Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

Published:Updated:
சுட்டி ஸ்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

டோனட் வடிவ கட்டடம்!

டோனட் வடிவ கட்டடம் (Donut Structure) சீனாவில் அமைந்துள்ளது. இது, உலகிலேயே மிகப் பெரிய டோனட் வடிவ கட்டடம். சீனாவின் Pearl நதியின் கரையோரத்தில் அமைந்துள்ள இதற்கு, ‘வான் உயர் கட்டடம்' என்று இன்னொரு பெயர் உள்ளது. இதன் உயரம் 138 மீட்டர். இந்தக் கட்டடத்தில் 33 தளங்கள் உள்ளன. இதன் தளங்களின் மொத்தப் பரப்பளவு 8,500 சதுரமீட்டர். சுற்றளவு 50 மீட்டர். இது, ‘ஸ்டார் வார்ஸ்' திரைப்படத்தில் வரும் விண் ஓடங்கள்போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுட்டி ஸ்டார் நியூஸ்

தக்காளி மரங்கள்!

சுட்டி ஸ்டார் நியூஸ்

கலப்பின விதைகளில் இருந்து உருவாக்கப்பட்டவை, ‘ஆக்டோபஸ் தக்காளி மரங்கள்'. சீனாவில் உருவாக்கப்பட்ட இந்த விதைகள், சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள டிஸ்னி வேர்ல்டுக்குக் கொண்டுவரப்பட்டு விதைக்கப்பட்டன. இந்தச் சாதனை, கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற இருக்கிறது. டிஸ்னி வேர்ல்டில் பசுமைக் குடில் அமைத்து, தக்காளி மரங்களைப் (Tomato trees) பார்ப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். தக்காளி, மரத்தில் காய்ப்பதே ஓர் ஆச்சர்யம். அதிலும் பல்லாயிரக்கணக்கில் காய்த்திருப்பதைப் பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

சுட்டி ஸ்டார் நியூஸ்

தண்ணீர் மேல் சொற்கள்!

சுட்டி ஸ்டார் நியூஸ்

தண்ணீரில் எழுதினால் நிற்காது. ஆனால், சொன்னால் நிற்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

நாம் பேசும் வார்த்தைகள், பிறர் மனதை மகிழ்விக்கவும் செய்யும்; புண்படுத்தவும் செய்யும். அதுபோல, ஒரு குவளைத் தண்ணீரிடம் கோபமாக ஒரு வார்த்தையைக் கூறினால், அது அந்தத் தண்ணீரைப் பாதிக்கும் எனச் சொல்லி நிரூபித்தும் இருக்கிறார், ஜப்பானின் யொகொஹாமா(Yokohama) நகரைச் சேர்ந்த, மஸாரு எமோடோ (Masaru Emoto).

இவர், தண்ணீரைச் சார்ந்த அறிவியல் ஆராய்ச்சிகள் பலவற்றை மேற்கொண்டவர்.  டோக்கியோவில் வசிக்கும் 2,000 மக்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை இரண்டு அணிகளாகப் பிரித்தார். முதல் அணியிடம் தண்ணீர்க் குவளைகளைக் கொடுத்து, நல்ல சொற்களைப் பேசும்படியும், இரண்டாவது அணியிடம் வேறு தண்ணீர்க் குவளைகளைக் கொடுத்து, தீய சொற்களைப் பேசும்படியும் கூறினார். நிகழ்ச்சி முடிந்ததும், இரண்டு அணிகளின் குவளைகளிலும் உள்ள தண்ணீர் படிமங்களாக்கப்பட்டு, நுண்ணோக்கி வழியே ஆராயப்பட்டது. முதல் அணியிடம் இருந்து பெறப்பட்ட தண்ணீரில், அழகிய உருவம்கொண்ட படிமங்களும், இரண்டாவது அணியிடம் இருந்து பெறப்பட்ட நீரில், படிமங்கள் சிதைந்தும் காணப்பட்டன. அவை, புகைப்படங்களும் எடுக்கப்பட்டன.

நம் எண்ணங்களிலும் சொற்களிலும் எப்போதும் நல்லவையே இருக்க வேண்டும் என்பதை இதன் மூலம் உணரலாம்.

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்