Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

Published:Updated:
சுட்டி ஸ்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

தெனாலி 2016

தெனாலிராமனும் மன்னன் கிருஷ்ணதேவராயரும் இப்போது இருந்தால்..?

மன்னர்: “தெனாலி, புது சட்டை சூப்பரா இருக்கே!''

தெனாலி: “நன்றி மன்னா, கொஞ்சம் பக்கத்தில் நின்றால், செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்ல போட்டுப்பேன். எத்தனை லைக்ஸ் வருதுனு பார்க்கலாம்.''

மன்னர்: “எனக்கும் ஆன்லைனில் ஒரு  வீர வாள் ஆர்டர் பண்ணணும்.''

தெனாலி: “மன்னா, பக்கத்து நாட்டுல 4G நெட்வொர்க் கிடைக்குதாம். ஆனா, இங்கே       3G-க்கே திணறுது.''

மன்னர்: “அவ்வளவுதானே... பக்கத்து நாட்டு மன்னன் என்னோட ஃபேஸ்புக் ஃப்ரெண்டுதான். இன்பாக்ஸ்ல சாட் பண்ணி, 4G-க்கு என்ன பண்றதுனு கேட்டுடறேன். யாரங்கே...?''

காவலாளி: “வந்தேன் மன்னா. இந்தாங்க லேப்டாப்.''

மன்னர்: “நமது காவலாளிகள்  புத்திசாலிகள். ‘மெயில் என்றால், வாட்ஸ்அப்'பாக வந்து நிற்பவர்கள்.''

தெனாலி: “இந்தச் சந்தோஷத்திலேயே, அரண்மனையில் wi-fi கனெக்‌ஷன் கொடுத்து, எங்க சம்பளத்தையும் அதிகமாக்கினால் நன்றாக இருக்கும் மன்னா!''

மன்னர்: “ஹா... ஹா... லைக் யூ... லைக் யூ.''

சுட்டி ஸ்டார் நியூஸ்



ஆழமான இடம்!

சுட்டி ஸ்டார் நியூஸ்

ரியானா அகழி (Mariana Trench) என்பது பசிஃபிக் கடலில் உள்ள ஒரு பகுதி. இங்குதான் உலகிலேயே மிக ஆழமான சேலஞ்சர் மடு (Challenger Deep) என்ற பள்ளம் உள்ளது. இதன் ஆழம், 10,902 மீட்டர். யாராலும் இந்த ஆழத்துக்குப் போக முடியாது என்ற கருத்தை, சவாலாக ஏற்று உடைத்தார்கள், கடல் ஆராய்ச்சி நிபுணரான ஜாக்பிக்கா மற்றும் அமெரிக்க கடற்படை அதிகாரி வால்ஷ். 1960-ம் ஆண்டில், Trieste என்னும் பெயர்கொண்ட நீர்மூழ்கு கலத்தின் மூலம் கடலின் ஆழத்துக்கு சென்றார்கள். கனத்த பிளாஸ்டிக் ஜன்னல் வழியே கடலடித் தரையை சிறிது நேரம் கண்டனர். ஆனால், காலடி பதிக்கவில்லை. காரணம், இந்த ஆழத்தில் தரையில் காலடி பதிக்க முடியாது.

சுட்டி ஸ்டார் நியூஸ்



ரிங் போன்!

சுட்டி ஸ்டார் நியூஸ்

னி செல்போனையும் மோதிரம் போல விரலில் மாட்டிக்கொள்ளலாம். ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த மோதிரம், டச் ஸ்க்ரீன் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. புகைப்படம் எடுப்பது, குறுஞ்செய்தி அனுப்புவது என பல ‘ஆப்'களை இதில் இயக்கலாம். ஆப்பிள் கடிகாரம் போன்று இதனையும் ஆப்பிள் செல்போனுடன் இணைத்துக்கொள்ளலாம் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுட்டி ஸ்டார் நியூஸ்