-ஒரு வேட்டைப் பயணம்

நாங்கள், ஒரு குழுவாகச் சென்று மரங்களை வெட்டினோம். எல்லோரும் மரங்களை நடச் சொல்கிறார்கள். நீங்கள் மரங்களை வெட்டினீர்களா என ஆச்சர்யப்படாதீர்கள்.

கருவேல மரங்கள் நம் மண்ணுக்குத் தீமை விளைவிக்கக்கூடியவை என்று படித்தோம். இது குறித்து ஆசிரியர்களிடமும் பேசினோம். பிறகு, பெரியவர்களின் உதவியுடன் செயலில் இறங்கினோம்.

கருவேல மரங்களால் ஏற்படும் தீமைகளில் சிலவற்றைத் தெரிந்துகொள்வோமா?

கருவேல மரம், மிக அதிக அளவில் நீரை உறிஞ்சுகிறது. அதனால், இந்த மரத்தைச் சுற்றியுள்ள தாவரங்களுக்குப் போதுமான நீர் கிடைக்காமல், மருத்துவ குணம் மிக்க அரிய வகைத் தாவரங்களும் அழிந்துவிடுகின்றன.

கருவேல மரங்கள் அடர்த்தியாக இருக்கும் பகுதியில், நிலத்தடி நீர் குறைந்துவிடும்.

கருவேல மரத்தின் முட்கள், நச்சுத்தன்மை வாய்ந்தவை. அவை குத்தினால், நீண்ட நேரத்துக்கு கடுமையான வலி இருக்கும்.

மரங்களிலேயே அதிக வெப்பத்தை வெளியிடுவது கருவேல மரமே. இதனால், உலக வெப்பமயமாதலுக்கு இதுவும் காரணமாகி விடுகிறது.

இதன் விதைகள், காற்றில் வேகமாகப் பரவும் தன்மைகொண்டவை. அதனால், ஒரு கருவேல மரம் இருக்கும் சுற்றுப் பகுதியில், விரைவிலேயே நிறையக் கருவேல மரங்கள் உண்டாகிவிடும்.

பக்கத்து மாநிலமான கேரளாவில், கருவேல மரங்களை முற்றிலும் அழிக்கும் பிரசாரத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள். எனவே, நாமும் கருவேல மரங்களின் வளர்ச்சியைத் தடுப்போம். நம் மண்ணைப் பாதுகாப்போம்!

- ஜெ.விமல் ஜோஸ்வா, எஸ்.சத்தியப்ரியா.