Published:Updated:

கார்ட்டூன் வி.ஐ.பி.!

கார்ட்டூன் வி.ஐ.பி.!

கார்ட்டூன் வி.ஐ.பி.!

கார்ட்டூன் வி.ஐ.பி.!

Published:Updated:
கார்ட்டூன் வி.ஐ.பி.!
##~##
கி.
மு.50. அந்தக் கிராமம் ரொம்ப அழகானது. கிரேக்கத்தில், கால் (Gaul)  எனும் மலைச்சரிவு கிராமம் அது. ஜூலியஸ் சீசர் (Julius Ceasar) எல்லா ஊர்களையும் ரோம சாம்ராஜ்யத்துக்குக் கீழே கொண்டு வந்துட்டாரு. அவரால் அந்த கிராமத்தை  வெல்ல முடியலை. ஒவ்வொரு முறையும் படைகள் தோல்வியுடன் திரும்பியது. அங்குதான் இணைபிரியா ஆஸ்டிரிக்ஸ், ஆப்லிக்ஸ் இருக்காங்க. நம்ம சுட்டி, அங்கே போனாள்.

சுட்டி: ஹாய்... வணக்கம்.!

ஆப்லிக்ஸ்: நீ யாரு? வேவு பார்க்க அந்த சீசர் அனுப்பி வெச்சாரா?

ஆஸ்டிரிக்ஸ்: ஏய், லூசு... சும்மா இரு. யாரைப் பார்த்தாலும் சந்தேகமா? இந்தச் சுட்டியைப் பார்த்தா அப்படி தெரியலை.  

சுட்டி: சாரி, நான்... எங்க பத்திரிகைக்காக பேட்டி எடுக்க வந்திருக்கேன்.

ஆஸ்டிரிக்ஸ்: உன் பேர் என்ன?

கார்ட்டூன் வி.ஐ.பி.!

சுட்டி: என் பெயர் வே.ல.நித்யஸ்ரீ,  கோவை, கணபதியில் உள்ள அமிர்தா வித்யாலயம் பள்ளியில், ஏழாவது படிக்கிறேன். ஆஸ்டிரிக்ஸ், உங்க நண்பன் ஆப்லிக்ஸ் ஏன் இத்தனை குண்டா வித்தியாசமா இருக்காரு? பார்க்கவே சிரிப்பு வருது.

ஆப்லிக்ஸ்: என்னையப் பிடிச்சிருக்கா... ஹா... ஹா.... ஹா!

ஆஸ்டிரிக்ஸ்: சத்தமா சிரிக்காதடா! நாம வேவு பார்க்க வந்திருக்கோம்னு வெளிய தெரியக் கூடாது.

ஆப்லிக்ஸ்: (மெதுவாகச் சிரிக்கிறான்) ஹி... ஹி... ஹி!

நித்யஸ்ரீ: உங்க கிராமத்தை மட்டும் சீசரால் ஜெயிக்க முடியாததுக்கு... அந்த பலம் தரும் பானம்தானே காரணம்?

ஆப்லிக்ஸ்: அய்யய்யோ ஆஸ்ட், அது பத்தி இவங்களுக்குத் தெரிஞ்சு போச்சுடா!

ஆஸ்ட்ரிக்ஸ்: அதனால தப்பில்ல. நீ டென்ஷன் ஆகாதே. (சுட்டியைப் பார்த்து) ஆமாம், அதைக் குடிச்சா... யானையைவிட அதிக பலம் வந்திடும். அதைத் தயாரிக்கிறது கெட்டாஃபிக்ஸ். அது எதனால ஆனதுனு அவனுக்கு மட்டும்தான் தெரியும்.

ஆப்லிக்ஸ்: அதுல பலவகை மிருகக் கொழுப்பும், மிஸ்டல்டோ மரப்பட்டையும் இருக்குனு தெரியும். ஆனா, சொல்ல மாட்டோம்.

ஆஸ்ட்ரிக்ஸ்: அய்யோ... வாயை மூடுடா. உளறிக்கொட்றாம்பாரு!

நித்யஸ்ரீ: உங்க கிராமத்தின் உணவு... மீன்?

ஆஸ்ட்ரிக்ஸ்: அதைப் பத்தி சொல்லாதே! நினைச்சாலே குமட்டுது. அன் ஹைஜீனிக்ஸ் தான் சுத்தமில்லாத நாத்த மீனை விக்கிறான்.

ஆப்லிக்ஸ்: எப்பப்பாரு அவனுக்கு இரும்புக் கடை புலயாட்ரோமாட்ரிக்ஸ் கூட சண்டைதான். ஆனா, நாங்க எப்பவும் சாப்பிடறது காட்டுக் கரடி, காட்டு எருது இப்படி...

கார்ட்டூன் வி.ஐ.பி.!

நித்யஸ்ரீ: எப்பவும் இல்லயே... அந்த பாட்டு பாடி கோகோபானிக்ஸ்...

ஆஸ்ட்ரிக்ஸ் : உனக்கு எல்லாமே தெரியுமா? அந்த கோகோபானிக்ஸ் பாட ஆரம்பிச்சா போதும், கிராமமே காலியாயிடும். அத்தோட, பக்கத்து மலைக் காட்டில் இருக்கிற பறவையில் இருந்து பன்றி வரை எல்லாமே விழுந்தடிச்சு... தலைதெறிக்க ஓடும். சாப்பிட எதுவுமே கிடைக்காது. நாத்தமெடுத்த மீன்தான்.

ஆப்லிக்ஸ்: ஒரு முறை கோகோபானிக்ஸ் பாட்டுப்பாடி... சீசர் படையையே ஓட ஓட விரட்டினதால, அவனை வெச்சிருக்கோம். கிராமமே சாப்பிட உட்காரும்போது, அவன் வாயை மூடி மரத்தோட கட்டிப் போட்டுடுவோம்.

நித்யஸ்ரீ: உங்களைப் உருவாக்கியது யார்னு சொல்ல முடியுமா?

ஆஸ்ட்ரிக்ஸ்: அவர் பெயர், ஆல்பிரட் யுடர்ஸோ (கிறீதீமீக்ஷீt ஹிஸீபீமீக்ஷீக்ஷ்ஷீ). இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஓவியர். அற்புதமா படம் வரைவாரு. ஆனால், நிறக் குறைபாடு கண்நோய் அவருக்கு இருந்தது. அவர்தான் எங்களைப் படைத்து உருவாக்கியவர். ரெனேகாஸினி (ஸிமீஸீஷீ நிஷீsநீவீஸீஸீஹ்)யும் அவருமாக, 1959-ல் பிரென்சு மொழியில் முதல் ஆஸ்ட்ரிக்ஸை கார்ட்டூன் புத்தகமாகக் கொண்டு வந்தாங்க.

ஆப்லிக்ஸ்: இன்றுவரை சுமார் 65 கார்ட்டூன் படங்களிலும் 23 கார்ட்டூன் புத்தகங்களிலும்... 17 (நிஜ) படங்களிலும் நாங்க வந்திருக்கோம். அந்த சீசர், இப்பவும் எங்க குட்டி கிராமத்தை ஜெயிக்க முடியாம திணறிக்கிட்டு இருக்கான்!

நித்யஸ்ரீ: ஆனால், உங்க கிராமத்தில் அடிக்கடி உங்களுக்குள்ளயே சண்டை வருதே?

ஆஸ்ட்ரிக்ஸ்: வாக்குவாதம், சண்டை எங்களுக்குள்ளே உண்டுதான். சில சமயம் தின்ன சோறு ஜீரணிக்க சண்டைபோடுவோம். ஆனா, வெளியே இருந்து யாராவது வந்து மோதினா ஒண்ணாயிடுவோம்!

நித்யஸ்ரீ: நல்ல தத்துவம். இந்த ஆப்லிக்ஸ் இப்படி குண்டா இருக்கிறதுக்கு காரணமே சொல்லலியே...

ஆஸ்ட்ரிக்ஸ்: நம்ம தாத்தா குருயிடும், கெட்டாபிக்ஸ¨ம் மந்திர பானத்தைத் தயாரிச்சப்போ, சின்ன வயசுல ஆப்லிக்ஸ் அந்த அண்டாக்குள்ளேயே விழுந்திட்டான். அதான்... அவனுக்கு நிரந்தரமா பலம் வந்துடிச்சு. யார் கிட்டயும் சொல்லாத. நாங்க வேவு பார்த்துக்கிட்டு இருக்கிறதையும் சொல்லிடாதே!

நித்யஸ்ரீ: சொல்லவே மாட்டேன்.  எங்க ஆதரவு எப்பவும் உங்களுக்குத்தான். குட் பை!

- இரா.நடராசன்