Published:Updated:

உற்சாகம் தந்த ஓவியத் திருவிழா!

உற்சாகம் தந்த ஓவியத் திருவிழா!
பிரீமியம் ஸ்டோரி
News
உற்சாகம் தந்த ஓவியத் திருவிழா!

உற்சாகம் தந்த ஓவியத் திருவிழா!

உற்சாகம் தந்த ஓவியத் திருவிழா!

சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானம், சுட்டிகளின் சந்தோஷக் கடலாக மாறியிருந்தது. திரும்பிய பக்கம் எல்லாம் உற்சாகத் துள்ளல். ‘மாபெரும் ஓவியத் திருவிழா' அது.

எல்.கே.ஜி படிக்கும் க்யூட் செல்லங்கள் முதல், ‘மாடர்ன் ஆர்ட்டின் அடுத்த ஜெனரேஷன்' எனச் சொல்லும் கெத்து பிள்ளைகள் வரை ஆஜராகி இருந்தார்கள்.

உற்சாகம் தந்த ஓவியத் திருவிழா!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘வரையும் இடத்தில், கே.ஜி குழந்தைகளுக்குப் பக்கத்தில் அம்மா இருக்கலாம். ஆனா, குழந்தைகளேதான் வரையணும். பெரிய பசங்க தனியாத்தான் வரையணும். போட்டிக்கான நேரம் முடிஞ்சதும், வேற நிகழ்ச்சிகளுக்குப் போயிட்டு வாங்க. உங்கள் ஓவியங்களைப் பிரபல ஓவியர்கள் தேர்வுசெய்து முடிச்சதும், சூப்பர் பரிசுகள் காத்திருக்கு'' என்று அறிவிக்கப்பட்டது.

வெள்ளை சார்ட் பேப்பர்கள், வண்ண ஓவியங்களால் உயிர் பெறத் தொடங்கின. போட்டிக்கான நேரம் முடிந்ததும், நடனம், நடிப்புத்திறனை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே நடந்தன.

சுட்டி விகடன் ஸ்டாலில், ‘ஒரிகாமி செய்வது எப்படி?' என்ற பயிற்சி நடைபெற்றது.  ‘‘இதுதான் தும்பிக்கை ஆட்டும் யானை, இதுதான் பறக்கும் குதிரை'' என ஒரிகாமிக் கலைஞர் லட்சுமிநாராயணன் செய்துகாட்டினார்.

உற்சாகம் தந்த ஓவியத் திருவிழா!

‘‘நானும் ஒண்ணு செய்யட்டுமா தாத்தா?'' என்ற ஒரு சுட்டி, ஒரு பேப்பரை எடுத்து, சரசரவென மடித்து, சில நொடிகளிலேயே, ‘‘இந்தாங்க டைனோசர்'' என்று கொடுத்து அப்ளாஸ் அள்ளினார்.

இந்த ஓவியத் திருவிழா நிகழ்ச்சியை சாராஸ் ஈவண்ட்சைன்மெண்ட் (zaraz eventzainment) அமைப்பு ஒருங்கிணைத்தது. இதன் நிறுவனர்கள் ஜபினத், ரமேஷ் & ரமேஷ்.

உற்சாகம் தந்த ஓவியத் திருவிழா!

‘‘கே.ஜி குழந்தைகளுக்குப் பழங்கள், காய்கறிகள், பலூன்கள் போன்ற தலைப்புகளும், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு இயற்கை, விலங்குகள், பறவைகள் தலைப்புகளும், நான்கு முதல் ஆறாம் வகுப்பு வரை கார், கார்ட்டூன் கேரக்டர் தலைப்புகளும், ஏழு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு செல்போன், டெஸ்க்டாப் ஆகிய தலைப்புகளும் கொடுக்கப்பட்டன. 13,000 சுட்டிகள் பங்கேற்றனர். குழந்தைகளின் கற்பனைத்திறனை வளர்க்கும் நோக்கத்தில் இந்த ஓவியப் போட்டி நடத்தப்பட்டது'' என்றார் ஜபினத்

உற்சாகம் தந்த ஓவியத் திருவிழா!

போட்டியில் வெற்றிபெற்ற 100 சுட்டிகளுக்கு, அட்டகாசமான குட்டி சைக்கிள்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் ஜொலித்தது உற்சாகம்.

- ஜெ.விக்னேஷ், படங்கள்: ச.பிரசாந்த்