Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

ஐந்து வயதில் 1,330 குறட்பாக்கள்!

திருக்குறளில், 1,330 குறள்களையும் எப்படிக் கேட்டாலும் சொல்லி அசரவைக்கிறார், ஐந்து வயது வைஷ்ணவி.

காரைக்குடி, அழகப்பா அகாடமி பள்ளியின் முதலாம் வகுப்பு மாணவி, வைஷ்ணவி. இவர், காரைக்குடி வள்ளுவர் பேரவையின் 'அறம் விருதை'ப் பெற்றிருக்கிறார். ‘‘எல்லா அம்மாக்களும் குழந்தைகளுக்கு ரைம்ஸ்தான் சொல்லித்தருவாங்க. என் அம்மா, நான் ஸ்கூல்ல சேர்றதுக்கு முன்னாடியே எனக்கு திருக்குறள் சொல்லிக்கொடுத்தாங்க. ஒரு நாளைக்கு ஐந்து குறள்களை செல்போனில் ரெக்கார்டு பண்ணி கேட்கவைப்பாங்க. ஸ்கூல்ல சேர்ந்ததும், ஒவ்வொரு 10 அதிகாரங்களைச் சொன்னதும், புத்தகம் பரிசாகக் கொடுத்து ஊக்கப்படுத்தினார், தமிழாசிரியர் செயம்கொண்டான். இந்த ஊக்கம்தான் எனக்கு அறம் விருதைக் கொடுத்திருக்கு'' என்கிறார், இந்த இளம் திருக்குறட் செல்வி.

சுட்டி ஸ்டார் நியூஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz



திமிங்கிலத்துக்கு உதவும் பொருள்!

சுட்டி ஸ்டார் நியூஸ்

உலகின் மிகப் பெரும் கடல்வாழ் உயிரினமான திமிங்கிலத்தின் ஒரு வகை, ‘ஸ்பெர்ம் வேல்'. இந்தத் திமிங்கிலத்தின் தலைப் பகுதியில், ஸ்பெர்மேசேட்டி (Spermaceti) என்கிற மெழுகுப் பொருள் இருக்கும். இதன் உதவியால்தான், தேவையானபோது நீரில் மூழ்கவும் மேலே வரவும் முடிகிறது. இந்த மெழுகுப் பொருள் தண்ணீரைவிட லேசானது.

சுட்டி ஸ்டார் நியூஸ்

புவி வெப்பமாவதைக் குறைக்கும் வழி!

சுட்டி ஸ்டார் நியூஸ்

'குளோபல் வார்மிங்' அபாயத்தை நாம் அறிந்திருப்போம்.  பெட்ரோலியம், எரிவாயு போன்றவற்றின் பயன்பாடு, பலவித தொழிற்சாலைகளின் செயல்பாடுகளே இவற்றுக்குக் காரணம் என்பது தெரியும். புவி வெப்பமாவதில் பசுமைக் குடிலுக்கும் பங்குண்டு என்றால் நம்புவீர்களா? மாடியில் தோட்டம் அமைக்கும் பலரும், பச்சை நிற ப்ளாஸ்டிக் வலைகளைப் பயன்படுத்துகிறார்கள். இதன் இடைவெளிகளில் ஊடுருவும் சூரியக் கதிர்கள், செடிகளிலிருந்து வெளியேறும் கார்பன்- டை- ஆக்சைடுடன் சேர்ந்து அதிக வெப்பமடைந்து, சூழல்கேட்டை உருவாக்குகின்றன. 'ஆகவே, தோட்டம் அமைப்பவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும்' என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

சுட்டி ஸ்டார் நியூஸ்

மின்சாரக் கார்!

சுட்டி ஸ்டார் நியூஸ்

உலகச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில், பேட்டரி கார்களைப் பல நாடுகள் தயாரித்துவருகின்றன. இந்தியாவின் முதல் மின்சார கார், ரேவா (Reva). ரேவா என்றால், 'புதிய தொடக்கம்' என்று அர்த்தம். இவர்களின் e2o கார், சாலைகளில் செல்லும்போது புகை வெளிவராது. இதன்  டெல்லி ஆன் ரோடு விலை 6 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய். பெங்களூரில் உள்ள மஹிந்திராவுக்குச் சொந்தமான ரேவா எலெக்ட்ரிக் கார் நிறுவனம் e2o-வை உருவாக்கியுள்ளது. ''இந்த கார் இயங்குவதற்குத் தேவையான சக்தியை, 48v பேட்டரி வழங்குகிறது. 4-5 வருடங்களுக்குப் பின்பு பேட்டரிகளை மாற்றினால் போதும்'' என்கிறார், மஹிந்திரா ரேவா எலெக்ட்ரிக் கார் நிறுவனத் தலைவர் சுதர்ஸன் மைனி.

சுட்டி ஸ்டார் நியூஸ்