Published:Updated:

கதை நாயகி

கதை நாயகி
பிரீமியம் ஸ்டோரி
கதை நாயகி

கதை நாயகி

கதை நாயகி

கதை நாயகி

Published:Updated:
கதை நாயகி
பிரீமியம் ஸ்டோரி
கதை நாயகி
கதை நாயகி

“நான், நேத்து கதை ஒண்ணு படிச்சேன். அதுல ஜன்னல் வழியே ஒரு பேய் வந்து...” இப்படி உங்கள் ஃப்ரெண்ட்ஸ்கூட நீங்கள் படித்த புத்தகம் பற்றிப் பேசியிருப்பீர்கள். அதெல்லாம் பெரியவர்கள் எழுதிய கதையாக இருக்கும். உங்களை மாதிரியே பள்ளியில் படிக்கும் ஒருவர் கதை எழுதியிருந்தால் எப்படி இருக்கும்.

சென்னை வித்யா மந்திர் பள்ளியில், 10-ம் வகுப்பு படிக்கும் யாமினி பிரஷாந்த், Uma Not-So-Perfect எனும்  ஆங்கிலக் கதைப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். ‘வெரி குட்’ என்று பாராட்டினால், ‘இது என்னோட மூன்றாவது புத்தகம்’ என ஆச்சர்யம் அளிக்கிறார்.   

“ரொம்பக் குட்டி வயசுல முதல் புத்தகம் படிச்சேன். அது, சின்னக் கதைப் புத்தகம். என்ன புத்தகம் என இப்போ ஞாபகத்தில் இல்லை. ஆனா, நல்லா இன்ட்ரஸ்ட்டிங்கா இருந்தது. அன்றைக்கு ஆரம்பிச்ச பழக்கம், இப்போ மூன்றாவது புத்தகம் எழுதுற அளவுக்கு என்னை வளர்த்திருக்கு” என்கிறார் யாமினி பிரஷாந்த்.

யாமினியின் படிக்கும் ஆர்வத்தை வளர்க்க, யாமினியின் அப்பா பிரஷாந்த் வாசு, சூப்பரான ஐடியா செய்தார். யாமினி படித்த புத்தகங்கள் பற்றிக் கேள்விகள் கேட்பார், அதற்கான பதிலை யாமினி எழுதுவார். இந்த முறையால் புத்தகத்தை நன்கு படிக்கும் பழக்கமும், விமர்சனம் எழுதும் திறனும் கைவந்தது.

கதை நாயகி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“பதினொரு வயதுச் சிறுமி பற்றிய கதைதான் என்னோட முதல் புத்தகமான Mishti. ஆனா, அதை எழுதினப்ப எனக்கு ஐந்து வயசுதான். விடுமுறையில், பாட்டி வீட்டுக்குச் செல்லும் இரண்டு பேரன், பேத்திகளைப் பற்றிய கதைதான், என்னோட இரண்டாவது புத்தகமான Best of Granny’s stories. லண்டன் செல்லும் உமாவுக்கும் அவளோட ஃப்ரெண்ட்ஸுக்கும் இடையே ஏற்படும் பிரச்னைகளை மையமாக வைத்த கதைதான், Uma Not-So-Perfect.” என்று சொல்லும் யாமினி, சட்டென்று ஞாபகம் வந்தவராய், “என்னோட Mishti புத்தகத்தைப் படித்துவிட்டு, அப்துல் கலாம் ஐயா பாராட்டியதை என்னால் மறக்கவே முடியாது.” என்கிறார்.

கதைகள் மட்டுமல்லாமல், ஆங்கிலத்தில் கவிதைகளும் எழுதிக்கொண்டிருக்கிறார் யாமினி. புதிய கதாபாத்திரங்களை உருவாக்கி, கதை நாயகியாக வலம் வரும் யாமினியின் எழுத்துப் பயணம் ஜொலிக்கட்டும்!

- ஜெ.விக்னேஷ்