Published:Updated:

விஜய் அங்கிள் கொடுத்த கிஃப்ட்!

விஜய் அங்கிள் கொடுத்த கிஃப்ட்!
விஜய் அங்கிள் கொடுத்த கிஃப்ட்!

விஜய் அங்கிள் கொடுத்த கிஃப்ட்!

'தெறி' பேபி நைனிகா

டிகர் விஜய் அங்கிளை உங்களுக்குப் பிடிக்குமா? அப்போ, நிச்சயமா ‘தெறி’ படத்தின் டிரைலர் பார்த்திருப்பீங்க. அதில், விஜய் அங்கிளோடு துறுதுறுனு ஒரு குட்டிப் பெண் சேட்டை பண்றதை ரசிச்சு இருப்பீங்க. யு.கே.ஜி படிக்கும் அந்த க்யூட் சுட்டி, நைனிகா.

விஜய் அங்கிள் கொடுத்த கிஃப்ட்!

நைனிகா வீட்டின் கேட்டைத் திறந்தால், ஸ்கேட்டிங் ஸ்கூட்டரில் சர்ரென்று பாய்ந்து வந்து வெல்கம் சொல்கிறார். அதே வேகத்தில் யு டர்ன் அடித்து ஓடும் அவரைப் பிடித்து நிறுத்த முயன்ற அம்மாவுக்கு டேக்கா கொடுக்கிறார். தோட்டத்தில், பூந்தொட்டியில் இருக்கும் பூவைப் பறித்துத் தலையில் வைத்துக்கொண்டு, ஸ்டைலாக ஸ்கேட்டிங் ஸ்கூட்டரில் பறக்கிறார்.

‘‘நைனிகா என்றால், ‘கண்ணின் மணி’ என்று அர்த்தம்’’ என்றார் நைனிகாவின் அம்மா, நடிகை மீனா. ‘‘டைரக்டர் அட்லி வந்து, ‘தெறி’ படத்தில் நைனிகாவை நடிக்கவைக்க பெர்மிஷன் வேணும்னு கேட்டப்போ, இவங்க சேட்டையை நினைச்சுதான் ரொம்பத் தயங்கினேன். படத்தின் கதையைச் சொல்லி சம்மதிக்க வெச்சுட்டார். ஆனா, நைனிகா எப்படி நடிப்பாங்களோனு டென்ஷனா இருந்துச்சு. முதல் நாள் ஷூட்டிங்ல கொடுத்த டயலாக்கை கரெக்ட்டா,  எக்ஸ்பிரஷனோட பேசி எல்லார்கிட்டேயும் க்ளாப்ஸ் வாங்கிட்டு, ‘எப்பூடி?’ என்கிற மாதிரி என்னைப் பார்த்து ஒரு லுக் விட்டாங்க” என்று சொன்ன அம்மாவின் கழுத்தை ஓடிவந்து கட்டிக்கொள்கிறார் நைனிகா.

“இந்த மூவ்மென்ட்டுக்கு, ‘இனி நான் பேசிக்கிறேன். நீங்க விலகுங்க’ன்னு அர்த்தம். மேடம்கிட்டேயே பேசிக்குங்க’’ எனச் சிரித்துக்கொண்டே நகர்ந்தார், மீனா.

“நைனிகா, இப்படி ஜாலியா விளையாடிட்டே இருக்கீங்களே, நடிக்கும்போது ரொம்பக் கஷ்டமா இருந்துச்சா?’’

விஜய் அங்கிள் கொடுத்த கிஃப்ட்!

“கஷ்டமே இல்லை. சூட்டிங் ஸ்பாட்லகூட, அசிஸ்ட்டன்ட் டைரக்டர்ஸோட ஜாலியா விளையாடுவேன்.”

“அப்படி விளையாடும்போது டைரக்டர் ஒண்ணும் சொல்லலையா?”

“அட்லி அங்கிள் திட்டவே மாட்டார். ஏன்னா, அவர்தான் என்னோட க்ளோஸ் க்ளோஸ் ஃப்ரெண்டு ஆச்சே. என்னைச் செல்லமா... கண்ணு, தங்கம்னு கூப்பிடுவார். அப்புறம்... அப்புறம்... இன்னொரு ஸ்பெஷல் பெயரும் இருக்கு. அது என்ன தெரியுமா? ‘நண்டு’.’’

‘‘அட்லி ஃப்ரெண்டுனா, விஜய் அங்கிளைப் பிடிக்காதோ?’’

விஜய் அங்கிள் கொடுத்த கிஃப்ட்!

‘‘நோ... நோ... நோ, அவரும் என்னோட ஃப்ரெண்டுதான். விஜய் அங்கிளை ட்ரில்லியன் அளவுக்குப் பிடிக்கும். ட்ரில்லியன்னா, ஒண்ணுக்கு அப்புறம் 18 ஜீரோஸ் போடணும். விஜய் அங்கிள், என்னை பேபினு கூப்பிடுவார். எங்கிட்டே பிங்க் கலர் பேக் ஒண்ணு இருக்கு. அதை, யாரு கிஃப்ட் கொடுத்தது சொல்லுங்க பார்ப்போம். தெரியலையா?  விஜய் அங்கிள்தான். அதோட ஒரு ரிமோட் கார், ஒரு வாட்ச் எல்லாம் கொடுத்தார். அவர், என்னோட ஸ்வீட் அங்கிள்.’’

‘‘உங்க நடிப்பைப் பற்றி விஜய் என்ன சொன்னார்?’’

‘‘முதல் நாள் நான் நடிச்சதைப் பார்த்து, ‘நைனிகா பேபி சூப்பரா நடிச்சு அசத்துறாங்க’ன்னு எங்க அம்மாகிட்டே சொன்னார்.’’

‘‘தெறி படத்துல இருந்து ஒரு பாட்டுப் பாடுங்களேன் ப்ளீஸ்...’’

விஜய் அங்கிள் கொடுத்த கிஃப்ட்!

‘‘ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்” என்று ஆரம்பித்ததும், ‘தெறி’ படத்துல இருந்து பாடுங்க எனச் சொல்ல, ‘‘இதுவும் தெறி படத்துல வருதே, நீங்கள் டீஸர் பார்க்கலையா?” என்று கிண்டல் செய்துவிட்டு, ‘‘டய்யிலு க்யூட்டா கையில மாட்டிக்கிட்டா...’’ என்று அருமையாகப் பாடினார்.

“சினிமாவில் நடிச்சதால படிக்கிறது, ஹோம்வொர்க் செய்றதெல்லாம் கஷ்டமா இருந்து இருக்குமே?’’

“அதெல்லாம் இல்லை. யாரோட ஹெல்ப்பும் இல்லாம, நானே எல்லா ஹோம்வொர்க்கையும் சீக்கிரமா முடிச்சுடுவேன்.”

“நைனிகா டி.வி பார்ப்பீங்களா?”

விஜய் அங்கிள் கொடுத்த கிஃப்ட்!

“நிறையப் பார்ப்பேன். ‘சோட்டா பீம்’ என்னோட ஃபேவரைட். பீம், சுக்கி, டோலு, பாலு, காலியா எல்லோரையும் பிடிக்கும். மிக்கி மவுஸ், டோரா, க்ருஷும் பிடிக்கும்.’’

‘‘ஸ்கூல்ல உங்க க்ளோஸ் ஃப்ரெண்டு யாரு?’’

‘‘நிறையப் பேர் இருக்காங்களே. மீரா, தனுஸ்ரீ, அஷ்விகா, சாய்ரியேன், இஷாந்த், சர்வேஸ்வர், அஸ்வின், ஸ்ரீ மதி, அர்ஜூன், ஐஷா...’’

‘‘உங்க ஃபேவரைட் டீச்சர் யாரு?’’

‘‘நல்லி மேம், அனூஷ் மேம், கவிதா மேம், நீலு மேம், கெளஷி மேம், லஷ்மி மேம், கலரிங் செய்யச் சொல்லும் கிறிஸ்ட்டி மேம் என எல்லோரையும் பிடிக்கும். நல்லி மேம் என்னை நைனு ‘நைனு’னு கூப்பிடுவாங்க. அதனால, அவங்களை ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.’’

“உங்க மெனுகார்டில் பிடிச்ச டிஷ் எது?’’

“சப்பாத்தி, தோசை, இட்லி, ஃப்ரைட் ரைஸ், சிக்கன் இன்னும் நிறைய இருக்கு. ம்... சொல்லும்போதே எனக்கு பசிக்க ஆரம்பிச்சுடுச்சே. பை... பை’’ என்று சொல்லிவிட்டு அம்மாவிடம் ஓடினார்.

‘தெறி பேபி’ என்று ரசிகர்கள் கொண்டாடும் நைனிகாவின் சினிமாவுக்கு வெல்கம் சொல்வோம்!

- வி.எஸ்.சரவணன்  படங்கள்: மீ.நிவேதன்

அடுத்த கட்டுரைக்கு