விளக்கு விளக்கம்

இப்போது, பெரும்பாலான இடங்களில் சிஎஃப்எல் எனப்படும் கம்பேக்ட் ஃப்ளோரேசன்ட் லேம்ப் (Compact Fluorescent Lamp) பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்த பல்பு தவறி விழுந்து உடைந்தால், பல்புக்குள் இருக்கும் மெர்க்குரி வெளியேறி ஆவியாகும். அதை சுவாசித்தாலோ, உடம்பில் பட்டாலோ ஆபத்து. தலைச்சுற்றல், மைக்ரேன் தலைவலி, தோல் பாதிப்புகள் போன்றவை ஏற்படலாம். எனவே, பல்பு உடைந்தால் உடனடியாக ஜன்னல்களைத் திறந்துவிட்டு, அறையில் இருந்து வெளியேறுங்கள். குறைந்தது 15 நிமிடங்கள் கழித்து உள்ளே வாருங்கள். சுத்தம்செய்து அகற்றும்போதும், பிற குப்பைகளோடு சேர்த்துப் போடாமல், தனியாக போடுங்கள்.

ஸ்ஸ்ஸ்ஸ்... தேனீ!

தேனீக்கள் பறக்கும்போது ஏற்படும் சத்தம், அதன் இறக்கையின் வேகமான அசைவினாலேயே உண்டாகிறது. ஒரு தேனீயானது, அதன் இறக்கையை விநாடிக்கு 200 முதல் 250 முறை முன்னும் பின்னுமாக அசைக்கிறது.

அழியும் ஆல்பட்ராஸ்!

ஆல்பட்ராஸ் (Albatross) என்பது, பசிஃபிக் பெருங்கடல் பகுதியில் காணப்படும் கடல் பறவை இனம். இதில், 20-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. வாத்து போன்ற கால்கள், நீண்ட சிறகுகள், கருமை கலந்த பால் வெண்மை நிறம் என மிக அழகாக இருக்கும். கடல் மீது மிக நீண்ட தூரம் பறக்கும்; கடல் நீரில் மிதந்தவாறு உறங்கும். லட்சக்கணக்கில் இருந்த இந்தப் பறவைகள், வழக்கம்போல மனிதர்களால் வேட்டையாடப்பட்டு அழிந்துவருகின்றன.

12 கோபுர ஹோட்டல்!

உலகின் மிகப்பெரிய ஹோட்டல், சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகரில் கட்டப்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலின் பெயர், அப்ராஜ் குடாய் (Abraj Kudai). சுமார் 1.4 மில்லியன் சதுரமீட்டர் பரப்பளவில் 12 கோபுர அமைப்பில் கட்டப்படுகிறது. ஒவ்வொரு கோபுரத்திலும் 44 மாடிகள். மொத்தம் 10,000 அறைகள் மற்றும் 70 உணவகங்கள் இருக்கும். 4 ஹெலிபேடுகளும் உண்டு. 2017-ம் ஆண்டின் ஆரம்பத்தில் பணிகள் முடியும் எனச் சொல்லப்படுகிறது. இந்த ஹோட்டல் பயன்பாட்டுக்கு வந்தால், மலேசியாவில் உள்ள கென்டிங் ஹைலேண்ட்ஸ் ரிசார்ட் (Genting Highlands resort) என்ற உலகின் மிகப்பெரிய ஹோட்டலை ஓவர்டேக் செய்து, முதல் இடத்துக்கு சென்றுவிடும்.