Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

Published:Updated:
சுட்டி ஸ்டார் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

டார்பான்!

காட்டுக்குதிரை இனமான டார்பான், ஒரு காலத்தில் ரஷ்யச் சமவெளிகள், ஐரோப்பாவின் போலந்து, ஹங்கேரியில் மந்தைகளாகக் காணப்பட்டன. இன்றுள்ள குதிரைகளைவிட உருவத்தில் சிறியது. ஆனால் மூர்க்கமானது, பழக்க முடியாதது. செழிப்பான புல்வெளிகளுக்குப் பெருஞ்சேதம் விளைவிக்கும் இந்தக் குதிரை இனம், ஒருவகைக் கொள்ளை நோயினால் பெருமளவு அழிந்தன. மக்கள் குடியேறாத பகுதிகளில் மட்டும் காணப்பட்டன. சில குதிரைகள், விலங்குக் காட்சிசாலைகளில் இருந்தன. இப்போது, அருகிவரும் உயிரினங்களில் டார்பானும் சேர்ந்துவிட்டது.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

பறக்கும் சைக்கிள்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

லண்டனில் உள்ள ‘எக்ஸ்ஃபுளோர் ஏர்’ என்ற நிறுவனம், பாராவிலோ (Paravelo flying bicycle) எனும் பறக்கும் சைக்கிளைத் தயாரித்துள்ளது. இதை, சாதாரண சைக்கிளைப் போலவே சாலையில் ஓட்டிச் செல்லலாம். சாலையில் பயணம் செய்ய இயலாத இடங்களில், சைக்கிளின் பின்புறத்தில் உள்ள பெரிய விசிறியை மோட்டார் மூலம் இயக்கியதும், பாராசூட் விரிந்து பறக்கத் தொடங்கும். தரையில், மணிக்கு 24 கி.மீ ஓடும் இந்த சைக்கிள், உயரத்தில் மணிக்கு 40 கி.மீ தூரம் பறக்கும்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

மூலிகை தின்னும் குரங்கு!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

நாம், செடிகொடிகளை மருந்தாகப் பயன்படுத்துவது போல விலங்குகள், பறவைகளும்கூட தம் உடல் தொந்தரவுகளைச் சரிசெய்ய, குறிப்பிட்ட தாவரத்தைப் பயன்படுத்துவது உண்டு.   சிம்பன்சி குரங்குகள், கிருமிக்கொல்லி சத்து நிறைந்திருக்கும் ‘ஆஸ்பிலியா’ (Aspilia) என்ற தாவரத்தைத் தேடிக் கண்டுபிடித்து, ஒரே ஒரு இலையைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து உட்கொள்ளும். இந்த இலையில், தியாருப்ரைன் ஏ (Thiarubrine A) என்னும் கிருமிக்கொல்லிச் சத்து இருக்கிறது.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

பறக்கும் நரி!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

உலகின் மிகப்பெரிய வௌவால் இனம், ‘பறக்கும் நரி’ என்று அழைக்கப்படும் இந்தியப் பழம்தின்னி வௌவால்தான். வௌவால்கள் ஆயிரக்கணக்கில் ஓரிடத்தில் வசிப்பதை, வௌவால் குடியிருப்பு (Bat colony) என்பார்கள். இவை, தலைகீழாகவே தொங்கும். வெளவாலை, ரஷ்ய நாட்டில் ‘பறக்கும் எலி’ என்றும், ஸ்பெயின் நாட்டில், ‘குருட்டு எலி’ என்றும் செல்லமாகச் சொல்வார்கள்.  ஐக்கிய அமெரிக்காவில், கிட்டத்தட்ட 50 வகையான வௌவால்கள் வசிக்கின்றன. அமேசான் போன்ற அடர்ந்த காடுகளின் உட்பகுதியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வௌவால்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் அளவில் பெரிய வௌவால்கள், பழம், பூக்களின் மகரந்தம், தேன் ஆகியவற்றையே உட்கொள்ளும்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

இது, அட்டகாச ஷூ!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

‘ஐ’ திரைப்படத்தில், விக்ரம் காலை வேகமாக ஆட்டியவுடன் ஷூ லேஸ்கள் தானாக கட்டிக்கொள்ளும். ஆனால், நைக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய காலணியை அணிந்ததும், லேஸ்கள் தானாக இறுகிக்கொள்ளும். ‘ஹைபர் அடாப்ட் 1.0’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஷூக்கள், இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக சந்தைகளில் கிடைக்கும் என அறிவித்துள்ளனர். 1989-ம் ஆண்டு ‘பேக் டு தி ஃபியூச்சர்’ திரைப்படத்தில் இது போன்ற ஒரு காலணியைக் காட்டினார்கள்.  அதன் பிறகே, இந்த மாடல் ஷூக்களைத் தயாரிக்க நைக் நிறுவனம் முயற்சித்து இதற்கான புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தது.

சுட்டி ஸ்டார் நியூஸ்!