தேடி வந்த சூப்பர் ஹீரோக்கள்!

ஐரோப்பிய நாடான அல்பேனியாவில், ஜூன் 1-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது, மருத்துவமனை மற்றும் வீடுகளில் இருக்கும் குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்தது, அல்பேனியா காவல்துறை மற்றும் சிறப்பு காவல் படை. உடனே களத்தில் குதித்தார்கள். தப்பு... தப்பு... களத்தில் பறந்தார்கள். ‘ஸ்பைடர்மேன்', ‘பேட்மேன்' என சூப்பர் ஹீரோக்களின் உடையணிந்து, மருத்துவமனை மற்றும் வீடுகளின் மாடி ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து, பரிசுப் பொருட்களைக் கொடுத்தார்கள். சுட்டிகள் செம ஹேப்பி.

யார் யார் எப்படிப் பேசுவார்கள்?

கிரிக்கெட் வீரர்: ‘ஓவரா' பேசுவார்.

போட்டோகிராஃபர்: ‘டெவலப் பண்ணி' பேசுவார்.

ரவுடி: ‘அடிச்சுப்' பேசுவார்.

ஹோட்டல் சர்வர்: 'சூப்'பரா பேசுவார்.

வக்கீல்: ‘பீஸ்ஃபுல்லா' பேசுவார்.

ஃபாஸ்ட் ஃபுட் ஓனர்: ‘காரசாரமா' பேசுவார்.

ஐஸ் விற்பவர்: ‘குளிரக் குளிரப்' பேசுவார்.

டெய்லர்: ‘கட் அண்ட் ரைட்டா' பேசுவார்.

பூக்கடைக்காரர்: ‘அளந்து' பேசுவார்.

டயட்டீஷியன்: ‘உப்புச் சப்பில்லாமல்' பேசுவார்.

பேங்க் மேனேஜர்: ‘இன்ட்ரஸ்ட்டா' பேசுவார்.

பியூட்டீஷியன்: ‘அழகாகப்' பேசுவார்.

கசாப்புக் கடைக்காரர்: ‘வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா' பேசுவார்.

ஸ்வீட் கடைக்காரர்: ‘இனிக்க இனிக்கப்' பேசுவார்.

மின்காந்தப் புயல்!

கடலில் உருவாகும் புயல்கள் பற்றி அறிந்திருப்போம். இதேபோல வேறு கிரகங்களிலும் புயல் ஏற்பட்டிருக்குமா?

முதன்முதலில் கிரகங்கள் உருவான பிறகு, அவற்றில் தண்ணீர் உருவாகி, கடல்கள் இருந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட ஒரு வலுவான மின்காந்தப் புயல், கடலை வற்றச்செய்துவிட்டதாம். இந்த மின்காந்தப் புயல், ஆக்ஸிஜனை முழுவதுமாக உறிஞ்சியிருக்கலாம் என கடந்த ஜூன் 21-ம் தேதி, நாசா (NASA) ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

வெள்ளி கிரகத்தின் மின்காந்தப் புயலின் வேகம், பூமியின் மின்காந்தத் தன்மையைவிட ஐந்து மடங்கு அதிகம். இதற்கு, வெள்ளி கிரகம் சூரியனுக்கு அருகில் இருப்பதே காரணம். இதனால், சூரியனின் புற ஊதாக் கதிர்கள், இரு மடங்கு வெளிச்சத்தை வெள்ளி கிரகத்துக்கு அளிக்கின்றன. இதுபோலவே, கடல்கள் வற்றிய செவ்வாய் கிரகத்துக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்கிறார்கள்.

விபத்தில்லா தேசம்!

சாலை விபத்துகளும், அதில் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதிலும், இந்தியாவின் பெரிய நகரங்களில் நாளுக்கு நாள் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. குறிப்பாக, இளைஞர்களும் குழந்தைகளும் அதிகமாக உயிர் இழக்கிறார்கள். உடல் உறுப்புகளை இழந்து ஊனமாகிறவர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகம். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 26 நபர்கள் உயிர் இழக்கின்றனர். 2.3 நிமிடங்களுக்கு ஒருவர் உயிர் இழக்கிறார். ஒரு மணி நேரத்தில், 26 குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகிவிடுகிறது.

கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது அல்லவா? இவை எல்லாமே நமது சின்னச்சின்ன அலட்சியம் மற்றும் சில நொடி அவசரத்தால் நடப்பவை. விபத்து இல்லாத நாள் அமைவதில், நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. உங்கள் அப்பா அல்லது அம்மாவுடன் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, அவசியம் ஹெல்மெட் பயன்படுத்துங்கள். வேகமாகச் செல்ல வற்புறுத்தாதீர்கள். பள்ளி வாகனத்திலோ, பொது வாகனத்திலோ செல்லும்போது, உங்கள் ஓட்டுநர், விதிமுறைகளை மீறினால் தயங்காதீர்கள். அழுத்தமாகவும் அதே நேரம் அன்பாகவும் அவர் செயலைத் தடுத்து நிறுத்துங்கள். ஏனெனில், தவறுசெய்பவர் மட்டுமின்றி தவறே செய்யாதவர்களும் பாதிக்கப்படுவார்கள். பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம்; விபத்தில்லா தேசத்தை உருவாக்க ஒன்றிணைவோம்.

புரியுது... ஆனா, புரியலை!

என் அம்மா, ‘தப்பு செஞ்சா தட்டிக் கேட்கணும்'னு சொன்னாங்க.

ஒரு நாள், அம்மாவோட வெளியே போனேன். டிராஃபிக்ல நின்னப்போ, ஒருத்தர் பஸ்ஸுல இருந்து எச்சில் துப்பினார். ‘ஏங்க பொது இடத்துல இப்படித் துப்புறீங்க?'னு கேட்டதுக்கு முறைக்கிறார்.

வீட்டுக்கு எதிரில் இருக்கும் ஒரு ஆன்ட்டி, குப்பையைத் தூக்கி தெருவுல வீசினாங்க. ‘ஏன் ஆன்ட்டி இங்கே போடுறீங்க?'னு கேட்டா, ‘வயசுக்கு மீறிப் பேசாதே'னு என்னையே திட்டுறாங்க.

ஒருநாள் அம்மா, அப்பாவோடு கோயிலுக்குப் போனேன். அங்கே, பெரிய கூட்டம். அப்பாவுக்குத் தெரிஞ்ச கோயில் ஊழியர் ஒருவர், எங்களை உடனே உள்ளே கூட்டிட்டுப் போயிட்டார். ‘அப்பா, இவ்வளவு பெரிய கூட்டம் இருக்கு. இப்படி நாம உள்ளே போகலாமா?'னு கேட்டேன். ‘உனக்கு வாய் அதிகம்'னு முறைக்கிறார். தப்பைத் தட்டிக்கேட்கிற என்னை ஏன் திட்டுறாங்க? அதுதான் புரியலை!