கதை சொன்னார். அப்புறம்தான் கராத்தே சொல்லிக்கொடுத்தார். ஒயிட் பெல்ட், க்ரீன் பெல்ட், பர்ப்பிள், பிரெளன்ல 1, 2, 3, 4 வரைக்கும் வாங்கிட்டேன். இப்போ, ப்ளாக் ஒன் வாங்கியிருக்கேன். ப்ளாக்ல செவென் வரைக்கும் வாங்கிட்டா, நானும் மாஸ்டர் ஆகிடுவேனே...’’ என அழகாகச் சிரிக்கிறார் பூஜாஸ்ரீ.

கிடிக்கிப்பிடி கும்தே அடி!

பயிற்சியாளர் அறிவழகன், ‘‘எதையும் ஃபாஸ்ட்டா கத்துக்கிட்டு பெர்ஃபெக்ட்டா செய்றது பூஜாஸ்ரீ ஸ்பெஷல். கோவை, கிருஷ்ணா கல்லூரியில் ஆசிய அளவிலான கராத்தே போட்டி நடந்தது. கஜகஸ்தான், ஜப்பான், இலங்கை, நெதர்லாந்து, பூட்டான் போன்ற பல நாடுகளிலிருந்து வந்த  போட்டியாளர்களை வீழ்த்தி, பதக்கம் வாங்கினாங்க பூஜாஸ்ரீ. பிப்ரவரி மாதம் பெங்களூரின் ஓபுலேஸ் கராத்தே கிளப் நடத்திய போட்டியில், டீம் கட்டா, தனி கட்டா, கும்தே என எல்லாப் பிரிவுகளிலும் ஜெயிச்சாங்க’’ என்கிறார்.

கிடிக்கிப்பிடி கும்தே அடி!

கராத்தேயில் பூஜாஸ்ரீ க்கு மிகவும் பிடித்தது கும்தே (kumite).

‘‘கும்தேனா, கையால கிடுக்கிப்பிடி போட்டு எதிரியை வீழ்த்துறது. அதுல என்கூட போட்டிபோடுறவங்களை ஈஸியா மடக்கிடுவேன். இன்டர்நேஷனல் லெவல் போட்டிகளில் கலந்துக்கணும். இந்தியாவுக்காக நிறையப் பதக்கம் வாங்கணும். நிறையப் பேருக்குக் கத்துக்கொடுத்து, பெஸ்ட் கராத்தே மாஸ்டர்னு பேர் வாங்கணும். நிறையப் பேருக்கு ஹெல்ப் பண்ணணும்’’ என கைகளைக் காற்றில் வீசுகிறார் இந்தப்  பெண் சோட்டா பீம்.

- சா.கவியரசன், படங்கள்: ஜீ.கே.தினேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism