ஷட்டில், டென்னிஸ், ஸ்கேட்டிங், ஃபுட்பால் போன்ற விளையாட்டுகளிலேயே நகரத்துக் குழந்தைகள் ஆர்வம் காட்டுகிறார்கள். இவர்களுக்கு மத்தியில், நமது பாரம்பர்யத் தற்காப்புக் கலையும் கிராமத்து வீர விளையாட்டுமான சிலம்பத்தில் சீறிப்பாய்கிறர் ஓவியா.

சென்னை, கோபாலபுரத்தில் உள்ள டி.ஏ.வி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவி, ஓவியா. ஆசிய அளவிலான சிலம்பப் போட்டியில் சாம்பியன்ஷிப் வென்று திரும்பியவரை சந்தித்தேன்.

‘‘முதலில், பேட்மின்டனில்தான் சேர்ந்திருந்தேன். தினமும் கிளாஸுக்குப் போகும்போது, அருகில் இருந்த சிலம்பம் வகுப்பில், பாண்டியன் மாஸ்டர் சிலம்பம் கற்றுத் தருவதைப் பார்ப்பேன். எனக்கும் ஆர்வம் வந்துச்சு. அம்மா, அப்பாவிடம் சொன்னபோது, ‘உனக்கு எது பிடிக்குதோ அதைச் செய்’னு உற்சாகப்படுத்தினாங்க. அப்போது, மூன்றாம் வகுப்புப் படிச்சுட்டு இருந்தேன். ஆரம்பத்தில் சிலம்பப் பயிற்சி, கஷ்டமா இருந்துச்சு. ஆனாலும், ஆர்வமாகக் கற்றதால் சோர்வாக தெரியலை. சிலம்பம் தற்காப்புக் கலை மட்டுமல்ல, உடலை உறுதிசெய்யும் சிறந்த உடற்பயிற்சியும்கூட. இது, நம் தன்னம்பிக்கையை வளர்க்கும். மனதை ரிலாக்ஸ் செய்து, நினைவாற்றலை அதிகரிக்கும். சிலம்பம் கற்க ஆரம்பிச்சதில் இருந்து. பாடங்களையும் நன்கு உள்வாங்கி படிக்கிறேன்’’ என்கிற ஓவியா, சிலம்பப் போட்டிகளில் பெற்றுள்ள வெற்றிகளும் படைத்துள்ள சாதனைகளும் பல பல

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தஞ்சாவூரில் நடைபெற்ற 12-வது தேசிய சாம்பியன்ஷிப் சிலம்பப் போட்டியில், மினி-சப் ஜூனியர் பிரிவில் ஐந்து தங்கப் பதக்கங்கள் பெற்று, ஒட்டு

மொத்த சாம்பியன்ஷிப் வென்று அசத்தி இருக்கிறார். மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான போட்டியில் பங்கேற்ற அனுபவத்தைச் சொல்லும் ஓவியாவின் குரலிலும் கண்களிலும் பரவசம்.

‘‘இந்த ஆண்டு ஜனவரி மாதம் மலேசியாவில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய சாம்பியன்ஷிப் சிலம்பப் போட்டியில், இந்தியாவில் இருந்து 56 பேர் கலந்துகொண்டோம். அதில் 36 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில், 8 முதல் 10 வயதுக்கு உட்பட்ட மினி சப்ஜூனியர் பிரிவில் நான் கலந்துகொண்டேன். நெடுங்கம்பு வீச்சு, கம்பு சண்டை, வேல் கம்பு வீச்சு, மடுவு (மான் கம்பு), வாள் வீச்சுப் பிரிவுகளில் விளையாடி, 4 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கங்களோடு, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றேன்” என்று தன் பெரிய சாதனை பற்றிச் சொல்லும் இந்தக் குட்டிப் பெண், பரதமும் கற்றுவருகிறார்.

‘‘நன்றாகப் படித்து டாக்டர் ஆகி, ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்பதே என் லட்சியம். சிலம்பக் கலையையும் தொடர்வேன். அக்டோபர் மாதம் இந்தோனேசியாவில் நடக்கப்போகும் உலக அளவிலான சிலம்பப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும். இப்போ, என் கவனம் முழுக்க அதில்தான்’’ என்றபடி, சிலம்பத்தை காற்றில் சுழற்றுகிறார் ஓவியா.

- என்.மல்லிகார்ஜுனா, படங்கள்: மீ.நிவேதன்

அக்காவைப் பார்த்து தங்கையும்...

‘‘காலை, மாலையில் வீட்டு மொட்டை மாடியில் ஓவியா சிலம்பப் பயிற்சி செய்வாள். அதைப் பார்த்த ஓவியாவின் தங்கை இனியாவும், இப்போது சிலம்பப் பயிற்சியில் சேர்ந்திருக்கிறாள். முதல் வகுப்புப் படிக்கும் அவள், தன் சாம்பியன் அக்காவுடன் சேர்ந்து சிலம்பம் ஆடும் அழகை தினமும் ரசிக்கிறோம்” என்று பூரிக்கிறார், ஓவியாவின் அம்மா.

தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டான சிலம்பத்துக்கு இளம் ரத்தம் பாய்ச்சி வருகிறார், ‘ஆசான்’ பாண்டியன்.

‘‘ஓவியா மிகவும் சுறுசுறுப்பான பெண். எல்லா ‘மூவ்மென்ட்’களையும் சட்டெனப் பிடித்துக்கொள்வார். ஆசியப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற இலக்குக்காக கடுமையாக உழைத்த ஓவியா, அதை அடைந்திருக்கிறார். வரவிருக்கும் சர்வதேச சிலம்பப் போட்டியிலும் சாம்பியன்ஷிப் வெல்வதற்கு, முழு மூச்சோடு பயிற்சி செய்கிறார். நகரத்து குழந்தைகள் இதுபோன்ற பாரம்பர்ய விளையாட்டுக்கு வருவது, நம் கலாசாரத்துக்கு வலு சேர்க்கும். தமிழக அரசு, சிலம்பத்தை பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்க வேண்டும்’’ என்கிறார் பாண்டியன்.