Published:Updated:

‘‘பேருதான் ஜூனியர்ஸ் பேச்சும் நடிப்பும் ஜீனியஸ்!’’

 ‘‘பேருதான் ஜூனியர்ஸ் பேச்சும் நடிப்பும் ஜீனியஸ்!’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘பேருதான் ஜூனியர்ஸ் பேச்சும் நடிப்பும் ஜீனியஸ்!’’

‘‘பேருதான் ஜூனியர்ஸ் பேச்சும் நடிப்பும் ஜீனியஸ்!’’

‘‘பேருதான் ஜூனியர்ஸ் பேச்சும் நடிப்பும் ஜீனியஸ்!’’

‘‘பேருதான் ஜூனியர்ஸ் பேச்சும் நடிப்பும் ஜீனியஸ்!’’

Published:Updated:
 ‘‘பேருதான் ஜூனியர்ஸ் பேச்சும் நடிப்பும் ஜீனியஸ்!’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘பேருதான் ஜூனியர்ஸ் பேச்சும் நடிப்பும் ஜீனியஸ்!’’
 ‘‘பேருதான் ஜூனியர்ஸ் பேச்சும் நடிப்பும் ஜீனியஸ்!’’

‘‘முன்னாடி எல்லாம் என்னை பக்கத்து வீட்டுக்கே தெரியாது. இப்போ, பக்கத்து ஊருக்குப் போனாலும், ‘நீதானே ஜூனியர் சூப்பர் ஸ்டாரில்  நீலாம்பரியா நடிச்சது’, ‘வயசான பாட்டியா நடிச்சது’னு கேட்குறாங்க. ஸ்கூலிலும் நீலாம்பரின்னு கூப்பிடறாங்க. அட்டனென்ஸ்ல பேர் மாறாததுதான் பாக்கி’’ எனச் சிரிக்கும் அக்‌ஷயா படிப்பது நான்காம் வகுப்பு.

ஜீ தமிழ் சேனலின் ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்’ நிகழ்ச்சியில் பின்னியெடுக்கும் நடிப்பு ஜீனியஸ்களை, ஆன் தி ஸ்பாட்டில் பிடித்தோம்.

`டார்லிங்’ படத்தில் பேயாக மிரட்டும் அதிதி, வண்ணத்துப்பூச்சி போல மயக்கும் லிஷா என அத்தனை பேரும் அன்றைய கெட்டப்பில் அதிரடிக்க தயாராக இருந்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆடிஷனுக்கு வந்த 4,000 பேருடன் போட்டியிட்டு ஜெயித்த 20 பேர் என்றால் சும்மாவா? சுட்டிகளின் நடனத்திறனையும், இசைத்திறனையும் வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் தமிழில் பல உண்டு. மொத்த நடிப்புத்திறனையும் வெளிக்காட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிக்கு ஏக வரவேற்பு.

 ‘‘பேருதான் ஜூனியர்ஸ் பேச்சும் நடிப்பும் ஜீனியஸ்!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ ‘கில்லி’ படத்தின் திரிஷாவாக, வேலைக்காரி யாக, நிலாவுல வடை சுடுற ஆயாவாக, முதியோர் இல்லத்தில் கஷ்டப்படும் பாட்டியாக என எந்த வேஷமா இருந்தாலும் ஒருமுறை ரிகர்சல் பார்த்தால் போதும்’’ என்கிற அக்‌ஷயா, சன் டி.வி-யின் `குட்டிச் சுட்டி,’ `சண்டே கலாட்டா’ நிகழ்ச்சிகளிலும் கலக்கியவர்.

அக்‌ஷயா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, கூட்டத்தில் தடாலடியாக நுழைந்தது அந்த வெள்ளை உருவம். நாம்தான் அலறினோம்.மத்தவங்க கொஞ்சம்கூட அசையவில்லையே!

‘‘வந்துட்டாங்கப்பா ஆஸ்கர் நாயகி. பேசும்மா ஜெகன் மோகினி’’ என்று கலாய்த்தார்கள்.

ஜெகன்மோகினி வேடத்தில் இருந்த திருக்குறளி, சவுரி முடியால் மூடிய, கண்களை உருட்டிப் பேசினார். ‘‘என் ஊர் காஞ்சிபுரம். தேர்டு ஸ்டாண்டர்ட் படிக்கிறேன். மூணு விளம்பரப் படங்கள் பண்ணியிருக்கேன். ரன்னிங், கிளாசிக்கல் டான்ஸ், பாட்டு, டிராயிங்னு எதையும் விடுறது இல்லை. ‘உனக்கு பாடி லாங்வேஜ் நல்லா வருது’னு அச்சும்மா (அர்ச்சனா) பாராட்டினது செம ஹேப்பி. ஜூனியர் சூப்பர் ஸ்டார் டைட்டிலை வின் பண்ணிருவேன் பாருங்க’’ என்கிறார் இந்த க்யூட் ஜெகன் மோகினி.

கான்ஸ்டபிள் காயத்ரி, மாமியார், அவ்வை சண்முகி, நீதிபதி, பாட்டி என கலந்து கட்டி அடித்த திருக்குறளிக்கு தெருவுக்கு தெரு ஃபேன்ஸ்!

உதட்டில் லிப்ஸ்டிக், டவுசர், தோளில் துண்டு என ராமராஜனையே உரித்துவைத்தது போல வந்து நின்ற கிருஷாந்துக்கு சொந்த ஊர் கரூர். “போன முறை கரகாட்டக்காரன் வேஷம் போட்டேன். இந்த முறை எங்க ஊரு பாட்டுக்காரன். உள்ளே மாடு ரெடியாகுது. ஐ யம் வெயிட்டிங்’’ என்று குறும்போடு கை காட்ட, அங்கே ஒரு இளைஞருக்கு மாடு முகமூடி மாட்டிக்கொண்டிருந்தார்கள்.

தஞ்சாவூரில் இருந்து வந்திருக்கும் வனேஷா, “சரோஜாதேவி, ராணுவ வீரரின் மனைவி, கண்ணகி கேரக்டர்களைப் பண்ணியிருக்கேன். நானும் கிரிஷாந்தும்தான் `கரகாட்டக்காரன்’ ஸ்கிரிப்ட் செஞ்சோம். ஒரு பாட்டுல இந்தக் குட்டிப் பயலை அப்படியே தூக்கிச் சுத்திட்டேன். எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சாங்க. இப்போ, டி.ராஜேந்தரின் தங்கச்சி வேஷம் போடறேன். தேவச்சரணை நினைச்சாதான் பயமா இருக்கு’’ என்று பொய்யாக மிரள்கிறார்.

 ‘‘பேருதான் ஜூனியர்ஸ் பேச்சும் நடிப்பும் ஜீனியஸ்!’’

டி.ராஜேந்தர் கெட்டப்பில் டான்ஸ் ஆடியவாறு வந்த தேவச்சரண், ‘‘என் அருமை தங்கச்சி, நான் எப்பவும் உன் கட்சி, இனிமே நம்ம ஆட்சி’’ என்று எடுத்துவிட, ‘‘அய்யய்யோ... இதுக்குத்தான் பயந்தேன்’’ என்று ஓடுகிறார் வனேஷா.

மிமிக்ரி, டான்ஸ், பைட் என எல்லா ஏரியாக்களிலும் இந்த சார் எக்ஸ்பர்ட். ‘சன் சிங்கர்’ நிகழ்ச்சியால்  கவனம் பெற்றவர். நிறைய டி.வி ஷோக்களில்  வருவதால், ரெகுலர் பள்ளியில் இருந்து விலகி, திறந்தநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறார்.

ஏழாம் வகுப்பு படிக்கும் பவித்ரா, 6 வருடங்கள் பரதநாட்டியம் பயின்றவர். ஸ்கூலில் டிராமா, பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி எது நடந்தாலும் மேடம்தான் நம்பர் ஒன். “ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி பத்திச் சொன்னதோடு, அவசியம் நீ கலந்துக்கணும்ன்னு என்னை உற்சாகப்படுத்தி அனுப்பினதே என்னோட பிரின்ஸிபால்தான். என் டீச்சர்ஸும் நிறைய ஹெல்ப் பண்ணுவாங்க. வெளிநாட்டுல வாழும் இந்தியர் கேரக்டர் பண்ணினேன். ஸ்டாண்டிங் ஒவேஷன் கொடுத்தாங்க. அந்த 7 நாட்கள் அம்பிகா கேரக்டர் செஞ்சதும், ‘அம்பிகா சேச்சியைப் பார்த்த மாதிரியே இருக்கு’னு  குஷ்பு மேம் பாராட்டினாங்க’’ என்று பெருமிதத்தோடு சொல்கிறார் பவித்ரா.

பாலக்காடு மாதவனாக நடித்து பாக்யராஜ் சாரை நெகிழவைத்த ரக்‌ஷித் படிப்பது மூன்றாம் வகுப்புதான்.  `காஞ்சனா,’ ‘சின்னத் தம்பி’ ராதாரவி, `திருவிளையாடல்’ சொக்கன், `கரகாட்டக்காரன்’ சண்முகசுந்தரம், பீமன் என ரக்‌ஷித் போட்ட அத்தனை கேரக்டர்களும் செம ஹிட்! கலைஞர் டி.வி-யின் ‘ஓடி விளையாடு பாப்பா’ நிகழ்ச்சியும் நல்ல வெளிச்சம் கொடுத்திருக்கிறது.

தேவதாஸாக மாறி இருந்த அஷ்வந்த், அந்த செட்டில் எல்லோரின் செல்லம். இவர் படிப்பது யு.கே.ஜி என்றால் நம்பமுடியவில்லை. நறுக் நறுக் என பதில் வருகிறது. ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்’ முதல் எபிசோடில், அஷ்வந்த் நடிப்பில் அசத்த, குஷ்பு ஆன்ட்டி முத்தம் கொடுத்தார். உடனடியாக கன்னத்தைத் துடைத்துக்கொண்டு, ‘‘எனக்கு லிப்ஸ்டிக் பிடிக்காது’’ என்று கலகலப்பில் அதிரவைத்தவர்.

 ‘‘பேருதான் ஜூனியர்ஸ் பேச்சும் நடிப்பும் ஜீனியஸ்!’’

“வீட்டுல நிறைய சினிமா பார்ப்பேன். எனக்கு ‘சிங்கம்’ படம் ரொம்பப் பிடிக்கும். பெரியவன் ஆனதும், சிங்கம் மாதிரி போலீஸ் ஆபீஸர் ஆவேன்’’ என்று தேவதாஸ் மீசையை முறுக்குகிறர்.

ஜூனியர்ஸ் சுட்டி ஸ்டார்ஸ் நிகழ்ச்சியின் இயக்குநர் பிரவீண், “குழந்தைகளை வைத்து முழுக்க முழுக்க நடிப்பு என்பது தமிழில் புதிய முயற்சி. குழந்தைகளைப் பாடவைக்கிறதும் டான்ஸ் ஆடவைக்கிறதும் ஈஸி. நடிக்கவைக்கிறது பெரிய சவால்னு நினைச்சேன். ஆனா, இதெல்லாம் எங்களுக்கு ஐஸ்க்ரீம் கேக் சாப்பிடற மாதிரினு நிரூபிச்சுட்டாங்க. இது மாதிரி நிகழ்ச்சியில் சினிமா மாதிரி கட்ஷாட் கிடையாது. ஒரே டேக்தான். திரைப்பட்டறை என்ற அமைப்பு கொடுத்த நடிப்பு பயிற்சியை, `கப்’புனு பிடிச்சுக்கிட்டாங்க. வெறும் சினிமா, சிரிப்பு என இல்லாமல் சமூகப் பிரச்னைகளையும் ஸ்கிரிப்ட் பண்றோம்’’ என்கிறார்.

 ‘‘பேருதான் ஜூனியர்ஸ் பேச்சும் நடிப்பும் ஜீனியஸ்!’’

‘‘எங்களுக்கு இது பத்தாது அங்கிள். இன்னும் நிறைய கொடுங்க. ரசிகர்களுக்கு வெரைட்டி விருந்து கொடுத்து திணறவைக்கணும்” என துள்ளுகிறார்கள் ஜீனியஸ் ஸ்டார்ஸ்.

- வெ.நீலகண்டன், படங்கள்: மீ.நிவேதன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism