Published:Updated:

ரியல் ஜங்கிள் புக்!

ரியல் ஜங்கிள் புக்!
பிரீமியம் ஸ்டோரி
ரியல் ஜங்கிள் புக்!

ரியல் ஜங்கிள் புக்!

ரியல் ஜங்கிள் புக்!

ரியல் ஜங்கிள் புக்!

Published:Updated:
ரியல் ஜங்கிள் புக்!
பிரீமியம் ஸ்டோரி
ரியல் ஜங்கிள் புக்!
ரியல் ஜங்கிள் புக்!

மோக்லி. இந்தப் பெயரைப் படித்ததும் உங்கள் நினைவுக்கு என்ன வருகிறது? பெரிய காடு, மோக்லியைப் பாதுகாக்கும் கரடி, அவனைக் காட்டை விட்டு விரட்ட நினைக்கும் புலி... இன்னும் நிறைய. மோக்லி, காட்டுக்குள் இருந்ததை நினைத்தாலே வியப்பாக இருக்கிறது அல்லவா? மோக்லி போல நீங்கள் காட்டுக்குள் மாட்டிக்கொண்டால் என்ன செய்வீர்கள்? சொல்லும்போதே பயம் வருகிறதா...

உண்மையில், ஒரு நான்கு வயது குட்டிப் பெண் காட்டுக்குள் மாட்டிக்கொண்டாள். ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் இல்லை, 12 நாட்கள்.

ரஷ்ய நாட்டின் யாகுடியா கிராமத்தில், கரீனா சிகிடோவா தன் பெற்றோருடன் இருப்பவள். அவளுடைய க்ளோஸ் ஃப்ரெண்டு, ‘நைடா’ எனும் நாய்’. அவளுக்கு நைடாவோடு விளையாடினால் நேரம் போவதே தெரியாது. நாய்க்கான சாப்பாட்டை எப்போதும் கரினாதான் வைப்பாள். நைடாதான், கரீனாவுக்கு தண்ணீர் பாட்டில் எடுத்து வந்து தரும், விளையாட்டுப் பொம்மைகளைக் கவ்விக்கொண்டு வரும். இருவரையும் தனித்தனியே பார்க்கவே முடியாது.

கரீனாவின் வீடு ரொம்ப அழகாக இருக்கும். சைபீரியன் காட்டை ஒட்டிய வீடு என்பதால், பசுமையான சூழலோடு, அமைதியாக இருக்கும். வீட்டுக்குப் பலவித பறவைகள் வரும்.

ரியல் ஜங்கிள் புக்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒருநாள் கரீனா விளையாடும்போது, நைடாவை விரட்டிக்கொண்டே காட்டுக்குள் சென்றுவிட்டாள். இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என ஓடிக்கொண்டே  இருந்தனர். விளையாட்டு ஆர்வத்தில் எவ்வளவு தூரம் ஓடினோம் என்றே தெரியாமல், ரொம்பத் தூரம் ஓடிவிட்டனர். எப்படி வீட்டுக்குத் திரும்பிச் செல்வதென்று தெரியவில்லை.    

சுற்றிலும் பெரிய பெரிய மரங்கள். விலங்குகளின் சத்தம் வேறு. சைபீரியன் காட்டில் கரடிகள் அதிகம். கரீனாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பெரிய மரத்தின் கீழ் நாயுடன் உட்கார்ந்துவிட்டாள். பகல் முடிந்து இருட்ட ஆரம்பித்துவிட்டது. கடுமையான குளிர். நாய் அருகே வந்து படுத்ததும், அதன்மேல் கரீனா படுத்துக்கொண்டாள். அது குளிருக்கு இதமாக இருந்தது. நாய், ஜங்கிள் புக் பல்லு கரடி போல பாதுகாக்காமல் இருந்திருந்தால், குளிரால் கரீனாவுக்கு ஏதேனும் நோய் வந்திருக்கும்.

அடுத்த நாள் விடிந்ததும் கரீனாவுக்கு பசித்தது, அங்கிருந்த பெர்ரி பழங்களைப் பறித்துச் சாப்பிட்டாள், தாகம் எடுத்தபோது ஆற்று நீரைக் குடித்துக்கொண்டாள். மரத்தின் அடியிலேயே இருவரும் விளையாடினார்கள். மீண்டும் இரவு வந்தது. இப்படியே 12 நாட்கள் கடந்தன.

கரீனாவைக் காணவில்லை என்றதும் அவளின் பெற்றோர் பல இடங்களிலும் தேடிக் கிடைக்கவில்லை. அவளைத் தேடி பெரிய படையே புறப்பட்டது. ஊருக்குள் தேடிக் கிடைக்கவில்லை என்பதால், காட்டுக்குள் போயிருப்பாளோ எனும் சந்தேகத்தில் தேடினர். அப்போது,  கரீனாவைப் பத்திரமாகப் பாதுகாத்த நாய் சத்தம் எழுப்பியது. அந்தச் சத்தம் வந்த திசை நோக்கிப் போக, மீட்புப் படையினர் கரீனாவைப் பார்த்துவிட்டனர்.

ரியல் ஜங்கிள் புக்!

12 நாட்கள் கழித்து கரீனாவைப் பார்த்த அம்மா அழுதுகொண்டே, ”எப்படி இந்தக் காட்டுக்குள் இத்தனை நாள் தனியா இருந்தே?” என்று கேட்டதற்கு, “அதெல்லாம் தெரியாது, நைடா என்கூடவே இருந்ததால் பயப்படாமல் இருந்தேன்” என்றாள்.

“நான்கு வயதுச் சிறுமி, இத்தனை நாட்கள் காட்டில் தனியாக இருந்ததை யாராலும்  நம்ப முடியவில்லை. நாயின் உதவி இல்லாவிட்டால் பிழைத்திருப்பதே கடினம்” என்றார் டாக்டர். கரீனாவின் பாட்டி, “அவ ரொம்பத் தைரியமான பொண்ணு” என்று பெருமையோடு சொன்னார்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டவர்கள், நிஜமான மோக்லி இவதான் என கரீனாவைப் பாராட்டுகிறார்கள். புகழ்பெற்ற சிற்பி நிகோலே, கரீனாவையும் நைடாவையும் அழகான சிலையாக வடித்திருக்கிறார். அதை ஏராளமானோர் பார்த்துக் கதை பேசுகின்றனர்.

நல்ல நண்பர்களுக்குப் புதிய அடையாளமாக கரீனாவும் நைடாவும் மாறிவிட்டனர்.

கரீனா காப்பாற்றப்பட்ட வீடியோவைக் காண: http://bit.ly/ChuttiKarina

- பா.நரேஷ்