
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, 4001 மாணவர்கள் ஒரே நேரத்தில் யோகாசனம் செய்து, சாதனை படைத்திருக்கிறார்கள். சென்னை, முகப்பேரில் இருக்கும் வேலம்மாள் மேல்நிலைப் பள்ளியில் நிகழ்த்தப்பட்ட இந்தச் சாதனை, கண்களையும் மனதையும் கொள்ளையடித்தது.
நான்குபுறமும் வெள்ளைச் சீருடை அணிந்த மாணவிகள் அணிவகுத்து நிற்க, அவர்களுக்கு மத்தியில் ‘கீப் ஸ்மைலிங்' (Keep Smiling) என்கிற வாசக வடிவில் நீல நிறச் சீருடை மாணவர்கள் நின்று, பல்வேறு ஆசனங்களைச் செய்தது அட்டகாசமாக இருந்தது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பள்ளி முதல்வர் ஹேமலதா, ‘‘இதற்காக, 10 நாட்கள் பயிற்சி எடுத்தார்கள். உடலையும் மனதையும் ஒருங்கிணைத்து, மனிதனை முழுமையாக்கும் ஆற்றல் யோகாவுக்கு உண்டு. இதை, மாணவர்கள் மனதில் விதைக்கும் சிறிய முயற்சியே இது'' என்றார் புன்னகையுடன்.
சாதனை முடித்து ஓடிவந்த ஒரு சுட்டி, ‘‘நான் இதுவரைக்கும் யோகா செஞ்சது இல்லை. இந்த நிகழ்ச்சிக்காக முதன்முதலில் செய்ய ஆரம்பிச்சேன். இனி, தினமும் செய்வேன்'' என்றான் உற்சாகமாக.
- ஜெ.விக்னேஷ்