Published:Updated:

கனவு ஆசிரியர்

கனவு ஆசிரியர்
பிரீமியம் ஸ்டோரி
கனவு ஆசிரியர்

கனவு ஆசிரியர்

கனவு ஆசிரியர்

கனவு ஆசிரியர்

Published:Updated:
கனவு ஆசிரியர்
பிரீமியம் ஸ்டோரி
கனவு ஆசிரியர்
கனவு ஆசிரியர்

"பிரேயர் ஆரம்பிச்சுடுவாங்க சீக்கிரம் வாங்கடா.  ஹெச்.எம் இன்னைக்கு என்ன கதை சொல்லப்போறாங்களோ'' என துள்ளல் நடையில் ஆவலோடு அந்தப் பள்ளிக்குள் நுழைகிறார்கள் மாணவர்கள்.

கடலூர் மாவட்டம், கம்மாபுரம் ஒன்றியம், கோ.ஆதனூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவர்கள்தான் அவர்கள். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர்,    சு.தமிழ்ச்செல்வி. தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். இந்தப் பள்ளிக்கு வந்து ஓராண்டுதான் ஆகிறது. செய்திருக்கும் மாற்றங்களோ ஏராளம். சுத்தமான கழிவறை, திரும்பிய பக்கம் எல்லாம் சுவர் ஓவியங்கள், ‘தும்பி வனம்,' ‘பட்டாம்பூச்சிகளின் பூந்தோட்டம்' என ஒவ்வொரு வகுப்புக்கும் அழகழகான பெயர்கள் என சுண்டி இழுக்கின்றன.

‘‘மாணவர்கள் நன்றாகப் படிக்க, ஆசிரியர் நன்றாகப் பாடம் நடத்தினால் மட்டும் போதாது; பள்ளியின் சூழலும் முக்கியம். நான் இங்கே வந்த புதிதில் பள்ளிக் கட்டடங்கள் மிகவும் சேதமாகி இருந்தன. கழிவறைக்கு கதவு இல்லை. நீர் எடுக்கும் மோட்டார் இருந்தது. ஆனால், டேங்க் இல்லை. இந்தச் சூழ்நிலையை மாற்றும் செயலில் இறங்கினேன்'' என்கிறார் தமிழ்ச்செல்வி.

தன்னார்வலர்கள் பலரிடம் உதவிகள் பெற்று, ஒவ்வொன்றாகச் சரி செய்திருக்கிறார். மழை பெய்தால் சகதியாக மாறிவிடும் பள்ளி மைதானத்தை பெரும் முயற்சி எடுத்து சீர்ப்படுத்தினார்.

‘‘முன்னாடி எல்லாம் கிரவுண்டுல விளையாடவே முடியாது. வீட்டுல இருந்து கிளம்பும்போதே,  ‘கிரவுண்டு பக்கம் போகாதே'னு சொல்லி அனுப்புவாங்க. இப்போ, எப்போடா கிரவுண்டுக்குப் போவோம்னு காத்திருக்கோம்'' என மகிழ்ச்சியோடு சொன்னார் ஒரு மாணவி.

‘‘அடுத்து, வகுப்பறைகளை வண்ணமயமாக மாற்றினோம். ஒவ்வொரு வகுப்புச் சுவரிலும் பாடம் தொடர்பான ஓவியங்களைத் தீட்டினோம். இதனால், அந்தப் பாடத்தை மாணவர்கள் புரிந்துகொண்டு படிக்கிறார்கள். இது, என் ஒருவரால் மட்டுமே நிகழ்ந்த மாற்றம் இல்லை. சக ஆசிரியர்களின் பங்களிப்பும் அர்ப்பணிப்பும் இதில் இருக்கிறது'' என்கிறார் தமிழ்ச்செல்வி.

இவர் இதற்கு முன்பு பணிபுரிந்த பி.கே. வீரட்டிக்குப்பம் பள்ளியிலும் இதேபோன்ற மாற்றங்களைச் செய்திருக்கிறார். ‘‘சாதாரண குடும்பத்தில் பிறந்தவள் நான். என்னுடைய இந்த உயர்வுக்கு இந்த ஆசிரியர் பணியே காரணம். அதற்கு நான் உண்மையாக இருக்க நினைக்கிறேன். இந்தப் பள்ளிக்கு விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட சில தேவைகள் இருக்கின்றன. அதற்கும் யாராவது உதவினால், பயனுள்ளதாக இருக்கும்'' என்கிறார் தமிழ்ச்செல்வி.

‘‘ஹெட் மாஸ்டர், ஹெட் மிஸ்னு சொன்னாலே எல்லோருக்கும் ஒரு பயம் இருக்குமில்லே. ஆனா, எங்களுக்கு கொஞ்சமும் பயம் இல்லே. ஏன்னா, ஃப்ரெண்ட் மாதிரி எங்ககிட்டே பேசுவாங்க. எங்களோடு சேர்ந்து சத்துணவு சாப்பிடுவாங்க; விளையாடுவாங்க; நிறைய கதைகள் சொல்வாங்க. எங்க எல்லோருக்கும் இன்னொரு அம்மா இவங்க'' என்ற மாணவர்களை அன்போடு அணைத்து, புன்னகைக்கிறார் தமிழ்ச்செல்வி.

- வி.எஸ்.சரவணன். படங்கள்: தே.சிலம்பரசன்.
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism