Published:Updated:

ஸ்கில் தந்த நாசா பயணம்!

ஸ்கில் தந்த நாசா பயணம்!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்கில் தந்த நாசா பயணம்!

ஸ்கில் தந்த நாசா பயணம்!

ஸ்கில் தந்த நாசா பயணம்!

ஸ்கில் தந்த நாசா பயணம்!

Published:Updated:
ஸ்கில் தந்த நாசா பயணம்!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்கில் தந்த நாசா பயணம்!
ஸ்கில் தந்த நாசா பயணம்!

"நான், நாசாவுக்குப் போகப்போறேன்னு அம்மாகிட்ட சொன்னதும், அவங்களால நம்பவே முடியல... அவங்களுக்கு அவ்வளவு சந்தோஷம். அம்மாவும் அப்பாவும் என்னை பிரணவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.  அடுத்த மாதம் அமெரிக்காவில் இருக்கிற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுக்குச் செல்கிறார் பிரணவ். அங்கே, ராக்கெட்டுகளையும் செயற்கைக்்கோள்களையும் நேரில் சுற்றிப்பார்க்கப் போகிறார். நாசா விஞ்ஞானிகளோடு நேரடியாகப் பேசப்போகிறார்.

பிரணவுக்கு எப்படிக் கிடைத்தது இந்த வாய்ப்பு?

நம்ம சுட்டி விகடனும் ஸ்கில் ஏஞ்சல்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய `சூப்பர் பிரெய்ன் போட்டியில்' தன்னுடைய அபாரமான மூளையால் முதல் இடம் பிடித்து வெற்றிபெற்றார் பிரணவ். அதற்குத்தான் இந்த பம்பர் பரிசு.

``கேம்ஸ் வழியாகவே மூளையைக் கூர்மையாக்கிக்க முடியும்னு தெரிஞ்சதும், நாமும் விளையாடிப் பார்ப்போமேன்னு முதலில் விளையாட ஆரம்பிச்சேன். போகப்போக இந்த கேம்ஸ் ரொம்பப் பிடிச்சிருந்தது. எனக்கு பயனுள்ளதாகவும் இருந்தது. ஸ்கில் ஏஞ்சல்ஸ் கொடுத்த டெமோ கேம்ஸை விளையாடி, நிறைய நிறையப் பயிற்சி எடுத்துக்கிட்டேன். அதனால்தான் என்னால முதல் இடம் பிடிக்க முடிஞ்சது'' என்று தன்னுடைய வெற்றி ரகசியம் சொல்கிற பிரணவ், சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் வித்யா நிகேதன் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கிறார். 

இந்த சூப்பர் பிரெய்ன் போட்டியில், இரண்டாவது இடம் பிடிச்சது, பெங்களூருவில் இருந்து வந்த ஆறாம் வகுப்பு படிக்கும் சுட்டி, சித்தார்த் வெங்கட சுப்ரமணியன். இவருக்கு என்ன பரிசு? சிங்கப்பூரில் இருக்கிற யுனிவர்சல் ஸ்டுடியோஸை சுற்றிப்பார்க்கிற வாய்ப்பு.

இந்தியாவின் மிகப் பெரிய இந்த ஆன்லைன் அறிவுத்திறன் போட்டியில், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 6,500 மாணவர்கள் கலந்துக்கிட்டாங்க. இவர்களில் வெற்றிபெற்றவர்களுக்கு லேப்டாப், டேப்லெட், சைக்கிள், ஐபேட், சயின்ஸ் கேட்ஜெட்ஸ் என எக்கச்சக்கமான பரிசுகளை அள்ளிக்கொண்டார்கள் சுட்டிகள்.

ஸ்கில் தந்த நாசா பயணம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்கான பரிசளிப்பு விழா, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்துல சமீபத்தில் நடந்தது. இதில், கல்வியாளர் கே.ஆர்.மாலதி, ஸ்ட்ரைட்ஸ் ஷாஷன் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் அப்ஹய குமார், ‘எட்சிக்ஸ் பிரெய்ன் லேப்ஸின் ஸ்கில் ஏஞ்சல்ஸ்’ (Edsix Brain Lab’s Skill Angels) நிறுவனத்தின் நிறுவனர் சரவணன் கலந்து கொண்டனர். இவர்களோடு சிறப்பு விருந்தினராக `சந்திரயான்' விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வந்திருந்தார்.

மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, ஒரு சம்பவத்தை மாணவர் களிடம் பகிர்ந்து கொண்டார். ``நான் நிலாவுக்கு சந்திரயான் ராக்கெட்டை அனுப்பியதும், அப்துல் கலாம் ஐயாவை சந்திச்சேன். அவர், `அடுத்து என்ன பண்ணப்போறீங்க?'னு கேட்டார். உடனே `செவ்வாய் கிரகத்துக்கு `மங்கள்யான்' அனுப்பப் போறோம்'னு சொன்னேன். மங்கள்யானும் அனுப்பிட்டோம்... இப்போ மறுபடியும் அப்துல் கலாம் கூப்பிட்டாரு. `அடுத்து என்ன பண்ணப்போறீங்க?'னு கேட்டார். உடனே நான்,  சூரியன்தான்னு சொன்னேன்.அடுத்தது என்ன?' என்கிற கேள்வி எப்போதும் நமக்குள் இருக்க வேண்டும். அதுதான் நம்மை முன்னேற்றும்'' என்று அவர் பேசியது, வந்திருந்த அனைவருக்கும் பிடித்திருந்தது.

- இனியன், படங்கள்: மீ.நிவேதன்