Published:Updated:

அதிரடி ரோபோக்கள் அசத்தும் வசீகரன்கள்!

அதிரடி ரோபோக்கள் அசத்தும் வசீகரன்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
அதிரடி ரோபோக்கள் அசத்தும் வசீகரன்கள்!

அதிரடி ரோபோக்கள் அசத்தும் வசீகரன்கள்!

அதிரடி ரோபோக்கள் அசத்தும் வசீகரன்கள்!

யம் சிட்டி... ஸ்பீடு 1 டெராஹெர்ட்ஸ், மெமரி 1 ஜிகாபைட்… இல்லே, 2 ஜிகாபைட்''

‘‘முதல்ல சொன்னதுதான் கரெக்டு. ரஜினி அங்கிள், மெமரி 1 ஜிகாபைட்னுதான் சொல்லுவாரு.''

சஞ்சய் மற்றும் அப்துல் இடையே நடந்த கான்வர்சேஷன்தான் இது. ‘‘கபாலி படமே ரிலீஸ் ஆகப்போகுது. இன்னும் எந்திரன் டயலாக்கைப் பேசிட்டு இருக்கீங்க?'' என்று கேட்டால், ‘‘நாங்க எல்லாம் ஃப்யூச்சர் வசீகரன்கள்'' என்றார் சஞ்சய்.

சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில், ‘கிடோபோடிக்ஸ்' (KIDOBOTIKZ) எனும் ரோபோட்டிக் நிறுவனம் நடத்திய, ஒரே நேரத்தில் பல ரோபோ கார்களை உருவாக்கும் உலக சாதனைக்கான நிகழ்ச்சி அது.

விசில் அடித்ததும் போட்டியில் பங்கேற்கும் 103 சுட்டிகளும் தங்கள் இடங்களுக்குச் சென்றார்கள். 30 நிமிடங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. சக்கரங்கள், ஒயர்கள், பேட்டரி என அவர்களின் கைகள் ரோபோ வேகத்தில் செயல்பட்டன. ‘டைம் அப்' விசில் ஒலித்தபோது, விதவிதமான ரோபோ கார்கள் தயார். அந்த ரோபோ கார்களை, கடற்கரை மண்ணில் ரேஸ் விட்டார்கள். கூடியிருந்தவர்களின் ஆரவாரத்தில், மண்ணைச் சீறிக்கொண்டு சென்றன கார்கள்.

அதிரடி ரோபோக்கள் அசத்தும் வசீகரன்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘டேய் அப்துல், உன் கார் பவுண்டரி லைனுக்குப் போகுது. அதை ட்ராக்குக்கு கொண்டு வா'' என்றான் சஞ்சய். ‘‘தேங்க்ஸ்! கொஞ்சம் ஸ்பீடு  ஏத்துறேன்'' என்றான் அப்துல். இருவரின் கார்களும்  இலக்கை அடைய, உற்சாகத்தில் துள்ளினார்கள்.

‘‘என்னோடது, டார்க்யூ (Torque) கார். மணல், கரடுமுரடான இடத்திலும் ஷேக்கிங் இல்லாமப் போகும். அது மட்டுமா? இந்த டைப்ல, ஒவ்வொரு வீலுக்கும் ஒரு மோட்டார் பொருத்துவாங்க. நான், ரெண்டு வீலுக்கு ஒரு மோட்டார் போட்டே ரேஸ்ல முந்திட்டேன்'' எனக் கெத்தாகச் சொன்னார் சஞ்சய்.

‘‘என்னோடது ரேஸிங் டைப் கார். ட்ரிக்கரை நகர்த்துனா செம ஸ்பீடுல பறக்கும்'' என்று தனது காரை, நாய்க்குட்டியைப்போல செல்லமாக அணைத்து முத்தமிட்டார் அப்துல்.

கிடோபோடிக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சினேகா, ‘‘குழந்தைகளுக்கு அறிவியலை செயல்முறைக் கல்வியாக விளக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட நிறுவனம் இது. ரோபோடிக்ஸ், அதில் ஒரு பகுதிதான். இயற்பியல், வேதியியல், கணிதம் என எல்லாப் பாடங்களின் பகுதிகளும் ரோபோ செய்ய உதவும். அதைப் படிப்படியாகக் கற்றுத்தருவோம். ரோபோ கார்களை உருவாக்கும் இந்தப் போட்டியில், 2-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்கள் கலந்துக்கிட்டாங்க. இதன் மூலம், வருங்காலத்தில் சிறந்த ரோபோக்களை உருவாக்க முடியும்'' என்றார்.

அதிரடி ரோபோக்கள் அசத்தும் வசீகரன்கள்!

போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டன. தங்கள் மற்றும் நண்பர்களின் ரோபோ கார்களோடு செல்ஃபி எடுத்துக்கொண்டு, ‘‘இது ஆரம்பம்தான், இன்னும் சில வருஷத்துல பல விதமான ரோபோக்களை உருவாக்கிக் காட்டுறோம் பாருங்க'' என உற்சாகமாகச் சொன்னார்கள்.

அசத்துங்க வசீகரன்களே!

- ஜெ.விக்னேஷ், படங்கள்: தே.அசோக் குமார்