Published:Updated:

கனவு நாயகனை உருவாக்கினோம்!

கனவு நாயகனை உருவாக்கினோம்!

பிரீமியம் ஸ்டோரி
கனவு நாயகனை உருவாக்கினோம்!

'கனவு காணுங்கள்' என மாணவ மாணவிகளைச் சிந்திக்கத் தூண்டிய முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், ஜூலை 27-ம் தேதி பள்ளிகளில் நடைபெற்றது  சுட்டி க்ரியேஷன்ஸ் போட்டி.

‘‘சுட்டி விகடன் மூலம் அப்துல் கலாம் க்ரியேஷன்ஸ் போட்டி நடத்தப்போகிறோம்'' என்று சொன்னதும், பள்ளிகளில் இருந்து ஆரவார வரவேற்பு. எல்.கே.ஜி முதல் +2 வரை அனைத்து மாணவர்களுமே முன்வந்தனர்.

கனவு நாயகனை உருவாக்கினோம்!

புதுக்கோட்டை - மவுன்ட் சியான் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் மவுன்ட் சியான் இன்டர்நேஷனல் பள்ளி (CBSE),        கொண்டிக்குளம்-S.E.T வித்யாதேவி மெட்ரிகுலேஷன் பள்ளி, சேந்தமங்கலம் - விவேகா மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளிலும் 1,500 மாணவர்களைக் கலந்துகொள்ளவைத்தோம்.

கனவு நாயகனை உருவாக்கினோம்!

சில பெற்றோர்கள், ‘‘நாங்களும் வந்து போட்டியைப் பார்க்கணும்'' என ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்திருந்தார்கள். போட்டி நடந்த நாளில், அப்துல் கலாம் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, போட்டிக் களத்தில் இறங்கினார்கள். சுட்டிகளின் கரங்கள், குழந்தைகளின் நாயகனைப் பார்த்துப் பார்த்து உருவாக்கின. சில சுட்டிகள், ‘‘அய்யா, உங்க உருவத்தை பண்ணப்போறேன். ஃபர்ஸ்ட் ப்ரைஸ் வாங்க ஆசீர்வாதம் பண்ணுங்க'' என்றபடி ஆரம்பித்தார்கள்.

கனவு நாயகனை உருவாக்கினோம்!

போட்டி நேரம் முடிந்ததும், அந்தந்தப் பள்ளியின் ஆசிரியர்களே நடுவர்களாக இருந்து, சிறந்த மூன்று க்ரியேஷன்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அந்த மாணவர்களுக்கு  சுட்டி விகடன் சார்பாக, பரிசுகள் வழங்கப்பட்டன. பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழும், போட்டி நடத்திய பள்ளிகளுக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டன.

தங்கள் கனவு நாயகனை உருவாக்கிய ஆனந்தம், அனைவர் முகங்களிலும் சுடர்விட்டது.

- கே.ஆர்.ராஜமாணிக்கம், படங்கள்: கே.குணசீலன், க.சுகன், த.யோகேஷ்வரன்

பரிசுபெற்ற சுட்டிகள்!

அப்துல் கலாம் க்ரியேஷன்ஸ் போட்டியில் முதல் மூன்று பரிசு பெற்ற மாணவர்கள்...

என்.சரவணன்-(XI), பி.விமலா குமாரி-(XI), பி.செந்தில் ராஜா-(IX) மவுன்ட் சியான் மெட்ரிக் பள்ளி.
ஜெ.எஸ்.ரியா ஸ்ரீ -(IX), கே.சதீஷ்-(X), கே.கண்மணி-(X) மவுன்ட் சியான் CBSE பள்ளி.
ஏ.ரஸியா-(VI), ஏ.ராஜேஸ்வரி-(IV), ஜெ.லோகேஷ்வரன்-(IV) S.E.T வித்யாதேவி மெட்ரிக் பள்ளி.
கே.பவித்ரன்-(XI), பி.ஜீவராசன்-(V), ஆர்.வெற்றிவேல்-(III) விவேகா மெட்ரிகுலேஷன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு