Published:Updated:

மாயமில்லே... மந்திரமில்லே... 2

மாயமில்லே... மந்திரமில்லே... 2
பிரீமியம் ஸ்டோரி
News
மாயமில்லே... மந்திரமில்லே... 2

பிரகாஷ் சவ்கூர்

மாயமில்லே... மந்திரமில்லே... 2

ந்திர வித்தை, ஓர் அறிவியல்பூர்வமான கலை. மற்றவர்களை மகிழ்விக்க மட்டுமே. வேறு எந்த நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தக் கூடாது. உங்களுக்காக ஒவ்வோர் இதழிலும் ஒரு மேஜிக் ரகசியம் உடைக்கிறேன். ஆர் யூ ரெடி?"

கீழே விழாத டம்ளர்கள்!

மாயமில்லே... மந்திரமில்லே... 2

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நான்காக மடிக்கப்பட்ட ஒரு சிறிய துணி, இரண்டு பிளாஸ்டிக் டம்ளர்கள், ஒரு தடிமனான புத்தகம் ஆகியவற்றை எடுத்து, டேபிள் மீது வையுங்கள்.

மாயமில்லே... மந்திரமில்லே... 2

‘‘இது, மந்திரப் புத்தகம். இந்த பிளாஸ்டிக் டம்ளர்களை எந்தப் பிடிப்பும் இல்லாமல் கவ்விப் பிடிச்சுக்கிறதைப் பார்க்கிறீங்களா?'' என நண்பர்களிடம் சவால்விடுங்கள்.

மாயமில்லே... மந்திரமில்லே... 2

பிறகு, கர்ச்சீஃப்பை விரித்துக் காண்பித்து, மேஜை மீது வைத்து, அதன் மீது புத்தகத்தை வையுங்கள். துணியால் அந்தப் புத்தகத்தை மூடுங்கள். மூடப்பட்ட துணியோடு சேர்த்து, புத்தகத்தைக் கையில் எடுத்து, திருப்பிப் பிடித்துக்கொள்ளுங்கள்.

மாயமில்லே... மந்திரமில்லே... 2

அதன் மையப் பகுதியில், அருகருகே பிளாஸ்டிக் டம்ளர்களைக் கவிழ்த்து வையுங்கள். அப்படி வைக்கும் முன்பு, டம்ளர்களுக்குள் எதுவும் இல்லை என்பதை நண்பர்களுக்குக் காண்பியுங்கள். இரண்டு டம்ளர்களுக்கும் இடையில் கட்டைவிரலை வைத்துக்கொள்ளுங்கள்.

மாயமில்லே... மந்திரமில்லே... 2

மந்திரக்குச்சியை டம்ளர்களின் மீது வைத்து, மந்திரத்தை உச்சரியுங்கள். புத்தகத்தை மெதுவாக மேலே உயர்த்தி, நிதானமாகக் கவிழ்த்து, குச்சியை எடுத்துவிடுங்கள்.

வாவ்... இரண்டு டம்ளர்களுக்கும் நடுவில் உங்கள் கட்டைவிரல் மட்டும்தான் இருக்கும். ஆனால், எந்தப் பிடிமானமும் இல்லாமல் டம்ளர்கள் புத்தகத்தோடு ஒட்டிக்கொண்டு நிற்கும். எப்படி இப்படி?

மாயமில்லே... மந்திரமில்லே... 2
மாயமில்லே... மந்திரமில்லே... 2
மாயமில்லே... மந்திரமில்லே... 2
மாயமில்லே... மந்திரமில்லே... 2

இதுதான் ரகசியம். துணியின் மையப் பகுதியில் தண்ணீர் போன்று நிறமற்ற அல்லது எளிதில் கண்ணுக்குத் தெரியாத சாம்பல் நிறத்தில் மிகச் சிறிய இரண்டு பந்துகளை (அல்லது பட்டன்களை) கட்டை விரல் தடிமன் இடைவெளியில் ஒட்டிவிடவும். துணியை விரித்துக் காண்பிக்கும்போது, பட்டன்கள் ஒட்டாத பகுதியைக் காண்பிக்கவும். மேஜையில் விரித்து வைக்கும்போது, பட்டன் பகுதியின் மீது புத்தகத்தின் மையப் பகுதி வருமாறு வைத்துவிடவும். கட்டைவிரலை, இரண்டு பட்டன்களுக்கும் இடையில் பிடித்துக்கொள்ளவும்.

இரண்டு டம்ளர்களையும் கவிழ்த்து, தலா ஒரு பட்டன் உள்ள பகுதியில் வைத்து, இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் கட்டைவிரலால் அழுத்தவும். பட்டன்களின் முனைகளும் உங்கள் கட்டைவிரலும் சேர்ந்து டம்ளர்களின் முனைகளை இறுக்கிப் பிடித்துக்கொள்கின்றன. புத்தகத்தைக் கவிழ்த்தாலும் டம்ளர்கள் விழாது.

படங்கள்: ப.சரவணகுமார் மாடல்: பியூஷ் சோலங்கி, ரத்னா. ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன், மே.நி.பள்ளி, ராயப்பேட்டை, சென்னை

ம(த)ந்திர டிப்ஸ்!

• மேஜிக் என்பது நம் கையின் லாகவத்தில்தான் இருக்கிறது. எவ்வளவு லாகவமாகவும் விரைவாகவும் செயல்படுகிறோம் என்பதைப் பொறுத்தே, எதிராளியை அட்ராக்‌ஷன் செய்ய முடியும்.

• கைகளின் லாகவத்துடன் உங்கள் நடிப்பும் முக்கியம். டம்ளர்களுடன் புத்தகத்தைக் கவிழ்க்கும்போது, அவை விழாமல் இருக்க, நீங்கள் அவற்றுடன் பேசுவதுபோல நடிக்கும்போது, பார்ப்பவர்கள் உங்கள் கட்டைவிரல்களுக்கு இடையே உற்றுப்பார்ப்பதைத் தவிர்ப்பார்கள்.

• நீங்கள் ஒட்டும் மணிகள் அல்லது பட்டன்கள், பார்ப்பவர்களுக்குத் தெரிந்துவிடாத வகையில் துணியின் நிறமும் டிசைனும் இருக்க வேண்டும்.

மேஜிக் வகைகள்

Stage Illusions - மேடை அமைத்து, சிறப்பான ஒலி-ஒளி அமைப்பு, உதவியாளர்களோடு நிகழ்த்துவது.

Conjuring / Parlor Magic - ஒரே ஒரு நபர் செய்யும் மேஜிக். பள்ளி மற்றும் பொது அரங்கில் நிகழ்த்துவது.

Close-Up Magic - குறைவான மக்கள் கூட்டத்தின் முன்னிலையில், சீட்டுக்கட்டுகள், நாணயங்கள், சின்னச்சின்ன விளையாட்டுப் பொருட்களில் நிகழ்த்துவது.

Escape Magic - மந்திர வித்தைகள் செய்வதில் கைதேர்ந்த கலைஞர்கள், கைகளைச் சங்கிலியால் பிணைத்துக்கொண்டு அதிலிருந்து விடுபடுவது. நெருப்பில் இருந்து வெளிவருவது மற்றும் தண்ணீர்த் தொட்டிக்குள் இருந்து வெளிவருவது போன்றவை.

Mentalism
- மூளைக்கு வேலைகொடுக்கும் வித்தைகள் இவை. அடுத்து என்ன நடக்கப்போகிறது, மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் கண்டறிந்து சொல்வது.

Gospel Magic - பைபிள் சம்பவங்களைவைத்துச் செய்யும் மேஜிக்.

Street Magic - தெருவில் நேரடியாக மக்களிடம் செய்யும் வித்தைகள். இதில், இந்தியர்கள் மிகத் திறமையானவர்கள்.

Comedy Magic - மந்திர வித்தைகள் செய்யும்போது,    இடைஇடையே நகைச்சுவை செய்வது.