Published:Updated:

"நடிப்பு எனக்கு ஐஸ்க்ரீம் சாப்பிடுற மாதிரி"

"நடிப்பு எனக்கு ஐஸ்க்ரீம் சாப்பிடுற மாதிரி"
பிரீமியம் ஸ்டோரி
News
"நடிப்பு எனக்கு ஐஸ்க்ரீம் சாப்பிடுற மாதிரி"

க்யூட் பேபி மோனிகா

"நடிப்பு எனக்கு ஐஸ்க்ரீம் சாப்பிடுற மாதிரி"

நீங்க ‘வேதாளம்’ படம் பார்த்தீங்களா? அதில், லட்சுமி மேனன் ஆன்ட்டியை ஆஸ்பத்திரியில் சேர்த்துட்டு அஜித் அங்கிள் அழறப்ப, ‘ஏன் அங்கிள் அழறீங்க... ரொம்ப வலிக்குதா?'னு ஒரு குட்டிப் பொண்ணு கையில் கட்டுப்போட்டுக்கிட்டு வந்து கேட்பாளே, அது நான்தான். ‘தல' அங்கிளோடு ஒரு சீன்ல வந்தேன். இப்போ, ‘தளபதி' விஜய் அங்கிள் படத்துல நிறைய சீன்ல வர்றேன். உஷ்... இதை வெளியே சொல்லாதீங்க. ஏன்னா, சீக்ரெட்'' - உதட்டில் விரல்வைத்துச் சொல்கிறார் மோனிகா.
 
விஜய் நடிக்கும் 60-வது படம், சிபி ராஜ் நடிக்கும் ‘கட்டப்பாவக் காணோம்', ‘சங்குச் சக்கரம்' சித்தார்த் நடிக்கும் ‘சைத்தான் கா பச்சா' எனப் பல படங்களில் செம பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் க்யூட் சுட்டி.

‘‘குட்டி மோனிகா என்ன படிக்கிறீங்க?''

‘‘செகண்ட் க்ளாஸ். டாடி பேரு சிவா, மம்மி பேரு அனிதா. டாடி, சினிமா இண்டஸ்ட்ரியில இருக்கார்.''

‘‘ஷூட்டிங்னா அடிக்கடி லீவு போடணுமே?''

‘‘ஆமாம். ஆனா, மிஸ் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. ஏன்னா, நான் எப்பவும் O கிரேடுதான் எடுப்பேன்.''

‘‘ ‘வேதாளம்' சான்ஸ் எப்படி கிடைச்சது?''

"நடிப்பு எனக்கு ஐஸ்க்ரீம் சாப்பிடுற மாதிரி"

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘சன் டிவி-யின் ‘குட்டிச் சுட்டீஸ்' புரோகிராம்ல கலந்துக்கிட்டேன். அதைப் பார்த்து கூப்பிட்டாங்க. ஃபர்ஸ்ட் படமே, அஜித் அங்கிளோடு நடிச்சது செம ஹேப்பி. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் பார்த்துட்டு, ‘நல்லா நடிச்சு இருக்கே'னு பாராட்டினாங்க.''

‘‘உங்க பெஸ்ட் ஃப்ரெண்டு யாரு?''

‘‘ஹர்சினி, நக்‌ஷத்திரா, அபி மித்ரானு நிறைய பேர் இருக்காங்க.”

‘‘ ‘சங்குச் சக்கரம்' படத்துல கண்ணுல லென்ஸ் போட்டுக்கிட்டு நடிச்சீங்களாமே...'

"நடிப்பு எனக்கு ஐஸ்க்ரீம் சாப்பிடுற மாதிரி"

‘‘ஆமா. அது ஒரு ஹாரர் படம். எனக்கு ஹாரர்னா ரொம்பப் பயம். ஆனா, இந்தப் படத்துல நடிச்சதுக்கு அப்புறம் தைரியமா இருக்கேன். மார்னிங் கண்ணுல லென்ஸ் மாட்டினா, ஈவ்னிங் வரைக்கும் வெச்சிருக்கணும். லென்ஸ் மட்டும் இல்லை, மேக்கப் போட ஒரு மணிநேரம், அதைக்  கலைக்க ரெண்டு மணி நேரம் ஆகும். நான் மேக்கப் கலைச்சு முடிக்கிறப்போ, எல்லோரும் போய்ட்டு இருப்பாங்க. நான்தான் கடைசியா போவேன். ரோப் கட்டி கஷ்டப்பட்டு நடிச்சேன். ஆனா, எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.”

‘‘விஜய் அங்கிள் என்ன சொன்னார்?''

‘‘விஜய் அங்கிளின் செல்ல ஃப்ரெண்டு ஆகிட்டேன். எனக்கு சாக்லேட் கொடுத்தார். ஒரே டேக்ல நடிச்சதும் ‘வெரிகுட்' சொன்னார். கீர்த்தி சுரேஷ் ஆன்ட்டியும் செம க்ளோஸ். நான் விஷ் பண்ண மறந்தாலும், அவங்க தேடி வந்து விஷ் பண்ணுவாங்க.''

‘‘விஜய் அங்கிளின் ஷூட்டிங் ஸ்பாட்ல ஐஸ்க்ரீம் கேட்டு அடம்பிடிச்சீங்களாமே...''

"நடிப்பு எனக்கு ஐஸ்க்ரீம் சாப்பிடுற மாதிரி"

(அம்மாவைச் செல்லமாக முறைத்தவாறு) ‘‘சொல்லிட்டாங்களா? ஹைதராபாத்ல ஷுட்டிங். எனக்கு ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்னா ரொம்பப் பிடிக்கும். தேடி வாங்கிட்டு வந்தாங்க. அப்புறம் தினமும் ரெண்டு ஐஸ்க்ரீம்தான். நடிப்பும் எனக்கு ஐஸ்க்ரீம் மாதிரிதான்''

‘‘என்னென்ன கார்ட்டூன் பார்ப்பீங்க?''

‘‘ ‘நிஞ்சா ஹட்டோரி'யும் ‘மோட்டு பட்லு'வும். எனக்கு, ‘நிஞ்சா ஹட்டோரி கார்ட்டூன் கேரக்டர்ல நடிக்க ஆசை. அனிமேஷன் மூவினா விட மாட்டேன்.  ‘ஆங்ரி பேர்ட்ஸ்’ அட்டகாசம்.''

‘‘என்னென்ன கேம்ஸ் விளையாடுவீங்க?''

‘‘கிரிக்கெட், டென்னிஸ், கேரம் போர்டு...” (லிஸ்ட் நீள்கிறது).

‘‘நீங்க நிறைய ஊர் சுத்துவீங்களாமே?''

"நடிப்பு எனக்கு ஐஸ்க்ரீம் சாப்பிடுற மாதிரி"

‘‘ஹ்ம்ம்... லீவு விட்டா வால்பாறை போயிருவோம். அம்மா, அப்பா, நானு, என் தங்கச்சி...''

‘‘உங்களுக்கு தங்கச்சி இருக்காங்களா?''

‘‘ம்... அவ பேரு தியா. பிளே ஸ்கூல் படிக்கிறா. அவளுக்கு வால்பாறை சாக்லேட்னா ரொம்பப்  பிடிக்கும்!”

‘‘உங்களுக்கு என்ன பாட்டுப் பிடிக்கும்?''

‘‘டெரா டெரா... டெரா பைட்டா காதல் இருக்கு... நீயும் பிட்டு பிட்டா ஃபைட்டு பண்ண ஏறும் கிறுக்கு... (முழுப் பாடலும் பாடிக் காட்டுகிறார்)

‘‘சரி, விஜய் அங்கிள் படம் பத்தி சொல்லுங்களேன்?''


‘‘பார்த்தீங்களா, நைசா கேட்கறீங்க. நான் ஏமாற மாட்டேன். ஃபர்ஸ்ட் சொன்ன பதில்தான், ஷ்ஷ்ஷ்... அது சீக்ரெட்.'' 

- ஷாலினி நியூட்டன், படங்கள்: தி.குமரகுருபரன்