"நான் நினைச்சா ரிசர்வ் பேங்குக்கே கடன் கொடுப்பேன். வெள்ளைக் காகிதத்தைப் பணமா மாற்றுவேன். பார்க்கிறீங்களா?'' என நண்பர்களை வியப்பில் ஆழ்த்தும் கலக்கல் மேஜிக் செய்யலாம் வாங்க.

பிரெளன் நிற கவர் (Envelope cover) ஒன்றோடு மேஜை முன் நில்லுங்கள்.

கவரின் வாயை உங்கள் வாயால் ஊதித் திறந்து, கூட்டத்துக்குக் காண்பியுங்கள். பிறகு, கவருக்குள் நுழையும் அளவுக்கு செவ்வகமான ஒரு வெள்ளைக் காகிதத்தைக் காண்பித்துவிட்டு, கவருக்குள் நுழையுங்கள்.

கவரின் மீது மந்திரக்கோலால் மந்திரம் போடுவதுபோல செய்துவிட்டு, மேஜை மீது வையுங்கள்.

‘‘இப்போது, கவரில் போட்ட வெள்ளைக்காகிதம், ரூபாய் நோட்டாக மாறி இருக்கும் பாருங்க'' எனச் சொல்லி கவரை எடுத்து, விரல்களை நுழைத்து வெளியே எடுங்கள்.

வாவ்... கவரில் இருந்து ரூபாய் நோட்டு வெளியே வரும்.

ரகசியம் இதுதான். அரங்கத்துக்கு வரும் முன்பு, கவரின் உள்ளே அதே நிறத்தில் உள்ள செவ்வக காகிதத்தைச் செருகி, அதற்கு அடுத்து, ரூபாய் நோட்டை நுழைத்துவிட வேண்டும். வெள்ளைக் காகிதத்தை நுழைக்கும்போது, உள்ளே இருக்கும் காகிதத்துக்கு இந்தப் பக்கமாக நுழைக்க வேண்டும். எடுக்கும்போது, ரூபாய் நோட்டு இருக்கும் பக்கத்தில் எடுக்க வேண்டும். அவ்வளவுதான் மேஜிக்!

படங்கள்: ப.சரவணகுமார் மாடல்: ஷாருக்கேஷ், ஷமா

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் மே.நி.பள்ளி, ராயப்பேட்டை, சென்னை.

ம(த)ந்திர டிப்ஸ்!

கெட்டியான பிரெளன் நிற கவரையே வாங்கவும். அதுதான் உள்ளே மறைத்திருக்கும் நோட்டை காட்டாது.

கவரின் உள்ளே மறைத்து வைக்கும் காகிதம், சரியான அளவில் உள்ளே கச்சிதமாகப் பொருந்தும் வகையில் இருக்க வேண்டும். அதேபோல ரூபாய் நோட்டும் புதிதாக மடிப்புகள் அற்று இருக்க வேண்டும். இல்லையென்றால், நீங்கள் திறந்து காண்பிக்கும்போது வெளியே நழுவி, ரகசியம் வெளியாகிவிடும்.

மேஜிக் செய்யும்போது, கவரின் வாயை ஊதித் திறந்து காண்பிக்கும்போது, மிகவும் கவனமாக இருங்கள். ரூபாய் நோட்டு இல்லாத, வெள்ளைக் காகிதம் வைக்கப்போகும் பகுதியைத்தான் காண்பிக்க வேண்டும்.

வெள்ளைக் காகிதத்தை உள்ளே நுழைத்துவிட்டு மந்திரம் போடுவதுபோல செய்யும்போதும், மேஜை மீது வைத்து விட்டுத் திரும்ப எடுக்கும்போதும் பார்ப்பவர் கவனத்தைத் திருப்பும் வகையில் ஏதாவது நகைச்சுவையாகப் பேசுங்கள். வேகமாகச் செயல்படுங்கள். அப்போதுதான், நீங்கள் கவரின் மறுபக்கம் எடுப்பதைக் கவனிக்க மாட்டார்கள்.

ஹாரி ஹூடினி!

அமெரிக்காவைச் சேர்ந்த மிகவும் புகழ்பெற்ற மந்திரவித்தைக்காரர், ஹாரி ஹூடினி (Harry Houdini). இவரது இயற்பெயர் ‘எரிக் வெய்ஸ்'. இவருடைய காலத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய ‘ஹாரி கெல்லர்' (Harry Kellar) என்ற அமெரிக்க மந்திரவித்தைக்காரரையும், பிரான்ஸைச் சேர்ந்த ‘ழான் யூஜீன் ராபர்ட் ஹூடின்' (Jean Eugene Robert-Houdin) என்பவரையும் கௌரவிக்கும் விதமாகத் தனது பெயரை மாற்றிக்கொண்டார். சங்கிலிகள், கைவிலங்குகள், மரப்பெட்டி, தண்ணீர்த் தொட்டி ஆகியவற்றுக்குள் அடைக்கப்பட்டாலும் வெளியே வருவார் ஹூடினி. கை, கால்களைக் கட்டி, தலைகீழாகத் தொங்கவிட்டாலும் மீண்டுவிடுவார். சில முறை காவல் அதிகாரிகள் அவரைக் கயிறுகளால் கட்டிப்போட்டு சோதனை செய்தபோதும், வெளியே வந்திருக்கிறார்.

மேடைகளில் வித்தை செய்யும்போது, பார்வையாளர்களையும் கட்டப்பட்டதுபோல உணரச் செய்வது இவரது ஸ்பெஷல். ஒரு பெரிய தொட்டிக்குள் தண்ணீர் இருக்கும். கைகளில் விலங்கு பூட்டப்பட்டவாறு ஹூடினி அந்தத் தொட்டிக்குள் இறங்குவார். தொட்டி மூடப்பட்டு பூட்டப்படும். அதிலிருந்து சில நிமிடங்களில் வெளியே வருவார். இதைச் செய்யும்போது, பார்வையாளர்களையும் ‘மூச்சைப் பிடித்து உட்காருங்கள்' என்பார். மக்களும் அதேபோல அமர்ந்து, ஹூடினி எவ்வாறு மூச்சைக் கட்டுப்படுத்தினார் என்பதை உணர்வுப்பூர்வமாக யோசிப்பார்கள். இதனால், ஹூடினியைக் கொண்டாடினார்கள். அவரைப் பற்றிய புத்தகம் ஒன்றின் தலைப்பில், ‘அமெரிக்காவின் முதல் சூப்பர் ஹீரோ' எனப் புகழ்ந்தார்கள். வேறு துறைகளிலும் சாதனை புரிய வேண்டும் என நினைத்த ஹூடினி, விமானம் ஓட்டுவதிலும் தனது திறமையைக் காண்பித்தார்.

- சுப.தமிழினியன்