உடைத்த தீக்குச்சியை மந்திரம் போட்டு முழுசா மாத்திக் காட்டுறேன். பார்க்கிறீங்களா?'' என உங்கள் நண்பர்களுக்கு சவால்விட்டு, ஓர் அசத்தல் மேஜிக் செய்யத் தயாரா?

உடைத்தும் முழுமையாகும் தீக்குச்சி!

நான்காக மடிக்கப்பட்ட கர்ச்சீஃப்பை விரித்து, நண்பர்களிடம் காட்டுங்கள்.

அதை மேஜை மீது விரித்துவைத்து, இரண்டு நண்பர்களை அருகில் அழையுங்கள். தீப்பெட்டியில் இருந்து ஒரு தீக்குச்சியை எடுத்து, கர்ச்சீஃப்பின் மையத்தில் வைக்கச் சொல்லுங்கள்.

‘‘இந்தத் தீக்குச்சியை கர்ச்சீஃப்பால் மூடப்போறேன். நல்லாப் பார்த்துக்கங்க. என் கையில் வேற தீக்குச்சி இல்லை'' எனச் சொல்லி, உங்களின் இரண்டு கைகளையும் விரித்துக் காட்டுங்கள்.

பிறகு, ஒரு கையால் கர்ச்சீஃப்பில் இருக்கும் தீக்குச்சியைப் பிடித்துக்கொண்டு, இன்னொரு கையால் மூடுங்கள். கர்ச்சீஃப் மூடிய குவிந்த விரல்களோடு நண்பர்களிடம் திரும்புங்கள். ‘‘கர்ச்சீஃப்பின் உள்ளே, தீக்குச்சி இருக்கானு தொட்டுப்பாருங்க'' எனச் சொல்லுங்கள்.

அவர்கள் தொட்டுப்பார்த்து, இருப்பதாகச் சொல்வார்கள். ‘‘சரி, அந்தக் குச்சியை உடையுங்க'' எனச் சொல்லுங்கள். துணிக்குள் இருக்கும் குச்சியை உடைப்பார்கள்.

‘‘உடைச்சதை ஃபீல் பண்ணீங்கதானே, இப்போ பாருங்க. மந்திரம் போட்டு குச்சியை முழுசாக்கறேன்'' எனச் சொல்லி, ‘‘ஜிங்கிலி பிங்கிலி புஸ்கா'' எனச் சொல்லுங்கள்.

கர்ச்சீஃப்பை மேஜை மீது விரித்துக் காட்டுங்கள். வாவ்... உடைந்த தீக்குச்சி முழுசாகவே இருக்கும்.

‘‘வேற குச்சியை மறைச்சுவெச்சிருந்து, மாத்திட்டதா டவுட் வரலாம். இன்னொரு முறை செய்வோம். ஒரு குச்சியில் பேனாவால் மார்க் பண்ணுங்க'' எனச் சொல்லுங்கள்.

See Also : மாயமில்லே... மந்திரமில்லே... 2

நண்பர்கள் தீக்குச்சியில் மார்க் செய்த பிறகு, மீண்டும் கர்ச்சீஃப்பால் மூடி, உடைக்கச் சொல்லுங்கள். விரித்துக் காட்டுங்கள். அட, மார்க் செய்த தீக்குச்சி முழுதாக இருக்கும்.

ரகசியம் இதுதான். கர்ச்சீஃப்பின் நான்கு முனைகளிலும் கொஞ்சம் மடித்துத் தையல் போட்டிருக்கும். ஏற்கெனவே, அதற்குள் ரகசியமாக இரண்டு தீக்குச்சிகளை நுழைத்து வையுங்கள். கர்ச்சீஃப்பை மடிக்கும்போது, முனையில் மறைந்து இருக்கும் குச்சியை உடைப்பதற்கு ஏற்ப கைக்குள் கொண்டுவர வேண்டும். நண்பர்கள் வைத்த குச்சியை நைசாக உள்ளங்கையில் வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

படங்கள்: ப.சரவணகுமார், மாடல்: ஷாபாஸ், ஹெலன் ஹெமல்டா ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் மே.நி.பள்ளி, ராயப்பேட்டை, சென்னை.

மந்திரவித்தைகளில் பின்பற்றப்படும் வகைகள்:

ஏதாவது ஒரு பொருளை உருவாக்குவது.

ஒரு பொருளை ஓர் இடத்தில் மறையவைத்து வேறு இடத்தில் தோன்றவைப்பது.

வேறு ஒன்றாக மாறிய பொருளை, பழையபடியே கொண்டுவருவது.

தரையில் இருக்கும் பொருளை மிதக்கச்செய்வது.

கதவுகள், சுவர்கள், பெட்டிகள் வழியாக ஊடுருவிச் செல்வது.

ஒருவர் நினைப்பதையும், அடுத்து என்ன நடக்கும் என்பதையும் முன்கூட்டியே சொல்வது.

ம(த)ந்திர டிப்ஸ்!

கர்ச்சீஃப்பை விரித்துக்காட்டும்போது, முனைக்குள் மறைந்திருக்கும் தீக்குச்சிகள், புடைத்துக்கொண்டு தெரிந்துவிடக் கூடாது. எனவே, இடைவெளி சரியாக இருக்கும்படி மடித்துத் தைக்கப்பட்ட கர்ச்சீஃப்பில் குச்சியை மறைக்கவும். கர்ச்சீஃப்பின் நிறமும் அடர்த்தியாக இருக்க வேண்டும்.

கையோடு சேர்ந்து கர்ச்சீஃப்பை மடிக்கும்போது, மறைத்து இருக்கும் குச்சிப் பகுதி வரும் வகையில், லாகவமாகவும் வேகமாகவும் மடிக்க வேண்டும். நண்பர்கள் வைத்த தீக்குச்சியை உள்ளங்கைக்குள் மறைத்துக்கொள்ளும்போதும், மீண்டும் கர்ச்சீஃப்புக்கு கொண்டு வரும்போதும் கவனமாக இருங்கள். பயிற்சி மிக முக்கியம். இல்லையென்றால், உங்கள் தந்திரம் அம்பலம் ஆகிவிடும்.