பார்க்காமல் சொல்லலாம் படங்களை!

சிம்பிளாக தெரிந்தாலும் பார்ப்பவர்கள் சட்டென லாஜிக்கை யோசிக்க முடியாதபடி, நமது பேச்சினால் திசை மாற்றும் தந்திரம், மேஜிக்கில் மிக முக்கியம். அப்படி ஒரு மேஜிக்கை இந்த முறை செய்யலாம் வாங்க!

ஒரு பத்திரிகையின் ஐந்து அல்லது ஆறு பிரதிகளை மேஜை மீது பரவலாக வையுங்கள்.

‘‘மேஜிக் மூலம் என்னோட கண்களை எக்ஸ்ரேவாக மாற்றி, நீங்க பார்க்கிற பக்கத்தை நானும் பார்ப்பேன். டெஸ்ட் பண்ணலாம் வாங்க’’ எனச் சொல்லி ஒருவரை வரவையுங்கள்.

‘‘இங்கே இருக்கும் புத்தகங்களில் ஒன்றை நீங்க எடுத்துக்கங்க. ஒன்றை எனக்குக் கொடுங்க’’ என ஒரு புத்தகத்தை வாங்கிக்கொள்ளுங்கள்.

‘‘உங்ககிட்டே இருக்கிற புத்தகத்தில் ஏதாவது ஒரு பக்கத்தைப் புரட்டி, ஒரு படத்தை மனசுல நினைச்சுக்கங்க. பக்கம் எண்ணை மட்டும் சொல்லிட்டு, எனக்குத் தெரியாமல் மத்தவங்களுக்குக் காட்டுங்க'' எனச் சொல்லுங்கள்.

நண்பர் பக்கம் எண்ணைச் சொல்வார். மற்றவர்களுக்குக் காண்பித்துவிட்டு உங்கள் அருகில் வந்ததும், ‘‘புத்தகத்தை மேஜை மேலே வெச்சுடுங்க. ‘‘நான் கேட்கிற கேள்விக்கு ‘ஆமாம்,’ ‘இல்லை’னு மட்டும் சொல்லுங்க. நீங்க பார்த்தது ஒரு பில்டிங்கா? ஒரு கார்ட்டூனா? ஸாரி... ஸாரி... அது ஒரு விலங்கு. சிங்கம், கரெக்ட்’’ எனச் சொல்லி திகைக்க செய்யுங்கள்.

இந்த மேஜிக்கின் ரகசியம் ரொம்ப சிம்பிள். நீங்கள் மேஜையின் மீது வைத்த அத்தனை பத்திரிகையின் அட்டை மட்டுமே வேறு வேறு. உள்ளே இருப்பது, ஒரே இதழ்தான். நண்பர் பக்க எண்ணைச் சொல்லிவிட்டு, மற்றவர்களிடம் காண்பிக்கும் நேரத்தில், உங்கள் கையில் இருக்கும் புத்தகத்தை மெதுவாகப் புரட்டி பார்த்துவிடுங்கள். அவ்வளவுதான்... அந்தப் பக்கத்தில் இருக்கும் படங்கள் தெரிந்துவிடும்.

படங்கள்: மீ.நிவேதன், மாடல்: பி.யாழ் அரசி, பூவராகவன், சென்னை மேல்நிலைப் பள்ளி, மடுவங்கரை, கிண்டி, சென்னை.

ம(த)ந்திர டிப்ஸ்...

ஒரே இதழின் ஐந்து பிரதிகளை வாங்கி, அதற்கு முந்தைய வெவ்வேறு பழைய இதழ்களின் அட்டைகளை மாற்றிவிடுங்கள். நண்பர்கள் யாரும் அவற்றை எடுத்துப் புரட்டி பார்த்துவிடாமல் உஷாராக இருப்பது முக்கியம்.

மேஜிக் ஆரம்பித்ததும், அவர்கள் லாஜிக் பற்றி யோசிக்காத வகையில், பேசிக்கொண்டே புத்தகத்தை மாற்றி மாற்றி வையுங்கள்.

நண்பர் பக்க எண்ணைச் சொல்லிவிட்டு மற்றவர்களிடம் காண்பிக்கும்போது, நீங்கள் ஜோக் அடித்துக்கொண்டே இயல்பாக உங்கள் கையில் இருக்கும் புத்தகத்தைப் புரட்டி, சில நொடிகளில் பார்த்துவிட்டு மூடிவிடுங்கள்.

எடுத்த உடனே சரியான படத்தின் பெயரைச் சொல்லாமல், இரண்டு மூன்று சாய்ஸ் சொல்லுங்கள். அவர்களின் முகத்துக்கு அருகே கைகளை அசைத்து, மந்திரம் போடுவது போல செய்து, மனதில் இருந்து விஷயத்தை எடுப்பது போல நடித்து, பிறகு சொல்லுங்கள்.