மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

தொங்கும் ஹோட்டல்!

பனிக்கட்டி ஹோட்டல், நீருக்கு அடியில் ஹோட்டல் என, உலகில் விதவிதமான ஹோட்டல்கள் உள்ளன. பெல்ஜியத்தைச் சேர்ந்த டேவிட் கைசெல்ஸ் மற்றும் ஸ்டீஃபன் கெர்கோப்ஸ் ஆகியோர், 180 அடி உயர கிரேனில் ஹோட்டலைத் தொடங்கியுள்ளனர். இங்கு சாப்பிட வருபவர்கள், 300 டாலர் செலுத்திப் பதிவுசெய்ய வேண்டும். வாடிகையாளர்கள் உட்காந்து ஸீட் பெல்ட் அணிந்தவுடன், கிரேன் மூலம் உயரத்துக்குக் கொண்டுபோவார்கள்.

மாலை நேரத்தில் மட்டுமே செயல்படும் இந்த ஹோட்டலில், ஒரு நாளில் 22 பேருக்கு மட்டுமே அனுமதி.

சுட்டி ஸ்டார் நியூஸ்!‘பிஸி’ ஏர்போர்ட்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

விமான நிலையம் என்றாலே பிஸிதான். அதிலும் அமெரிக்காவின் ‘ஹார்ட்ஸ்ஃபீல்டு-ஜாக்சன் அட்லான்ட்டா விமான நிலையத்திலோ, தெறிக்கவிடும் பரபரப்பு. உலகிலேயே போக்குவரத்து அதிகம் நடக்கும் விமானநிலையம் இதுதான். இந்த விமான நிலையத்தை ஒரு நாளில் 2,30,000 பயணிகளும், ஓராண்டில் 100 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளும் பயன்படுத்துகிறார்கள். இந்த விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள், சுமார் 58,000 பேர்.

இந்த விமான நிலையத்திற்கு தினந்தோறும் 2,700-க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கின்றன. இது, சுமார் 4,700 ஏக்கர் பரப்பளவுகொண்டது. ஒரு நாளில் 35 லட்சம் லிட்டர் தண்ணீர் சராசரியாகச் செலவழிக்கப்படுகிறது.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

லேடி ஜெக்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

இந்தோனேஷியாவில் உள்ள லேடி ஜெக் (Lady Jek) எனும் நிறுவனம், பெண்களுக்காகத் தனி வாகன அழைப்புச் சேவையைத் தொடங்கியுள்ளது.

பெண்கள், தொலைபேசியின் மூலம்  இந்தச் சேவையைப் பெறத் தொடர்புகொண்டால், இரு சக்கர வாகனத்தில் ஒரு பெண் வருவார். அழைத்த பெண்ணுக்கான ஹெல்மெட்டையும் அவரே தந்து, எங்கே செல்ல வேண்டுமோ அங்கே கொண்டு சேர்ப்பார். இதற்கு, குறைந்த கட்டணமே வாங்குகிறார்கள். லேடி ஜெக் மூலம் பெண்களுக்கான பாதுகாப்புப் பயணம் உறுதி செய்யப்படுவதால், இந்தோனேஷியப் பெண்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

சுட்டி ஸ்டார் நியூஸ்!