Published:Updated:

விவசாயிகளை வணங்குவோம்!

விவசாயிகளை வணங்குவோம்!
பிரீமியம் ஸ்டோரி
விவசாயிகளை வணங்குவோம்!

சபாஷ் குறும்பட நாயகன்

விவசாயிகளை வணங்குவோம்!

சபாஷ் குறும்பட நாயகன்

Published:Updated:
விவசாயிகளை வணங்குவோம்!
பிரீமியம் ஸ்டோரி
விவசாயிகளை வணங்குவோம்!
விவசாயிகளை வணங்குவோம்!

"நான் பார்க்கிற, படிக்கிற விஷயங்கள் என் மனசை டிஸ்டர்ப் பண்ணும்போதெல்லாம், அதை மத்தவங்களோடு ஷேர் பண்ணிக்க நினைப்பேன். அதுக்கு நான் தேர்ந்தெடுத்த கருவிதான், கேமரா'' என அழகாக ஆரம்பிக்கிறார் சூரிய நாராயணன்.

கடலூர், ஏ.ஆர்.எல்.எம் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் சூரியநாராயணன், இந்த ஆண்டு நெய்வேலி புத்தகக் கண்காட்சியின் குறும்படப் போட்டியில், தனது 'விவசாயி' என்ற குறும்படத்துக்காக, இயக்குநர் வசந்த பாலன் கையால், ‘இளம் படைப்பாளி' விருதை வாங்கியிருக்கிறார்.

‘‘நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, அப்பா ஒரு கேமரா வெச்சிருந்தார். கேமராதான் என் ஃப்ரெண்ட். ஸ்கூல்விட்டு வந்ததும், அந்தத் தெருவில் பார்க்கிறதை எல்லாம் விளையாட்டா படம் எடுப்பேன். அப்பாவுக்குத் தெரியாமல், எடுத்த இடத்திலேயே நல்ல பிள்ளையா  வெச்சிடுவேன். ஒரு நாள் அப்பா என்னைக் கூப்பிட்டார். பயந்துகிட்டே பக்கத்துல போனேன். ‘சூர்யா, படம் எல்லாம் சூப்பரா எடுத்து இருக்கே. வெரிகுட்'னு பாராட்டினார். அந்த கேமராவை எனக்கே கொடுத்துட்டார். அப்புறம், குட்டி குட்டியா வீடியோ எடுக்க ஆரம்பிச்சேன். ஒருநாள், அப்பாவின் நண்பரான ஆதித்யா அங்கிளும் இன்னும் சிலரும் வீட்டுக்கு வந்தாங்க. ‘இவங்க வீடியோகிராஃபர்ஸ். உனக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் இவங்ககிட்டே  கேட்டுத் தெரிஞ்சுக்க'னு சொன்னார். அவங்க எடிட்டிங்ல ஆரம்பிச்சு, நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தாங்க. இப்படி என்னை ஊக்கப்படுத்தியவங்களைப் பற்றிச் சொல்லிட்டே போனால், அதுவே பெரிய சினிமா ஆகிடும்'' எனச் சிரிக்கிறார் சூரியநாராயணன்.

விவசாயிகளை வணங்குவோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘கொஞ்ச நாட்களுக்கு முன்பு, டிராக்டர் கடனை கட்டவில்லை என்பதற்காக, அடித்துத் துன்புறுத்தப்பட்ட ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்ட செய்தியையும் வீடியோவையும் பார்த்திருப்பீங்க.

அது என்னை ரொம்பவும் பாதிச்சுது. அந்த நிகழ்வோடு, சிறுவர்களின் விஷயத்தையும் சேர்த்து ஒரு கதையை உருவாக்கினேன். நான் இருக்கிறதும் கிராமம்தான். விவசாயிகளின் கடுமையான உழைப்பையும் கஷ்டங்களையும் பார்த்திருக்கேன். ஒவ்வொரு நாளும் சாப்பிடும்போது, கடவுளுக்கு நன்றி சொல்ற மாதிரி விவசாயிகளுக்கும் நன்றி சொல்லணும். இந்தப் படத்தில் என் ஃப்ரெண்ட்ஸ் சச்சிதானந்தம், சிவநேசன், லோகஷ்யாம், சரவணன், செளமித்ரா ஆகியோரோடு நானும் நடிச்சு இருக்கேன்'' என்கிறார்.

சூரியநாராயணனின் தந்தை சீனுவாசன், ‘‘குழந்தைகளின் ஆர்வத்தையும் திறமையையும் தெரிஞ்சுக்கிட்டு, அதில் அவர்களை உயர்த்துவதுதான் பெற்றோரின் கடமை. அப்படித்தான் இவனோட ஆர்வத்தைத்  தூண்டிவிட்டோம். என் நண்பர்களும் இதற்கு உதவியா இருந்தாங்க'' என்கிறார்.

‘‘ ‘நம் தனித்திறமையை வெளிப்படுத்தும் எந்த விஷயமாக இருந்தாலும், அதில் சமூக அக்கறையும் இருக்கிற மாதிரி பார்த்துக்கணும். அப்போதான் நம் திறமைக்கு முழு நிறைவு கிடைக்கும்'னு என் அப்பா சொல்வார். வருங்காலத்தில் சினிமா  இயக்குநர் ஆகணும்கிறது என் லட்சியம். நான் எடுக்கும் படங்களில், சமுதாயத்தில் கஷ்டப்படுறவங்க குரலை வெளிப்படுத்துவேன்'' எனப் பெரிய மனுஷன் போல பேசிப் புன்னகைக்கிறார் சூரியநாராயணன்.

‘விவசாயி' குறும்படத்தை https://youtu.be/uJX0HsinQ1Q இணைப்பில் காணலாம்.   

- க.பூபாலன்  படங்கள்: எஸ்.தேவராஜன்

விவசாயிகளை வணங்குவோம்!


                              

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism