மாயமில்லே... மந்திரமில்லே...

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... அம்புலிமாமா காலம் முதல் ஹாரி பாட்டர் காலம் வரை அனைவரையும் சுண்டி இழுக்கும் கேரக்டர், மந்திரவாதி. நிஜத்திலும் மந்திரவாதிகள் உண்டு என்பது போல உங்கள் கண்களை ஏமாற்றி நம்பவைக்கும் மேஜிசியன் நாங்கள். உண்மையில், இவை எல்லாமே அறிவியல்பூர்வமான தந்திரம்தான். மேஜிசியனின் முதல் பாடமே, வித்தையின் ரகசியத்தைச் சொல்லக் கூடாது என்பதுதான். ஆனால், உங்களுக்காக சில மேஜிக் ரகசியங்களை உடைக்கப்போகிறேன். இந்த வித்தைகளை நீங்கள் நன்கு பயிற்சிசெய்து, உங்கள் நண்பர்களிடம் செய்துகாட்டி அசத்துங்கள். ஆனால், ரகசியத்தை மட்டும் வெளியே சொல்லாதீர்கள். ஆர் யூ ரெடி!

மாயமில்லே... மந்திரமில்லே...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாயமில்லே... மந்திரமில்லே...

வெவ்வேறு நிறங்களில் ஒரே அளவுள்ள இரண்டு சிறிய பாட்டில்களையும், பாட்டிலுக்குள் நுழையும் அளவில் இரண்டு துண்டுக் கயிறுகளையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

மாயமில்லே... மந்திரமில்லே...

‘இந்த இரண்டு பாட்டில்களில் ஒன்றில், பூதம் இருக்கு. கயிற்றைப் பாட்டிலுக்குள் நுழைச்சு, பிடிச்சுக்கோ' என்று நான் சொன்னால் பிடிச்சுக்கும். கயிற்றின் மறு முனையைப் பிடித்து, பாட்டிலை அந்தரத்தில் தொங்கவிடுகிறேன். என்னோடு சவாலுக்கு யார் வர்றீங்க?' என ஒருவரை அழையுங்கள். வந்த நண்பரிடம், ‘இரண்டு பாட்டில்களில் ஒன்றைத் தொடு' என்று சொல்லுங்கள். (இதோ, இங்கே சஞ்சய் சிவப்பு பாட்டிலைத் தொட, நான் வயலட் பாட்டிலை எடுத்துக்கொண்டேன்).

மாயமில்லே... மந்திரமில்லே...

‘என்னைப் போலவே செய்' எனச் சொல்லிவிட்டு, பாட்டில் மூடியைக் கழற்றி, கயிற்றை பாட்டிலுக்குள் மெதுவாக நுழையுங்கள். உங்கள் நண்பரும் அவரது பாட்டிலில் கயிற்றை நுழைப்பார். கயிறு உள்ளே செல்லச் செல்ல, பாட்டிலை மெதுவாகச் சாயுங்கள். பிறகு, கயிற்றின் வெளிமுனையைப் பிடித்தவாறு, ‘பாட்டிலுக்குள் இருக்கும் பூதமே... கயிற்றைப் பிடிச்சுக்கோ' என வாய்க்கு வந்த மந்திரத்தை உச்சரித்தவாறு பாட்டிலில் இருந்து கையை எடுங்கள். உங்கள் பாட்டில், அந்தரத்தில் நிற்கும். ஆனால், நண்பரின் பாட்டில் கீழே விழுந்துவிடும். எப்படி?

மாயமில்லே... மந்திரமில்லே...

ரகசியம் இதுதான். ஒரு பாட்டிலில், யாருக்கும் தெரியாமல் முன்கூட்டியே ரப்பர் ஒன்றைப் போட்டுவிடுங்கள். நீங்கள் கயிற்றை உள்ளேவிட்டு பாட்டிலைக் கவிழ்க்கும்போது, வாய்ப் பகுதியில் ரப்பர் அடைத்துக்கொள்ளும். அப்படியே கயிற்றை இழுக்கும்போது, இன்னும் இறுக்கமாகிச் சிக்கிக்கொள்ளும். கயிற்றின் மறுமுனையைப் பிடித்துக்கொண்டு, பாட்டிலை அந்தரத்தில் மிதக்கவிடலாம். நண்பரின் பாட்டிலில் எதுவும் இல்லாததால், கயிறு வெளியே வந்துவிடும்.

மாயமில்லே... மந்திரமில்லே...

‘இரண்டு பாட்டில்களில் ஒன்றைத் தொடு' என்றதும், ரப்பர் இல்லாத பாட்டிலை நண்பர் தொட்டால், ‘சரி, எடுத்துக்க' எனச் சொல்லுங்கள். ரப்பர் உள்ள பாட்டிலைத் தொட்டால், ‘சரி, எடுத்துக்கிறேன்' என்று சொல்லி நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மாயமில்லே... மந்திரமில்லே...

பாட்டிலுக்குள் ரப்பர் இருப்பது தெரியாத வகையில் பாட்டிலின் நிறம் இருப்பது முக்கியம். அதேபோல, பாட்டிலை கையில் எடுக்கும்போதும், கவிழ்க்கும்போதும் ரப்பர் உருளுவது கேட்காத வகையில், கவனமாகச் செயல்பட வேண்டும். 

மேஜிக் செய்யுங்க... எல்லோரையும் அசத்துங்க!

- பிரகாஷ் சவ்கூர், படங்கள்:  ப.சரவணகுமார்

மாடல்: சஞ்சய், ஷ்ருதி

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன்  மே.நி.பள்ளி, ராயப்பேட்டை, சென்னை.

ழு வயதிலேயே மேஜிக் மேடை ஏறி, அனைவரையும் அசத்தியவர், பிரகாஷ் சவ்கூர். அவரது தாத்தாவிடம் மேஜிக் கற்றார். 36 வருடங்களில் 800-க்கும் மேற்பட்ட மேஜிக் நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார். தற்போது, இவரது மகள் தன்யா சவ்கூருடன் பல நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார்.

ம( த)ந்திர டிப்ஸ்!

மேஜிக் கற்றுக்கொள்ள, தொடர் பயிற்சியும் பொறுமையும் அவசியம். அதே நேரம், பார்வையாளர்களுக்கு சிந்திக்க அவகாசம் கொடுக்காமல், வேகமாகவும் லாகவமாகவும் தந்திரங்களைச் செயல்படுத்துவது முக்கியம். அவர்களின் கவனம் முழுவதும் நம்மீதே இருக்க வேண்டும்.

• பொழுதுபோக்குக்காக மட்டுமே மந்திர வித்தைகளைச் செய்ய வேண்டும். வேறு எந்த நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தக் கூடாது. இது, அறிவியல், தந்திரம் மற்றும் செய்பவரின் திறமையும் சேர்ந்த கலவை.

• மந்திர வித்தைகள் பற்றிய ரகசியங்களை யாருக்கும் சொல்லக் கூடாது. ஏற்கெனவே ஒருவரிடம் செய்துகாட்டிய வித்தையை, அவரிடம் மீண்டும் செய்துகாட்டக் கூடாது.