Published:Updated:

ஜாலியா விளையாடினா செம ஈஸி!

ஜாலியா விளையாடினா செம ஈஸி!
பிரீமியம் ஸ்டோரி
ஜாலியா விளையாடினா செம ஈஸி!

- இன்டர்நேஷனல் மாஸ்டர்

ஜாலியா விளையாடினா செம ஈஸி!

- இன்டர்நேஷனல் மாஸ்டர்

Published:Updated:
ஜாலியா விளையாடினா செம ஈஸி!
பிரீமியம் ஸ்டோரி
ஜாலியா விளையாடினா செம ஈஸி!
ஜாலியா விளையாடினா செம ஈஸி!

பிரக்ஞானந்தா உலக சாதனை படைத்த தினத்தில் அவரது வயது... 10 வருடங்கள், 9 மாதங்கள், 19 நாட்கள்.

சதுரங்கப் போட்டிகளில், கிராண்ட் மாஸ்டர் பட்டத்துக்கு அடுத்த நிலையில் உள்ளது, ‘இன்டர்நேஷனல் மாஸ்டர்’ (International Master) பட்டம். உலகிலேயே மிகவும் இளைய வயது இன்டர்நேஷனல் மாஸ்டர் இவரே!

சென்னை, வேலம்மாள் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவன். ஆசிய அளவிலான சதுரங்கப் போட்டிகளில் மூன்று முறையும், உலக அளவிலான போட்டிகளில் இரண்டு முறையும் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். கடந்த மாதம் ஒடிசாவில் நடந்த போட்டியில், கிராண்ட் மாஸ்டர்களை வீழ்த்தி, இப்போது இன்டர்நேஷனல் மாஸ்டர் ஆகியுள்ளார்.

வீட்டின் அலமாரி முழுக்க பரிசுக் கோப்பைகள். “இதுல பாதி என் அக்கா விஷாலி வாங்கியது. உஸ்பெகிஸ்தானில் நடக்கும் வேர்ல்டு வுமன் செஸ் போட்டிக்காகப் போயிருக்காங்க. என்னோட முதல் குரு அவங்கதான்.’’ என்று குறும்புடன் புன்னகைக்கிறார் பிரக்ஞானந்தா.

‘‘அடுத்த கும்பிடு, என்னோட ரமேஷ் மாஸ்டருக்கு. செம ஜாலியா பேசிக்கிட்டும் சிரிச்சுக்கிட்டும் டிரெய்ன் பண்ணுவார். செஸ் விளையாட்டுனா சீரியஸ்னு நினைச்சுட்டு இருந்த எனக்கு, அவரோட டீச்சிங் ரொம்பப் புதுசா இருந்துச்சு. தினமும் அஞ்சு மணி நேரம் டிரெய்னிங் எடுக்கிறேன். அப்புறம், நண்பர்களோடு கிரிக்கெட், டி.வி-யில் கார்ட்டூன் பார்ப்பேன். டாம் அண்ட் ஜெர்ரி என்னோட ஃபேவரைட். கார்ட்டூன் பார்க்கிற மாதிரி செஸ் விளையாட்டையும் ஜாலியா விளையாடினா, செம ஈஸி’’ என்கிறார்.

வார்த்தைக்கு வார்த்தை குறும்பாகப் பேசினாலும் போட்டி என வந்துவிட்டால், தீயாக இறங்கிவிடுகிறார். இலங்கை, ஈரான், துபாய், தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, மங்கோலியா என உலகம் முழுவதும் சுற்றி வருகிறார், இந்த லிட்டில் செஸ் மாஸ்டர்.

‘‘ ‘இன்டர்நேஷனல் மாஸ்டர்’ பட்டத்துக்கான போட்டிகளில் மாஸ்டராக, 2,400 பாயின்ட்ஸ் வாங்கணும். அதோடு, கிராண்ட் மாஸ்டர்களோடு மோதணும். முதல்ல, பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் நடைபெற்ற போட்டியில் ஜெயிச்சு, ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடந்த போட்டியில் கலந்துக்கிட்டேன். அங்கே, ஜார்ஜியா நாட்டு சர்வதேச மாஸ்டரை ஜெயிச்சு, 2,368 பாயின்ட்ஸ் வாங்கினேன். அடுத்து, கிராண்ட் மாஸ்டர்களை வீழ்த்தினால், சர்வதேச மாஸ்டர் பட்டம் கிடைக்கும். ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடந்த போட்டியில் கலந்துக்கிட்டேன்’. அங்கேதான் அவரைப் பார்த்தேன்’’ எனப் பேச்சிலேயே த்ரில் கூட்டுகிறார் பிரக்ஞானந்தா.

ஜாலியா விளையாடினா செம ஈஸி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“கூகுளிலும் நியூஸ் பேப்பரிலும் பார்த்து வியந்த கிராண்ட் மாஸ்டர் சந்தீபன் சந்தா, என்கிட்டே சிரிச்சுக்கிட்டே கைகுலுக்கினார். அவரோடு நான்தான் விளையாடப்போறேன்கிறதை அந்த நிமிஷம்கூட நம்ப முடியலை. அந்த வியப்பிலேயே அவரோடு  விளையாடி, டிரா செஞ்சேன். அடுத்து, ஆர்மேனியா நாட்டு கிராண்ட் மாஸ்டரை ஈஸியா ஜெயிச்சுட்டேன்,” என்கிறார் பிரக்ஞானந்தா.

விஸ்வநாதன் ஆனந்த், மேக்னஸ் கார்ல்சன் போன்ற உலகச் சாம்பியன்கள், பிரக்ஞானந்தாவுக்கு இன்ஸ்பிரேஷன். கார்ல்சன் சென்னை வந்தபோது, ஆசியப் போட்டிகளில் வென்றிருந்த பிரக்ஞானந்தா, அவருடன் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

“அப்ப எனக்கு ஏழு வயசு. அந்த மேட்ச் முழுக்க அவரையே பார்த்துக்கிட்டு இருந்தேன். என்னோட ரோல்மாடல் விஸ்வநாதன் ஆனந்த் அங்கிள் வீட்டுக்குப் போய், அவரை மீட் பண்ணிப் பேசியிருக்கேன்’’ என்கிறார் பரவசமாக.

இந்த டிசம்பருக்குள் கிராண்ட் மாஸ்டர் பட்டம் ஜெயிக்க வேண்டும் என்பது இவரது இலக்கு.

‘‘அப்புறம், உலக சாம்பியன் பட்டம் வாங்கலாம். ஆஹா... நிஞ்சா ஹட்டோரி போடுற டைம் ஆகிருச்சு. அப்புறம் பார்க்கலாம் அங்கிள்’’ என்றபடி துள்ளி ஓடினார் பிரக்ஞானந்தா.

- ஜெ.விக்னேஷ்